Showing posts with label ஐபோன். Show all posts
Showing posts with label ஐபோன். Show all posts

8 May 2009

அழகர் திருவிழாவும் அழகிரி தேர்தல் திருவிழாவும்

|7 comments
தலைப்பை பார்த்துட்டு இது அரசியல் பதிவுன்னு நினைச்சா தயவு செய்து நீங்கள் படிக்க வேண்டாம். எங்க ஊர்ல அழகர் திருவிழாவும் அழகிரி தேர்தல் திருவிழாவும் கலை கட்டிக்கிட்டுருக்கு. அதனால என் பதிவிற்க்கு ஒரு இரண்டு நாள் விடுமுறை அழிக்கலாம்ன்னு நினைத்தேன். (இங்க பார்ரா..) இருந்தாலும் ஒருவாரமா தொடர்ந்து பதிவு எழுதிட்டு திடீர்ன்னு இப்படி செஞ்சா நல்லா இருக்காதுன்னு அந்த அழகிரியே தப்பு தப்பு அந்த அழகரே கனவுல வந்து சொன்னார். அதனால ஒரு ஒப்பேத்தல் பதிவு தான் இது.


நீங்கள் Iphone வாங்கலாம்ன்னு யோசிக்கிறீங்களா. அப்ப கண்டிப்பா கீழ் உள்ள நகர் படத்தை பார்த்துட்டு போங்க.



ஆனால் இந்தமாதிரி கைபேசி சாத்தியமா இல்லையான்னு தெரியல ஆனா வந்தா நல்லா இருக்கும்ன்னு தோனுது.

30 July 2008

கைபேசியில் உங்கள் வளைத்தளம்...

|0 comments
உலகம் போகும் வேகத்திற்க்கு நாமும் மாறித்தான் ஆக வேண்டும். அதனால் தான் எனது வலைப்பக்கத்தை இனி உங்கள் ஐபோனிலும் படிக்கலாம். எனது கைப்பேசி வளைப்பதிவின் முகவரி http://kricons.mofuse.mobi. துரதிஷ்டவசமாக S40 ஜாவா மற்றும் S60 சிம்பையன் தொழிநுட்பம் பயன் படுத்தப்பட்ட கைப்பேசிகளில் எந்த யுனிகோட் எழுத்துக்களும் தெரிவதில்லை. வெறும் சிரு சிரு கட்டங்களாக தெரியும். அனால் ஐ-போன் மற்றும் Windows கைப்பேசியில் எனது பதிவை அழகாக படிக்கலாம். Windows கைபேசியை பயன்படுத்துபவர்கள் தமிழ் யுனிகோட் எழுத்து தெரிய இந்த பக்கத்தில் செல்லலாம்.


சரி நீங்கள் பிளாக்யை கைப்பேசி பதிவை செய்துவிட்டீர்கள்!!!. நான் எப்படி செய்வது என்று கேட்பது புரிகிறது. இதோ வழி.
இந்த தளத்திற்க்கு செல்லுங்கள். உங்களுக்கான ஒரு கணக்கை துவங்க்குங்கள். உங்கள் கைப்பேசி தளத்திற்க்கான் பெயரை தேர்ந்தெடுங்கள். உங்கள் வளைத்தளத்தின் RSS முகவரியை டைப்பிடுங்கள். அவ்வளவு தான் உங்கள் பிளாகிற்க்கான் கைபேசி வளைத்தளம் ரெடி. நிங்கள் USAவில் இருந்தால் கைப்பேசியில் SMS மூலமாக உங்களுக்கு கைப்பேசி வளைத்தளதிற்க்கான் Linkயை அனுப்புகிறார்கள். வரைவில் அனைத்து நாடுகளிலும் எதிர்பார்க்கலாம்.

18 July 2008

கைப்பேசி மீது காதல் கொண்டவர்கள் பார்க்கக்கூடாதது

|0 comments
நீங்கள் உங்கள் கைப்பேசியை மீது அதிக அக்கறை வைத்துக்கொள்ள முடியவில்லையா??? இதோ உங்களுக்காகத்தான் இந்த நகர் படம்.