Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

1 July 2013

கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free

|2 comments
இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்கள் ஆகி விட்டது. (அது தான் வந்துட்டேல்ல அது என்ன விட்டது.... விட்டது... மேட்டருக்க வாப்பா). இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் அனேகமாக பல பேரிடம் ஸ்மார்ட் போன் அதிலும் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை உங்களுக்கு கொடுக்கிறேன். 

நம்ம இந்தியாவில் ஏறத்தால அனைத்து வீட்டுகணினிகளும் வின்டோஸில் இயங்கும் மென்பொருட்களை யாரும் பணம் கொடுத்து வாங்குவதாக தெரியவில்லை (என்னது பணமா?!). எல்லாமே மென்பொருட்களையும் பணம்கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றால் இந்த அளவிற்க்கு கணினி விற்பனை ஆகியிருக்காது என்று தான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட எல்லா மென்பொருட்களுக்கும் இலவசமாக நம் கணினியில் இயங்க நம்மாள் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்து வைத்துள்ளான். அதன் பெயர் தான் CRACK அல்லது KEYGEN.அதை பற்றி எல்லாம் சொல்லவேண்டும் என்றால் அதை எல்லாம் தட்டச்சு செய்ய நேரம் கிடையாது. சுருக்கமாக ஒரு மென்பொருளை கணினியில் நிறுவி அதை ஆக்டிவேட் செய்யவேண்டும். அதை ஆக்டிவேட் செய்ய மென்பொருள் தயாரித்த நிறுவணத்திற்க்கு கட்டணம் செலுத்திய உடன் அவர்கள் தரும் ரகசிய எண் தருவார்கள். அதை கொண்டு அந்த மென்பொருளை நாம் உபயோகிக்க முடியும். சரி சரி இதல்லாம் எங்களுக்கு தெரியும் மேட்டருக்க வாப்பா என்பது என்காதில் விழுகிறது.

கணினியில் உள்ளது போல நம்  ஆண்ட்ராய்டு போனிலும் ஏதாவது இருந்தால் நான்றாக இருக்குமே என்று தோன்றி Googleல் தேடினேன். (Googleக்கு எதிராக Googleலேயே தேடுவதா!!!) அதன் விளைவாகதான் இந்த பதிவு.

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் Play Storeல் சென்று 4Shared என்று தேடி அந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவவும். உங்களுக்கு 4Sharedல் கணக்கு இருந்தால் அதையே உபயோகிக்கலாம் அல்லது ஒரு புதிய கணக்கை துவங்கவும். அவ்வளவு தான் உங்கள் வேலை இனி உங்களுக்கு வேண்டிய கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இந்த 4Sharedல் தேடவும். நிச்சயம் உங்களுக்கு வேண்டிய மென்பொருள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். 

உதாரணமாக 4Shared Pro என்ற மென்பொருளை ரூ.99 கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் நான் சொன்ன படி தேடி பதிவிறக்கினால் இலவசம். 

இதே போல Rs.953.00 மதிப்புள்ள Next Launcher 3D என்ற மென்பொருளும் இலவசமாக பெறலாம். (வச்சான்டா ஆப்பு)




4 May 2009

மிகப் பெரிய கோப்புகளை மின் அஞ்சல் அனுப்ப

|13 comments
இன்றைய உலகில் மின் அஞ்சல் இல்லாத ஒரு வாழ்க்கையை யோசித்துபார்கவே பயமாக உள்ளது. (மின் அஞ்சல் இல்லாமல் ஒரு நாள் அல்லது கணினி இல்லாமல் ஒரு நாள் என்று யாரவது ஒரு பதிவு போடலாம்). இந்த மின் அஞ்சல் அனைத்தும் இலவச சேவை என்பது சிறப்பு. (மின் அஞ்சல் அனைத்தும் கட்டணமானால் இன்னொரு பதிவும் போடலாம்).


இப்படி இலவச சேவை அளிக்கும் மின் அஞ்சல் தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. முதலில் ஒரு குறிப்பிட்ட இடங்களை மட்டுமே இலவச மின் அஞ்சல் உபயோகிப்பாளர்காளுக்கு கொடுத்தார்கள். இப்போது எந்த மின் அஞ்சல் தளத்தை எடுத்தாளும் Unlimited இடத்தை கொடுக்கிறார்கள். இப்படி Unlimited இடத்தை கொடுக்கும் அவர்கள் 10MB அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும்.

அப்படி மிகப்பெரிய கோப்புகளை அனுப்ப சிலர் megaupload மற்றும் rapidshare போன்ற தளங்களை பயபடுத்துவார்கள் ஆனால் இது இவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லையாம். அதானால் இவர்கள் அறிமுகப்படுத்தியது தான் Filemail.com

இதன் சிறப்பு அம்ஸம் என்ன வென்றால், இதில் நீங்கள் Register செய்ய வேண்டியதில்லை. இதில் மூன்று வகையான சேவைகளை நமக்கு அளிக்கிறார்கள். இலவச சேவை இதில் நீங்கள் 2GB அளவுள்ள கோப்புகளை அனுப்பலாம். ஆனால் இதில் அதிகபட்சம் அந்த கோப்பு 3நாட்களுக்கு மட்டுமே Downlaod லிங்க் வேலை செய்யும் என்பது ஒரு கவலையான விஷயம்.

பிரிமியம் சேவை மற்றும் கார்பரேட் சேவை அளிக்கிரார்கள். நமக்கு இலவசமே போதும் என்கிறவர்கள்தான் இந்தியாவில் அதிகம் என நினைக்கிறேன். இருந்தாலும் கட்டண சேவையான பிரிமியம் சேவயை பற்றி தெரிந்து கொள்ள இங்கும் கார்பரேட் சேவை பற்றி தெரிந்து கொள்ள இங்கும் செல்லலாம். நீங்கள் இந்த பக்கதிற்க்கு செல்வதால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை.

Go to Filemail


28 April 2009

Gtalkல் ஒளிந்துகொள்ள

|5 comments
ஏற்கனவே Yahooவில் ஒளிந்துள்ளவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு பதிவில் பார்த்தோம். இப்போது Gtalkல் எப்படி ஒளிந்துகொள்வது என்று பார்ப்போம். Gmailல் தான் Invisible Mode உள்ளது. அதுவும் சமீபத்தில்தான் அதையும் கொண்டுவந்தார்கள். இன்னும் Gtalkல் அந்த வசதி கொண்டுவரவில்லை.

Gtalkல் invisible mode வசதியை பெற நீங்கள் GTalk Labs Edition பதிவிறக்க வேண்டும். அதை இங்கு பதிவிறக்கலாம். உங்கள் பழைய GTalk தனியாகவும் GTalk Labs Edition தனியாகவும் இருக்கும். GTalk Labs Editionல் Invisible mode மட்டும் தான் உள்ளது தவிற மற்றபடி உங்களுக்கு Gtalkல் கிடைக்கும் வசதிகளான Voice chat கிடைக்கவில்லை.



இந்த கவலையை போக்கவும் ஒரு மென் பொருள் உள்ளது. (அப்புறம் ஏண்டா அதை சொல்லை என்று நீங்கள் கேட்பது தெரிகிறது) அதில் நீங்கள் முழுவதும் ஒழிந்துகொள்ள முடியாது. என்ன புரியவில்லையா??? அதில் எப்போதுமே Idelயாக இருக்கலாம். அதை நீங்கள் GTalkலேயே பயன் படுத்தலாம். அந்த மென்பொருளின் அளவும் வெறும் KBகளில் மட்டுமே. மிகவும் பயனுள்ளது. இங்கு அந்த மென்பொருளை பதிவிறக்கலாம்.




நீங்கள் ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை
இதையாவது கிளிகுங்கள்

22 April 2009

விண்டோஸ் விளையாட்டுகளை எளிதாக முடிக்கலாம்

|1 comments
இந்த Free cell Gameயை எப்படியாவது முடித்தே தீரனும்ன்னு முடிவோட இருக்கேங்க ஆனா முடியலயா???

அதேபோல solitaire Gameயும் வெற்றி பெறனும் என்று நினைக்கிறிர்களா???

இந்த நகர்படத்தை பாருங்க புகுந்து விளையாடுங்க...



17 April 2009

Yahooவில் ஒளிந்துள்ளவர்களை கண்டுபிடிக்க

|13 comments
இப்போது கிட்டத்தட்ட எல்லா Messangerகளிலும் Invisible mode உள்ளது. Invisible mode என்பது நாம் Online இருப்பது எவருக்கும் தெரியாது. சமீபத்தில்தான் Googleல் கொண்டுவந்தார்கள். ஆனால் இன்னமும் Gtalkல் இந்த வசதி இல்லை. இதன் மூலம் தேவை இல்லாத நன்பர்களின் தொந்தரவுகளிலிருந்து தப்பலாம். ஆனால் அதற்கும் வந்து விட்டது ஆப்பு.

உங்கள் நண்பர் அல்லது மேலதிகாரி உண்மையாகவே Offlineல் உள்ளார்களா அல்லது Invisibleல் உள்ளார்களா என இந்த முகவரிக்கு என்று உங்கள் நண்பரின் Yahoo IDயை கொடுத்தால் போதும் உடனடியாக இந்த தளம் தோல் உரித்துக்காட்டிவிடும். அதேபோல உங்கள் நண்பரும் இந்த தளத்தை பயன் படுத்தி உங்கள் நிலைமையையும் அறியலாம் ஜாக்கிரதை.

yahoo invisible
அதே போல இந்த தளத்தில் இந்த பக்கத்திற்க்கு சென்றால் மேலே உள்ள படத்தினைபோல linkம் கொடுக்கிறார்கள். அதை உங்கள் Blogகளிலும் அமைத்துக்கொள்ளாம்.

Go to detectinvisible