Showing posts with label தமிழிஷ். Show all posts
Showing posts with label தமிழிஷ். Show all posts

5 May 2009

உங்கள் பிளாக்ஐ பிரபலம் ஆக்குவது எப்படி

|45 comments
என்னடா தலைப்பை பார்ததுமே எதோ மொக்கை பதிவுன்னு நினைக்க வேண்டாம். இது நிஜமாகவே உருப்படியான பதிவு. (அதை நாங்க சொல்லனும்). இந்த பதிவு கண்டிப்பாக இப்பதான் பதிவுலகிற்க்கு காலடி எடுத்து வைத்திருபவர்களுக்கும், இனிமேல் பதிவு எழுதலாம் என்று நினைப்பவர்களுக்கும் எத்தனையோ பதிவை போட்டாச்சு இன்னும் ஹீட்டாக முடியலயே (என்னை போல) என்று கவலைபடுபவர்களுக்கும் உபயோகமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன் இந்த பதிவை எழுத முன் உதாரணமாக இருந்த நண்பர் பற்றி கடைசியில் சொல்கிறேன்.

உங்கள் பிளாக்ஐ பிரபலமாக்க
1. முதலில் எல்லா வலைபதிவாளர்களிடமும் நன்றாக பழகிய நண்பனை போல மாப்பிளே மச்சான் அளவிற்கு பழக வேண்டும்.

2. கண்டிப்பாக அப்போது தான் ஆரம்பிக்கபட்ட பிளாக்காக இருந்தாலும் Follow செய்ய வேண்டும்.

3. ஒரு வலைபதிவாளரின் முதல் பதிவு மொக்கையாக இருந்தாலும் அதில் உள்ள நல்ல எழுத்தை சுட்டிக்காட்டி அந்த புது வலைப்பதிவாளருக்கு பின்னூட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்.

4. உங்களுக்கு வரும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும். குறைந்தது நன்றியாவது சொல்ல வேண்டும்.

5. பிளாக் ஆரம்பித்தவுடனே மீடியமாக பிரபலமான பிளாக்கில் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். அப்படியே உங்கள் பிளாகின் முகவரியையும் கொடுக்க வேண்டும்.

6. கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும்.

7. நீங்கள் எழுதும் எழுத்து உங்களின் சொந்தமாக இருக்கவேண்டும் தவிர கண்டிப்பாக காப்பி அடிக்க கூடாது. (இத நீ சொல்லக் கூடாது)

8. உங்களின் பதிவை ஞாயிற்றுக்கிழமைகளில் பதியக்கூடாது. அப்படியே பதிந்தாலும் அன்று Tamilish மற்றும் தமிழ்மணத்தில் பகிரக்கூடாது. மறு நாள் பகிரலாம். இதனால் உங்கள் மதிப்புமிக்க எழுத்துக்களை விடுமுறையில் இருப்பவர்கள் படிக்க முடியாமல் போகலாம்.

9. மேலே சொன்னவை அனைத்தும் செய்தால் மட்டும் உங்கள் பிளாக்ஐ பிரபலப்படுத்த முடியாது.(என்னடா சொல்ல வர்ர???) கண்டிப்பாக சரக்கு இருக்க வேண்டும். எதை பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள் அனால் அது யார் மனதையும் புன்படுத்தாமல் இருப்பது நலம்.

10. இங்கு நான் சொன்னவை அனைத்தும் நண்பர் சக்கரை சுரேஷ் செய்தவைதான். அதானால் நீங்களும் இதை எல்லம் செய்தால் அவரை போல் பிரபலம் ஆகலாம் என நினக்க வேண்டாம். உங்கள் பதிவில் சரக்கு(அப்பதே இருந்து சரக்கு சரக்கு என்கிறீயே என்ன சரக்கு) இருந்தால் மட்டுமே பலர் படிக்க வருவார்கள். நீங்கள் இதை எல்லம் எதுவும் செய்யாமலேயே நண்பர் PKP போலும் பிரபலமாகலாம். விரைவில் பிரபலமாக வாழ்த்துக்கள்.

சரி இந்த பதிவிற்க்கு ஏன் இந்த படத்தை போட்டிருக்க என்று கேட்பது புரிகிறது. படத்தை கிளிக்கி பெரிதாக்கி பாருங்கள். இதுவரை ஒரு தமிழ் பிளாகரின் கடமையை ஆற்றியதற்கான சான்றுதான் இது. ஆம் இப்போது வரை Tamilishல் நான் போட்ட வோட்டுக்கள் 1400க்கும்மேல். நீங்களும் உங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்கான பிரச்சாரம் தான் இது. கடமையை ஆற்றுங்கள்

24 April 2009

Tamilishற்கு சில யோசனைகள்

|20 comments
இன்றைய தமிழ் வலைபதிவர்களின் உலகில் தமிழிஷ் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தெரியாதவர்கள் இங்கு கிளிக்கி தெரிந்துகொள்ளாம் ஏற்கனவே என் முந்தைய பதிவில் தமிழிஷ் பற்றி எழுதியிருக்கிறேன். இப்படி ஒரு வலைதளம் இல்லை என்றால் இன்றைய வலைபதிவர்கள் பலர் வெளி உலகிற்கு தெரியாமலே இருந்திருக்ககூடும்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல சேவையை தமிழிஷ் வழங்கிவருகிறது. இந்த சேவயை இன்னும் எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று எதோ எனக்கு தெரிந்த சில யோசனைகளை இந்த பதிவின் மூலம் தெரிவிக்கிறேன். நீங்களும் உங்கள் யோசனைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

1. தமிழிஷ்ன் முதல் பக்கத்தில் பிரபலமான அதாவது அதிக வாக்குகள் பெற்ற இடுக்ககளை 12மட்டுமே இப்போது காண்பிக்கப்படுகிறது. அதை 20 அல்லது 25 ஆக உயர்தலாம்.

2. தமிழிஷ்ல் பெரும்பாலும் தற்போது பிளாகுக்ளே(Blogs) பகிரப்பட்டு வருகிறது. அதானால் தமிழ்மணத்தில் உள்ளது போல Feedயை பயன்படுத்தி தானாகவே பகிரும் வசதியையும் கொடுக்கலாம்.

3. ஒரு இடுக்கயை Submit செய்யும் போது தானாகவே அந்த இடுக்கைக்கான தலைப்பை மற்றும் அந்த இடுக்கையின் முதலில் உள்ள சில வரிகளை தேர்ந்தெடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தால். இதனால் சுலபமாக இரண்டு கிளிக்கில் ஒரு புது இடுக்கையை Submit செய்யலாம். (No Typing Required)

4. தமிழ்மணத்தில் உள்ளது போல அதிக வாக்குகள் பெரும் வலைபதிவருக்கு நட்சத்திர பதிவராக அறிமுகம்செய்து கௌரவிக்கலாம்.

5. Bloggerயை தவிற Wordpress போன்றவற்றிக்கும் வோட்டளிப்பு பட்டையை வசதியை கொடுக்கலாம்.

இப்போதைக்கு என் மனதில் தோன்றிய சில யோசனைகளை கூறியுள்ளேன். உங்களுக்கு இது போல தோன்றினால் பின்னூட்டத்தில் அவசியம் கொடுக்கவும்.