உங்கள் பிளாக்ஐ பிரபலமாக்க
1. முதலில் எல்லா வலைபதிவாளர்களிடமும் நன்றாக பழகிய நண்பனை போல மாப்பிளே மச்சான் அளவிற்கு பழக வேண்டும்.
2. கண்டிப்பாக அப்போது தான் ஆரம்பிக்கபட்ட பிளாக்காக இருந்தாலும் Follow செய்ய வேண்டும்.
3. ஒரு வலைபதிவாளரின் முதல் பதிவு மொக்கையாக இருந்தாலும் அதில் உள்ள நல்ல எழுத்தை சுட்டிக்காட்டி அந்த புது வலைப்பதிவாளருக்கு பின்னூட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்.
4. உங்களுக்கு வரும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும். குறைந்தது நன்றியாவது சொல்ல வேண்டும்.
5. பிளாக் ஆரம்பித்தவுடனே மீடியமாக பிரபலமான பிளாக்கில் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். அப்படியே உங்கள் பிளாகின் முகவரியையும் கொடுக்க வேண்டும்.
6. கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும்.
7. நீங்கள் எழுதும் எழுத்து உங்களின் சொந்தமாக இருக்கவேண்டும் தவிர கண்டிப்பாக காப்பி அடிக்க கூடாது. (இத நீ சொல்லக் கூடாது)
8. உங்களின் பதிவை ஞாயிற்றுக்கிழமைகளில் பதியக்கூடாது. அப்படியே பதிந்தாலும் அன்று Tamilish மற்றும் தமிழ்மணத்தில் பகிரக்கூடாது. மறு நாள் பகிரலாம். இதனால் உங்கள் மதிப்புமிக்க எழுத்துக்களை விடுமுறையில் இருப்பவர்கள் படிக்க முடியாமல் போகலாம்.
9. மேலே சொன்னவை அனைத்தும் செய்தால் மட்டும் உங்கள் பிளாக்ஐ பிரபலப்படுத்த முடியாது.(என்னடா சொல்ல வர்ர???) கண்டிப்பாக சரக்கு இருக்க வேண்டும். எதை பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள் அனால் அது யார் மனதையும் புன்படுத்தாமல் இருப்பது நலம்.
10. இங்கு நான் சொன்னவை அனைத்தும் நண்பர் சக்கரை சுரேஷ் செய்தவைதான். அதானால் நீங்களும் இதை எல்லம் செய்தால் அவரை போல் பிரபலம் ஆகலாம் என நினக்க வேண்டாம். உங்கள் பதிவில் சரக்கு(அப்பதே இருந்து சரக்கு சரக்கு என்கிறீயே என்ன சரக்கு) இருந்தால் மட்டுமே பலர் படிக்க வருவார்கள். நீங்கள் இதை எல்லம் எதுவும் செய்யாமலேயே நண்பர் PKP போலும் பிரபலமாகலாம். விரைவில் பிரபலமாக வாழ்த்துக்கள்.
சரி இந்த பதிவிற்க்கு ஏன் இந்த படத்தை போட்டிருக்க என்று கேட்பது புரிகிறது. படத்தை கிளிக்கி பெரிதாக்கி பாருங்கள். இதுவரை ஒரு தமிழ் பிளாகரின் கடமையை ஆற்றியதற்கான சான்றுதான் இது. ஆம் இப்போது வரை Tamilishல் நான் போட்ட வோட்டுக்கள் 1400க்கும்மேல். நீங்களும் உங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்கான பிரச்சாரம் தான் இது. கடமையை ஆற்றுங்கள்