Showing posts with label பைக். Show all posts
Showing posts with label பைக். Show all posts

4 July 2008

வேகப் பிசாசு!

|0 comments
இந்தியாவில், சூப்பர் பைக்குகளின் படையெடுப்பு ஆரம்பித்துவிட்டது. யமஹாவுக்கு அடுத்தபடியாக, இப்போது DUCATIம் சூப்பர் பைக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. DUCATI சூப்பர் பைக்குகளில் பெயர் பெற்றது, 1000 சிசி திறன்கொண்ட 'DUCATI 1098' பைக். இதுவும் இந்தியாவில் விற்பனைக்கு வந்து இருக்கிறது.


DUCATIன் தோற்றமே, இதயத் துடிப்பை எகிறவைக்கும். அருகில் சென்று பார்த்தால்,
உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறக்க வேண்டும் என மனசு பரபரக்கிறது. 'இந்த பைக்குக்கு, இளம் பெண்களின் லிஃப்ட் தொந்தரவு நிச்சயம் இருக்கும்' என்கிறார்கள் இதன் ரசிகர்கள்.



ஸ்டார்ட் பட்டனைத் தட்டியவுடன், கொஞ்சம் தாமதித்துதான் ஸ்டார்ட் ஆகிறது. காரணம், பைக்கினுள் இருக்கும் சென்ஸார்கள், இன்ஜினில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்த பிறகுதான் ஸ்டார்ட்டர் மோட்டாரைச் சுழல அனுமதிக்கிறது. பைக் ஸ்டார்ட் ஆனவுடன் 'கீச்' சத்தம் காதைக் கிழிக்கிறது. சத்ததைக் கேட்டவுடன் தெருநாய்கள் தெறித்து ஓடிவிடும்.



முதல் கியரைத் தட்டியதும் தலையில் 'நங்'கென்று கொட்டியது போல வெறிகொண்டு பறக்கிறது. இந்த பைக்கை, பயபக்தியுடன் அலுங்காமல் குலுங்காமல் ஓட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. கிளட்ச்சைப் பிடித்து ஓட்ட உடம்பில் எக்ஸ்ட்ரா சக்தி வேண்டும். 160தீலீஜீ சக்திகொண்ட இந்த வேகப் பிசாசை ஓட்ட 'தில்' நிறைய வேண்டும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸைக்கொண்ட இந்த பைக்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது.



பிரேக்குகள் பிடித்த நொடியில் நிற்கின்றன. ஆனால், நீண்ட நேரம் ஓட்டினால், இன்ஜின் சூடு கால்களின் தொடை வரை ஏறுகிறது. 26 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை, வாழ்நாளில் ஒரு முறையாவது ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பைக் ரசிகர்களின் தீராத ஆசை!


நன்றி, விகடன்.

5 June 2008

புதிய யமஹா பைக்...

|3 comments
இப்போது பைக் பிரியர்கள் எங்கே சந்தித்து கொண்டாலும் முதலில் பேசுவது... யமஹா ஆர்15 பைக் பற்றித்தான். இளைஞர்களின் உற்சாகத்துக்கு மேலும் பலம் சேர்ப்பது போல, யமஹா நிறுவனம் சென்னையில் இந்த புதிய ஆர்15 பைக்கை காட்சிக்குவைத்திருக்கிறது. இந்தக் கனவு பைக்கில் 'அட' போட வைக்கும் சமாசாரங்கள் ஏராளம்!


சென்னையில் இருக்கும் யமஹா டீலர்கள் அத்தனை பேரும், இந்தக் கனவு


பைக்குக்கான முன்பதிவை ஆரம்பித்துவிட்டதை அடுத்து, ஷோரூம்களில் செம கூட்டம்!


இதில் ஆச்சர்யம் என்னவென்றால், வாகனத்தின் பவர் என்னவென்று தெரியாது. விலை எவ்வளவு எனத் தெரியாது. எப்போது விற்பனைக்கு வரும் என்றுகூட யாருக்கும் தெரியாது! இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க, களத்தில் இறங்கிச் சேகரித்த தகவல்கள் இதோ...


ஏரோடைனமிக் டிசைன், கிளிப் ஆன் ஹேண்டில்பார், ஸ்போர்ட்ஸ் பைக் ஃபேரிங், 150சிசி பைக்குகளில் முதன்முறையாக 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், பின்பக்கமும் டிஸ்க் பிரேக், ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், ஆயில் கூல்டு இன்ஜின் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது, இந்த யமஹா ஆர்15. இவ்வளவு வசதிகள் இருப்பதால், இதன் விலை சென்னையில் ஒரு லட்ச ரூபாய் என்று யமஹா தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன.


சென்னையில் இந்த ஜூன் மாதம் 14-ம் தேதி முதல் யமஹா ஆர்15 விற்பனைக்குக் கிடைக்கும். 'இந்த பைக்கின் சக்தி என்ன என்பதை இடியே விழுந்தாலும் இப்போதைக்குச் சொல்ல மாட்டோம்' என அடம்பிடிக்கிறார்கள் யமஹா நிறுவனத்தினர். இதன் சக்தி 20 - 22 bhp இருக்கும் என வெளியே பேச்சுகள் இருந்தாலும், நமக்குக் கிடைத்த தகவலின்படி இதன் சக்தி 16 bhp இருக்கும் எனத் தெரிகிறது.


இந்த பைக்கின் வருகையால், டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி 160 எஃப்ஐ பைக்கை விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த பைக்குடன் போட்டிபோடுவதற்காக பஜாஜ் நிறுவனமும் பல அதிரடித் திட்டங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறது!

நன்றி, விகடன்.

24 May 2008

பைக் ஓட்ட 10 கட்டளைகள்!

|1 comments
1மிதமான வேகத்தில் சீராக ஓட்டுங்கள்!

எப்போதும் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலேயே செல்லுங்கள். உங்கள் மொத்தப் பயண நேரத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. வேகமாகச் செல்லும்போது, மாற்றி மாற்றி பிரேக்கை அழுத்தியும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியும் ஓட்ட நேரிடும். இப்படி வேகமாக ஓட்டினால், ஏராளமான எரிபொருள் விரயமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2தேவை இருந்தால் மட்டும் பிரேக்கைப் பயன்படுத்துங்கள்!

ஒரு நல்ல ரைடரால் நிற்க வேண்டிய இடங்களைச் சரியாகக் கணிக்க முடியும். வேகமாகச் செல்லும் பைக்கில் பிரேக்கை உபயோகிக்கும்போது, சக்தியைப் பெருமளவில் விரயம் செய்கிறோம். வளைவுகளை முன்கூட்டியே கவனித்துச் சென்றால், பிரேக்கை உபயோகிக்காமல் செல்ல முடியும்.

3கிளட்ச்சைக் கைவிடு!

தேவையில்லாமல் கிளட்ச்சோடு பின்னிப் பிணைந்து, அதைப் பிடித்துக்கொண்டே பைக் ஓட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். இந்தப் பழக்கம் பெட்ரோலைக் குடித்துவிடும்.

4ஏர் பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்!

இன்ஜின் மூச்சு விடுவதற்குக் காற்றை அனுப்புவது, இந்த ஏர் பில்டர்தான். தூசு துரும்புகள் இன்ஜின் பாகங்களை சீக்கிரம் தேய்மானத்துக்கு உட்படுத்தும். அதோடு, தூசு புகுவதால் ஏற்படும் கார்பன் படிவம் சைலன்ஸரை அடைத்துக்கொண்டு, இன்ஜினை திணற வைக்கும். இதனால், பைக் பர்பாமென்ஸ் பாதிக்கப்படும்.

5டயரின் காற்றழுத்தத்தை சோதியுங்கள்!

காற்றுக் குறைவான டயர்களால் பெட்ரோல் தேவை அதிகமாகிறது. 25 சதவிகிதம் காற்றுக் குறைவான டயர்களால், 5 சதவிகிதம் அதிக எரிபொருள் தேவையும், டயர்களின் ஆயுட்காலம் 25 சதவிகிதம் குறைவதும் ஏற்படும். அதே போல், தேய்ந்துபோன டயர்களாலும் பெட்ரோல் விரயமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

6பெட்ரோல் லீக் ஆவதைச் சோதியுங்கள்!

பைக்கின் பெட்ரோல் டேங்க், கார்புரேட்டர் மற்றும் ப்யூல் லைன் (Fuel Line) என பெட்ரோல் பயணிக்கும் அத்தனை இடத்தையும் சரிவரச் சோதியுங்கள். ஒவ்வொரு துளியாக வடிந்தால்கூட ஒரு நாளைக்கு 5 1/2 லிட்டர் எரிபொருள் விரயமாகிவிடும்!

7சிக்னல்களில் இன்ஜினை ஆப் செய்யுங்கள்!

ஐடியலில் பெட்ரோல் பெருமளவு விரயமாகும். ரயில்வே கேட், போக்குவரத்து நெரிசல், சிக்னல்கள் ஆகியவற்றைக் கடக் கும்போது பைக்கை ஆப் செய்து எரிபொருளைச் சேமியுங்கள்.

8இன்ஜினை நல்ல கண்டிஷனில் வைக்கவும்!

அவ்வப்போது இன்ஜினைச் சரியாக டியூன் செய்துகொண்டால், 6 சதவிகிதம் வரை பெட்ரோலைச் சேமிக்கலாம். பைக்கில் அதிகப் புகை வெளியானாலோ, இழுவைத் திறன் குறைந்தாலோ, உடனடியாக சர்வீஸ் சென்டருக்குப்போய் இன்ஜினைச் சோதியுங்கள்!

9பேட்டரியை அவ்வப்போது சோதியுங்கள்!

எலெக்ட்ரிகல் உபகரணங்கள் எப்போதும் நல்ல நிலையில் இருப்பது முக்கியம். எனவே, ஒரிஜினல் உதிரி பாகங்களை மட்டுமே வாங்கிப் பொருத்துங்கள்.

10அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் பைக்கை சர்வீஸ் செய்யுங்கள்!

உங்கள் பைக்கின் முக்கியச் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்த சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்வது, நீங்கள் கொடுக்கும் பணத்துக்கும் வாகனத்துக்கும் நன்மை பயக்கும்!


--நன்றி விகடன்