Showing posts with label வருமானம். Show all posts
Showing posts with label வருமானம். Show all posts

27 April 2009

கூகுள் Adsenceற்கு போட்டியாக

|10 comments
கூகுள் Adsence என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நம் வலைபதிவில் உள்ள சில வார்த்தைகளை கொண்டு தானாகவே அது சம்மந்தபட்ட விளம்பரங்களை நம் வலைப்பதிவில் கொடுக்கும். இதனால் நிறைய பேர் இப்போதும் வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் எப்போதோ கூகுள் Adsenceல் பதிவு செய்துருப்பார்கள்.

ஆனால் இப்போதோ கூகுள் Adsenceல் இப்படி அப்படி என்று பல விதிமுறைகளை கொண்டுவந்துவிட்டனர். அதில் முக்கியமானது தமிழ் மொழியில் உள்ள வலைதளத்தில் அவர்கள் விளம்பரங்களை அனுமதிக்கமாட்டார்களாம். (தமிழனுக்கு இலங்கையில் தான் அடி என்றால் கூகுள் Adsenceலுமா???).

இப்படி இன்னும் நிறைய பேர் கூகுள் Adsenceபோல ஏதாவது வருமா நாம் ஏதாவது வருமானம் ஈட்டமுடியுமா என்று ஆவலுடன் இருந்திருப்பார்கள். இது சம்மந்தமாக என் வலைப்பதிவில் வருமானம் என்ற பதிவை எழுதினேன். ஆனால் அவை எல்லாம் எதோ ஒருவர் நம் வலைப்பதிவை பார்த்து விளம்பரம் கொடுத்தால் தான் உண்டு. (இதெல்லாம் நடக்குற காரியமா)

ஆனால் இப்பொது கூகுள் Adsenceற்கு போட்டியாக Guruji நிறுவனம் கழத்தில் இரங்கியுள்ளது. கூகுள் Adsenceபோல் கட்டுப்பாடு ஏதும் இல்லை அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இங்கு சென்று ஒரு கணக்கை தொடங்குங்கள். AdCode Creat செய்யுங்கள் உங்கள் வலைப்பதிவில் விளம்பரம் செய்யுங்கள் வருமானம் ஈட்டுங்கள்.

Go to Guruji Ads



இந்த Guruji Adsence பற்றி தெரிந்தது நம்ம சர்க்கரை பதிவில் உள்ள விளம்பரம் மூலமாக நன்றி சுரேஷ்.

20 April 2009

ரேட் ஏறிடுச்சுங்க...

|3 comments
தலைப்பை பார்த்ததும் எதோ நான் வாங்கிய ஷேர் விலையோ அல்லது இடத்தின் விலையோ ஏறிடுச்சுன்னு நினக்கவேண்டாம். நான் சொல்ல வந்தது என் பிளாக்கின் ரேட்டை பற்றி. சில நாட்களுக்கு முன்பு பிளாக்கின் மதிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

அதில் என் பிளாகின் மதிப்பு $564.54 ஆக இருந்தது. அடுத்தடுத்த என் பதிவால் உங்களின் வருகை அதிகரித்து தற்போது என் பிளாகின் மதிப்பு $1129.08 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கண்டிப்பாக நீங்கள் மட்டுமே. உங்களுக்கு கோடானகோடி நன்றிகள். அப்படி இப்படி மொதல்ல காப்பிஅடிக்க ஆரம்பிச்சு இப்ப சொந்தமாக எழுத ஆரம்பிச்சாச்சு இந்த பதிவு என்னோட 100வது பதிவு.

உங்கள் பிளாகின் மதிப்பை அறிய கிளிக்குங்கள். அதெல்லாம் சரி யாராவது வாங்க யாராவது இருக்கீங்களா??? தள்ளுபடியும் உண்டு. புரோக்கர் கமிஷனும் உண்டு. Recession வந்து ரேட் எல்லாம் குறைய வாய்பே இல்லங்க. சீக்கிரம் வாங்கிகோங்க இல்ல இன்னும் ரேட் ஏறும்.

5 April 2009

உங்கள் Blogன் மதிப்பு...

|11 comments
நேற்று இரவு தூக்கம் வரவில்லை சரி நமக்கு தான் இணையம் இருக்கிறேதே என்று வழக்கம்போல் எனது வேலையை தொடங்கினேன். நமது சர்க்கரை வலைப்பதிவின் Templateயை பார்த்து எனது நாக்கில் எச்சி ஊரியது ( இத எல்லாமா எழுதுவ?). சரி நானும் எனது Blogன் Templateயை மாற்றுவோம் என்று நினைத்து( அங்க ஆரம்பித்தது தான் வினை) பல Blog Templateயை பதிவிறக்கினேன். அப்படி மாற்றும் போது கடைசியாக உள்ள எனது Templateன் HTML Code பதிவிறக்காமால் விட்டுவிட்டேன். நேற்று இரவு முழுவதும் எனது வலைப்பதிவு பலவித மாடல்களில் வலம் வந்தது... ( ஏதோ பல மாடல் கார் வந்த மாரி சொல்ர!) எந்த Templateம் எனது Blogல் உள்ள Widgetகளுக்கு பொருத்தமாக இல்லை. நேரம் நள்ளிரவு தாண்டியது இனிமேலும் இணையத்தில் இருந்தால் நல்லதல்ல (யாருக்கு?) என்று எதோ ஒரு Templateயை செட் செய்து தூங்க்கப்போனேன். அப்போது தான் நினைத்தேன் டேய் அந்த சர்க்கரை பதிவை எழுதுர நண்பர் சுரேஷ் ஒரு மென்பொருள் வல்லுனர் நீ ஒரு கட்டிட பொரியாளர் உனக்கு எதுக்குடா அவரோட Templateயை பார்த்து எச்சி ஊரனும். எந்த அளவுக்கு நீ Blog Design பன்னதே பெரிய விஷயம் இருக்குர Template யே போதும்ன்னு நினைச்சேன். காலையில் ஒரு வழியாக எனது Blog Template designயை கொண்டுவந்து விட்டேன். அதன் விளைவாகத்தான் இந்த பதிவு.

(என்னாட இவன் தலைப்பை பத்தி சொல்லாம இப்படி சொந்த கதை சோக கதை எல்லாம் சொல்ரானேன்னு பார்க்குறேங்களா?? அட விகடன், குமுதம் அதில் எல்லாம் இப்படிதான் தலைப்பை பற்றி கடைசியாகத்தான் வரும்.)

இப்படி இணையைதில் தேடும் போது கிடைத்ததுதான் இந்த பக்கத்தில் வலதுபுறம் பார்க்கும் எனது Blogன் விலை. இந்த Blog ன் மதிப்பு $564.54. சந்தோசமாக இருந்தது. நீங்களும் உங்களின் Blogன் மதிப்பை தெரிந்துகொள்ள கிளிக்குங்கள். இதெல்லாம் சரி இந்த ரேட்க்கு இந்த Blogயை வாங்க யாராவது இருந்தா தெரிவிக்கவும்

10 July 2008

வலைப்பதிவில் வருமானம்

|4 comments

உங்களது வலைப்பகத்தில் Googleலின் AdSense போன்று வேறு சில வருமானம் தரும் விளம்பரங்களை தர விருப்பமா???


இதோ உங்களுக்காகத்தான் இந்த பதிவு
.



Google AdSense என்பது உலகின் மிகப்பெரிய விளம்பர நெட்வொர்க் ஆகும். அதை நமது வலைப்பக்கத்தில் நிறுவினால் நமது வலைப்பக்கத்தில் உள்ள வார்த்தைகளின் மூலம் அது சம்மந்தமாக விளம்பரத்தை நமது வலைப்பக்கத்தில் காட்டும். நமது வலைப்பத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த விளம்பரங்களின் மீது செய்யப்படும் கிளிக்கின் எண்ணிக்கையை பொறுத்து அந்த வலைப்பதிவர்க்கு வருமானம் கிடைக்கும்.

இப்போது இது போல வேறு சில விளம்பர நெட்வொர்க் நிறுவனங்கள்.


மேலும் இந்த நிறுவங்கள் மூன்று வகையாக வருமானத்தை தருகின்றனர். அவை
CPA, CPC மற்றும் CPM.

Cost Per Action Ad Networks (CPA)

Cost Per Click Ad Networks (CPN)

Cost Per 1000 Impression Ad Networks (CPM)

1 July 2008

பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பது எப்படி???

|0 comments
முதலீட்டில் லாபம் கிடைக்க வேண்டுமானால், மொத்த முதலீட்டையும் ஒரே இடத்தில் போடாமல் சரியான துறைகளைத் தேர்வுசெய்து பிரித்துச் செய்யவேண்டும். அப்போதுதான் ஒன்று சரிந்தாலும் மற்றொன்று கைகொடுக்கும். அவ்வாறு ஒரு கலவையாக முதலீடு செய்வதுதான் முதலீட்டுக்கலவை.

அதை எப்படி உருவாக்குவது?

''பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்க குறைந்தபட்சம் 2 முதல் 4 லட்சம் ரூபாய் போதுமானது. இந்தப் பங்கு முதலீட்டுக் கலவையில் குறைந்தபட்சம் 20 முதல் 25 பங்குகளாவது இருக்கவேண்டும். பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்க துறைகளின் அடிப்படையிலே முதலீடுகளை அமைத்துக்கொள்வது நல்லது. துறைகளைப் பொறுத்தவரை நீண்டகாலத்தில் வளர்ச்சி கொண்டவை. ஆனால், எப்போதும் எல்லாத் துறையும் வளர்ச்சியில் இருக்காது. இவை ஒரு சுழற்சியின் அடிப்படையில் மாறிமாறி வரும். முதலீடு செய்யும்போது தற்போது எந்தத் துறைகள் வளர்ச்சிப் பாதையில் உள்ளது எனப் பார்க்கவேண்டும். அதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாகத் தேர்வு செய்யவேண்டும். இது எளிமையாக இருக்கும்.

உதாரணமாக, இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு என்றால், அதனை பத்து துறைகளில் கலந்து முதலீடு செய்யலாம். ஒரு நிறுவனப் பங்கில் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு என இருபது பங்குகளில் முதலீடு செய்யலாம். அவ்வாறு தேர்வு செய்யும் நிறுவனங்கள் அத்துறையில் மிகச்சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களாக இருக்கவேண்டும். சந்தை சரிவின்போது இவற்றின் விலைகளும் சரிந்தாலும், மற்ற பங்குகளைவிட விரைவில் மீண்டும் அதிகரிக்கும்.

அல்லது நிறுவனங்களின் அடிப்படையில் சந்தையில் உள்ள பத்து பெரிய நிறுவனப் பங்குகளில் 50 சதவிகிதம் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 50 சதவிகிதத்தை பி.எஸ்.இ-500 பிரிவில் உள்ள சிறந்த 10 பங்குகள் என பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்கலாம்.

தேர்வு செய்துள்ள நிறுவனப் பங்கு-களின் விலை எப்போது குறைவாக உள்ளதோ, அப்போதுதான் முதலீட்டை துவக்கவேண்டும். கையில் பணம் இருப்பதற்காக அவசரப்பட்டு ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது. பொறுமை அவசியம் தேவை. குறிப்பாக சரியும் சந்தையில் நம்மால் சிறந்த பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்கிக் கொள்ளமுடியும். அந்தவகையில் இப்போதுள்ள சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு.

ஒரு நிறுவனப் பங்குக்கு பத்தாயிரம் ரூபாய் என்று முடிவாகிவிட்ட நிலையில், அவற்றை ஒரே தவணையில் முதலீடு செய்யக்கூடாது. இந்தத் தொகையை நான்காகப் பிரித்து முதலீடு செய்யவேண்டும். விலை குறைந்து இருக்கும்போது முதலில் 2,500 ரூபாய்க்கு பங்குகளை வாங்கவேண்டும். அதற்கு அடுத்து விலை குறையும்போது அதே நிறுவனப் பங்கில் இரண்டாவது முறையாக 2,500 ரூபாயை முதலீடு செய்யவேண்டும். இந்த முறையிலேயே மீதமுள்ள பணத்தையும் 2,500 ரூபாய் ஆகப் பிரித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்துவர வேண்டும். இது ஒரு நிறுவனப் பங்குக்கான முதலீட்டு முறை. இது போலவே மொத்தம் இருபது பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையில் பங்குக் கலவை ஒன்றை உருவாக்க ஆறு மாதம் முதல் பன்னிரண்டு மாதம் வரை பிடிக்கும்.

இவ்வாறு உருவாக்கிய பங்குக் கலவையை மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது கிடைக்கும் லாபத்தை அதிகப்படுத்துவதற்கான காலம். இதற்கிடையில் சந்தையின் புள்ளிகள் சரியலாம், உயரலாம். பங்குக் கலவை மூலம் ஆண்-டுக்கு சராசரியாக 25 முதல் 30% வருமானத்தை எதிர்பார்க்கலாம்'' என்ற பிரபாகர் பங்குகளை விற்பதற்கான தருணம் பற்றியும் சொன்னார்.

''முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகள் என்றாலும் விற்பதற்காக அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த வருமானம் இடைப்பட்ட காலத்தில் கூட கிடைக்கலாம். அப்போது எந்தப் பங்கு லாபம் கொடுக்குமோ அதில் ஐம்பது சதவிகிதப் பங்குகளை விற்று லாபம் எடுத்து வெளியேறலாம். மீதமுள்ள பங்கை பங்குக் கலவையில் தொடர்ந்து வைத்திருக்கலாம். லாபத் தொகையைக் குறைந்த விலைக்கு வரும் வேறு நல்ல வளர்ச்சியுள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு முறையானது விற்க, வாங்க என தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும். நம் இலக்கு மூன்று வருடங்கள். அந்தச் சமயத்தில் எவ்வாறு முதலீடு செய்தோமோ அதே முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுக்கவேண்டும்.

செய்த முதலீடுகளை வருடத்துக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து பார்க்கவேண்டும். வளர்ச்சி உள்ள துறைகளாக இருந்தவை இப்போது தலைகீழாக மாறியிருக்கலாம். அந்தத் துறைக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ விஷயங்கள் நடந்திருக்கலாம். அந்த நிறுவனப் பங்குகளை வேறு நிறுவனம் அல்லது வேறு துறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றும்போது நஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல முதலீட்டு ஆலோசகர்கள் உதவியுடன் இதைச் செய்வது நல்லது. அதேபோல் வெளியில் எடுக்கும் பணத்தையும் திட்டமிடாமல் ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது'' என்றவர், முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.

ஒரு துறையில் இரண்டு பங்குகளுக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது.

நிறுவனம் தொடர்ந்து டிவிடெண்ட் கொடுத்து வந்துள்ளதா, குறிப்பாக ஒரு பங்கின் சந்தை விலைக்கு எத்தனை சதவிகிதம் டிவிடெண்ட் கொடுத்துள்ளது என்று கவனிக்கவேண்டும்.

சந்தையில் அதிகமாக வர்த்தகமாகும் பங்குகளாகத் தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்குத் தெரியாத அதே சமயம் சிறிய நிறுவனங்களில் ரிஸ்க் எடுக்காதீர்கள்.

உற்பத்தியைத் தொடங்காத நிறுவனங்களை இந்தக் கலவையில் சேர்க்காதீர்கள்.

இதர வருமானத்தால் அதிக லாபம் பெறும் நிறுவனப் பங்குகளைத் தவிர்த்து விடுங்கள்.

விற்பனை (நெட் சேல்ஸ்) அதிகம் உள்ள நிறுவனங்களாகத் தேர்வு செய்யுங்கள்.''

நன்றி, விகடன்.