9 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1

இந்த பரந்து விரிந்த வலையுலகில் பெரும்பாலான பிளாக்கர்கள் மென்பொருள் வல்லுனர்களே. ஒரு சிலரே என்னை போல வேறுதுரை வல்லுனர்கள்(வல்லுனரா நீயா???). எப்படி இருந்தாலும் வலையுலகிற்கு வந்து விட்டால் எழுத்துக்கள் தான் பேசும். உங்கள் பதவியோ வேலையோ இங்கு ஒண்றும் செல்லாது.

சில மென்பொருள் வல்லுனர்கள் தங்கள் பிளாக்கில் பல விதமான கோடிங்களை கொண்டு தங்கள் பிளாக்கை மெருகூட்டியிருப்பார்கள். நானும் ஒண்றும் உங்களுக்கு சளைத்தவன் இல்லை என்னும் அளவுக்கு வேறு துரை சார்ந்தவர்கள் தங்களின் பிளாக-ஐ வடிவமைத்திருப்பார்கள். இன்னும் சில மென்பொருள் வல்லுனர்களே தங்கள் பிளாக்-ஐ எப்படி மெருகூட்டுவது என்று தெரியாமல் இருப்பார்கள். எதோ எனக்கு தெரிந்த சில சின்ன சின்ன விஷயக்களை இதில் தந்துள்ளேன்.


உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட

முதலில் பொதுவான விஷயங்களை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்
1. பின்னூட்டத்தில் இருக்கும் Word வெரிபிகேசனை எடுத்து விடவும். இதனால் உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர் சலிப்படையாமல் பின்னூட்டம் எழுதுவார்.

2. நீங்கள் டைப் செய்யும் போது அடுத்த வரிக்கு செல்லா Enter தட்ட வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த Paragarph செல்ல மட்டுமே enter தட்டினால் போதுமானது. இதனால் உங்கள் வரிகள் அழகாக தெரியும்.

3. கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று வரிகளுக்கு ஒரு முறை இடைவெளி விட வேண்டும். இது படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும் பார்க்கவும் அழகாகவும் இருக்கும்.

4. நீங்கள் புது Template மாற்றும் போது எல்லா Linkகளும் சரியாக வேலை செய்கிறதா என்று பல முறை சரிபார்த்த பின்பே மாற்றவும். ஒரு பதிவாளரின் பிளாக்கில் Comment இடும் வசதியே இல்லை. அந்த அளவிற்கு அந்த Template உள்ளது.

5.குறிப்பாகா நீங்கள் கவனிக்க வேண்டியது RSS Link, தேதி காண்பிக்கும் பகுதி. ஒரு பதிவரின் வலையில் தேதி தெரியும் பகுதியில் இன்னமும் undefined என்றே தெரிகிறது. அதை நீங்கள் Settings சென்று Formatting பகுதியில் மாற்றலாம்.

இதெல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்பவர்கள் தெரியாத உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். அவரின் பிளாக்கை மெருகூட்ட கற்றுக்கொடுங்கள். இங்கு சொன்னவை எல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தான். அடுத்த பகுதியில் பிளக்கர்களுக்கு பயன் படும் முக்கியமான் HTML Coding பற்றி பகுதி-2ல் பார்போம்.

15 comments:

  • Anonymous says:
    9 May 2009 at 4:25 pm

    வணக்கம்.
    என் பிளாக்கில் தேதி வருவதை பற்றி கூறினீர்கள். ஆனால், தேதி செட்டிங்ஸை மாற்றியும் தேதி தெரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக கூறவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
    நன்புடன்...

  • TamilhackX says:
    9 May 2009 at 6:50 pm

    நீங்கள் AWsurveys இல் பணம் சம்பாதிக்கலாம் என்று எழுதியிருக்கிறீர்கள் அது ஒரு ஏமாற்று வேலை நானும் ஒரு காலத்தில் இதை நம்பி ஒரு தனிப் பதிவே இட்டேன் பின் இது பொய் என தெரிந்ததும் அப் பதிவையே நீக்கி விட்டேஎன் 75$ சேர்ந்ததும் உங்கள் Paypal அட்ரஸ் கேட்பார்கள் அனால் பணம் மட்டும் வராது எமர்ந்திடாமல் இருந்தால் சரி

    நன்றி

  • payapulla says:
    9 May 2009 at 7:17 pm

    Information in your blog was very useful. Since i dont have tamil software i couldnot write in tamil. wishes to all your endeavour.

  • கிர்க்கான்ஸ்..

    இது ஒரு நல்ல பதிவு.. அனைவருக்கும் பயனுள்ள பதிவு.

  • Erode Nagaraj... says:
    9 May 2009 at 8:32 pm

    well said...

  • முக்கோணம் says:
    9 May 2009 at 8:51 pm

    அருமையான பதிவு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • Muruganandan M.K. says:
    9 May 2009 at 10:47 pm

    பதிவர்கள் அனைவருக்கும் கை கொடுக்கக் கூடிய நல்ல பதிவு. நன்றி

  • Anonymous says:
    10 May 2009 at 10:24 am

    நான் ரெகுலரா இந்த தொடரை படிக்கலாம்னு இருக்கேன்.

  • Venkatesh says:
    10 May 2009 at 10:47 am

    பயனுள்ள தகவல். இந்த பதிவு thiratti.com தளத்தின் பரிந்துரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

    வாழ்த்துகள்!!

    வெங்கடேஷ்
    thiratti.com

  • Suresh says:
    10 May 2009 at 10:52 am

    மச்சான் சூப்பர் போஸ்ட்....

    நான் அந்த வோர்ட் வெரிப்பிக்கேஷனுக்கு ஒரு பதிவு பத்தி ரெடி பண்ணி வச்சி இருக்கேன் ரொம்ப நாளா பப்ளிஷ் பண்ணனும்

  • இது நம்ம ஆளு says:
    10 May 2009 at 11:59 am

    அண்ணா
    அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
    ஜனனம் = ஜென்மம்

  • jothi says:
    10 May 2009 at 4:05 pm

    மிக நல்லது, இனி ரெகுலராக வருவேன்,..உதவியான் தலைப்பு

  • Unknown says:
    10 May 2009 at 4:43 pm

    வணக்கம்

  • KRICONS says:
    11 May 2009 at 4:08 pm

    நன்றி விஜய்,

    ஏன் உங்கள் பெயரை அனானியாக் போட்டுள்ளீர்கள்?

    நன்றி tamilhachX,
    ///அனால் பணம் மட்டும் வராது எமர்ந்திடாமல் இருந்தால் சரி///

    அப்படியா நானும் எடுத்துவிட்டேன்.

    நன்றி ungalodu konjam,
    ஆனால் உங்கள் பிளாக்-ஐ தமிழில் எழுதுகிறீர்கள்???!!!!


    நன்றி செந்தில்வேலன்


    நன்றி ஈரோடு நாகராஜ்,
    வருகைக்கும் கருத்திற்கும்.

    நன்றி முக்கோணம்

    நன்றி டாக்டர்

    நன்றி shirdi.saidasan,

    ஏன் உங்கள் பெயருக்கு பதில் மின் அஞ்சல் முகவரி??

    நன்றி திரட்டி.காம் வெங்கடேஷ்,
    ///இந்த பதிவு thiratti.com தளத்தின் பரிந்துரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.///
    காணோமே???

    நன்றி சுரேஷ்

    ///வோர்ட் வெரிப்பிக்கேஷனுக்கு ஒரு பதிவு பத்தி ரெடி பண்ணி வச்சி இருக்கேன்///

    சீக்கிரம் பப்ளிஷ் பண்ணு

    நன்றி இது நம்ம ஆளு,

    நன்றி Jothi

    நன்றி Dhanabal

  • Maduraikkarathambi says:
    15 May 2009 at 6:09 pm

    A very useful. Reading this blog I added some meaningful changes in my site. Thanks a lot for your sharing.

    with regards/Maduraikarathambi