12 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3

பகுதி-1 பகுதி-2

ஏற்கனவே பிளாக்கில் சிலர் செய்யும் பொதுவான சில தவறுகளை அல்லது எனக்கு தவறு என்று தோன்றியதையும் பார்த்துவிட்டோம். இனிமேல் உங்கள் பிளாக்கை சின்ன சின்ன HTML மற்றும் சில Codeகளை கொண்டு எப்படி மெருகூட்டலாம் என்று பார்போம். முதலில் உங்கள் பிளாகினுள் நுழைந்தவர் வெளியே போகாதவாறு செய்யவேண்டும். அதற்கான சில Codeகளை பற்றி பார்போம்.

1. படங்கள்
நீங்கள் பதிவில் படங்களை வைத்திருப்பீர்கள் அதை கிளிக்கி பெரிதாகிபார்க்க உங்கள் வாசகன் ஆசைபடுவான். அதை கிளிக்கினால் உங்கள் பிளாக் முகவரியில் இருந்து வெளியேறி படத்தின் முகவரிக்கு சென்று படத்தை காட்டும். இதனால் மீண்டும் உங்கள் பதிவிற்கு வாசகன் வருவது சந்தேகமே. அதனால் அந்த படங்களை வேறு முகவரிக்கு செல்லாமல் பார்க்க உதவுவதுதான் நண்பன் TVS50 கொடுத்த Code.

<script src='http://tvs50.110mb.com/imgbox/imgload.js' type='text/javascript'/>

இந்த Codeயை Layoutல் உள்ள Edit HTML பகுதியில் உள்ள <head> ற்க்கு கீழே ஒட்டவும்(Paste செய்யவும்). இதனால் உங்கள் வாசகன் உங்கள் முகவரியை விட்டு வெளியேறாமலயே அந்த படத்தை ரசிக்கலாம்.

2.Linkகள்
அடுத்ததாக உங்கள் பிளாக்கில் உள்ள லின்க்களை கிளிக்குவதால் உங்கள் வாசகன் உங்கள் முகவரியை விட்டு வெளியே செல்ல வாய்பை நாமே ஏற்படுத்திக்கொடுக்கிறோம். அனால் அந்த ஒவ்வொரு லின்க்கை கிளிக்கும்போதும் தனித்தனியாக வேறு Windowவிலோ அல்லது Tabயிலோ திறக்கும்படி செய்தால் உங்கள் முகவரியை விட்டு வெளியேராமல் உங்கள் வாசகன் இருப்பான். அதற்கு <base target='main'/> இந்த Codeயை Layoutல் Edit Justify FullHTML பகுதியில் சென்று <head>கீழே ஒட்டவும். அவ்வளவுதான் இனி உங்கள் பதிவில் உள்ள ஒவ்வொரு லின்கும் இனிமேல் தனி Windowவில் தான் திறக்கும்.

ஆனால் இப்படி எல்லா லின்க்கையும் நீங்கள் தனி Windowவில் திறப்பதால் சில சமயம் வாசகன் எரிச்சல் ஆகவும் வாய்பிருக்கிறது. அதானால் சில குறிப்பிட்ட லின்க்களை அதே Windowவில் திறக்க நீங்கள் விரும்பினால் அந்த Linkன் முடிவில் target="_self சேர்த்துகொள்ளவும். உதாரணமாக <ahref="http://www.AWSurveys.com/HomeMain.cfm?RefID=kricons">Surveyமூலம் சம்பாதிக்க/a> இந்த Link அதே Windowவில் Open செய்ய <ahref="http://www.AWSurveys.com/HomeMain.cfm?RefID=kricons"target="_self>Surveyமூலம் சம்பாதிக்க/a>. இவ்வாறு மாற்ற வேண்டும்.

இன்னமும் வரும்.

19 comments:

  • கண்ணா.. says:
    12 May 2009 at 4:02 pm

    தகவலுக்கு நன்றி..

    மிக அருமையான தொடர்பதிவு...

    என்னுடைய ப்ளாக் டெம்ப்ளேட்டில் follower gadget எவ்வளவு முயற்ச்சித்தும் கொண்டுவர முடியவில்லை... வழி சொல்லமுடியுமா?

  • Anonymous says:
    12 May 2009 at 4:13 pm

    you are pushing the readers to click the adsguru ads. this is offensive. dont do like this.

  • jothi says:
    12 May 2009 at 4:17 pm

    useful article,.. keep writing

  • டிவிஎஸ்50 says:
    12 May 2009 at 4:23 pm

    @kricons

    //நீங்கள் பதிவில் படங்களை வைத்திருப்பீர்கள் அதை கிளிக்கி பெரிதாகிபார்க்க உங்கள் வாசகன் ஆசைபடுவான். அதை கிளிக்கினால் உங்கள் பிளாக் முகவரியில் இருந்து வெளியேறி படத்தின் முகவரிக்கு சென்று படத்தை காட்டும்.//

    எளிய தமிழில் அழகாக தெளிவாக புரியும்படி விளக்குகிறீர்கள்.

    ////அதற்கு base target='main' இந்த Codeயை Layoutல் Edit Justify FullHTML பகுதியில் சென்று head கீழே ஒட்டவும். அவ்வளவுதான் இனி உங்கள் பதிவில் உள்ள ஒவ்வொரு லின்கும் இனிமேல் தனி Windowவில் தான் திறக்கும்.//

    உங்கள் எளிதான முறையையும் என்னுடைய இடுகையில் விரைவில் சேர்த்து விடுகிறேன்.

    எளிதான வழிமுறைதான். ஆனால் உங்கள் பிளாக்கின் சொந்த லிங்க்குகளும் (Internal Links) புதிய பக்கத்தில் திறக்கும். உதாரணத்திற்கு உங்கள் வலது side bar -ல் உள்ள உங்கள் இடுகை பட்டியலில் உள்ள உங்கள் லிங்க்குகளை கிளிக் செய்து பாருங்கள்.

    நான் அளித்திருந்த javascript உங்கள் பிளாக்கின் சொந்த லிங்க்குகளை (Internal Links) அதே பக்கத்தில் திறக்கும். வெளி லிங்க்குகளை (External Links) புதிய புதிய பக்கத்தில் திறக்கும்.

  • geevanathy says:
    12 May 2009 at 4:30 pm

    பயனுள்ள பதிவு
    நன்றி நண்பரே

  • கடைக்குட்டி says:
    12 May 2009 at 6:07 pm

    நன்றிங்க...

    சின்ன விஷய்ந்தானேன்னு எதையும் விட்டுறாதீங்க...

    எல்லாத்தயும் சொல்லுங்கப்பு..

  • கடைக்குட்டி says:
    12 May 2009 at 6:08 pm

    பைசா கோபுரப் படம் ரசித்தேன்..

  • Anonymous says:
    12 May 2009 at 8:15 pm

    மிக்க நன்றி நண்பா

  • Thanks

  • KRICONS says:
    13 May 2009 at 3:31 pm

    நன்றி கண்ணா,


    ///என்னுடைய ப்ளாக் டெம்ப்ளேட்டில் follower gadget எவ்வளவு முயற்ச்சித்தும் கொண்டுவர முடியவில்லை.///
    டெம்ப்ளேட்டை மாற்றி விடுங்கள் :(

  • KRICONS says:
    13 May 2009 at 3:32 pm

    Thanks Anony,

    ///you are pushing the readers to click the adsguru ads. this is offensive. dont do like this.///

    I am not pushing the Readers. I just give the Link thats all :)

  • KRICONS says:
    13 May 2009 at 3:33 pm

    Thanks Jothi

  • KRICONS says:
    13 May 2009 at 3:36 pm

    நன்றி டிவிஎஸ் 50,


    ///நான் அளித்திருந்த javascript உங்கள் பிளாக்கின் சொந்த லிங்க்குகளை (Internal Links) அதே பக்கத்தில் திறக்கும். வெளி லிங்க்குகளை (External Links) புதிய புதிய பக்கத்தில் திறக்கும்.///

    ஓ அப்படியா???

  • KRICONS says:
    13 May 2009 at 3:37 pm

    நன்றி த.ஜீவராஜ்,

    நன்றி கடைக்குட்டி,

    நன்றி கவின்,

    நன்றி ஜுர்கேன் க்ருகேர்

  • முக்கோணம் says:
    14 May 2009 at 6:44 pm

    Super post

  • இப்போதெல்லாம் உங்கள் ஆலோசனையின் பேரில் எனது வலைப்பூ தொடர்ச்சியான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

  • sarathy says:
    14 May 2009 at 11:29 pm

    என் பதிவை விகடனில் பார்த்து தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி...

  • Venkatesh Kumaravel says:
    31 May 2009 at 10:39 am

    உபயோகமான பதிவு. ஒரு சின்ன யோசனை... நீங்க டெக் ப்ளாகர்ஸ் எல்லாரும் (தமிழ்நெஞ்சம், டிவிஎஸ்50, சுபாங்கன், நீங்க) எல்லோரும் சேர்ந்து ஒரு க்ரூப் ப்ளாக் திறக்கலாம்.. நிறைய சந்தேகங்களை தீர்த்து வைக்கலாம்..

  • சீமான்கனி says:
    9 August 2009 at 10:39 pm

    தகவலுக்கு நன்றி..

    மிக அருமையான தொடர்பதிவு...

    நான் புதியவன் நீங்கள் கொடுத்த தகவல் எல்லாம் அருமை எனக்கு மிகவும் உதவியாக இருத்து ...
    நான் blogger கு புதியவன்.ஏதோ ஆர்வத்தால் ஓபன் செய்து முழித்து கொண்டிருந்தேன் இப்போது கொஞ்சம் பிடிகிட்டிவிட்டது ...
    நன்றி...அண்ணே.... இன்னும் இதுபோல் எழுதுங்கள் என்னை போன்றவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.....