Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

25 October 2010

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு மதுரை தமிழன்

|4 comments


உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்


திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்து கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம், பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

 

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNNஇணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல்பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவுநடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள்அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டுமணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையைவிட இது தான் மகத்தான சாதனை.


பெயர் : நாராயணன் கிருஷ்ணன்

வயது : 29

இருப்பு : மதுரை


அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.


தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்னசெய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களைதேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்.அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல், தேர்தல், கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒருகோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.


ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டுவேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இதுபோன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 .


இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றிநூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இது போன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடையவாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர்குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க.நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதைகேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரதுசேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர்முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்தகணமும் கூட. 


நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரிகொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடைசெய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்குகூட பொருந்த மாட்டார்கள்.


இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம்செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும்,  இவருடன் ஒரு நாள் இருந்து சிறுஉதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றிஎழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமைகொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவர்.


இப்பொழுது என்னுடைய ஹீரோவும் இவரே....

மேலே எழுதியது அனைத்தும் வேறு ஒரு ரசிகர் எழுதியது. அதை எனக்கு காப்பி செய்து என் மின் அஞ்சல் முகவரிக்கு வந்தது. அதையே இங்கு பேஸ்ட் செய்துள்ளேன். எனது ஹீரோவின் புகழ் என் மூலமாக சிலருக்கு பரவட்டும் என்ற நோக்கத்திலேயே இந்த பதிவு....


இவருக்கு வாக்களிக்க இங்கு கிளிக்கவும் அல்லது இந்த முகவரிக்கு செல்லவும் http://heroes.cnn.com/vote.aspx

இவரைபற்றிய மற்றொரு பதிவு இங்கு

இவரை பற்றிய தினமலர் செய்தி இங்கு

15 June 2008

மதுரை மிக விரைவில்...

|2 comments
எனது மதுரை மிக விரைவில் மெட்ரோ நகரம் ஆகும் என்ற பதிவையும் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பார்ட்-1 பதிவையும் படித்திருப்பீர்கள்... மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பார்ட்-2வை வெளியிடும் முன்னால் அந்த இரண்டு பதிவில் உள்ள படி மதுரை மெட்ரே நகரமாக மாறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது!

கடந்த 10வருடங்களாக மதுரை தத்தனேரி பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த பாலம் கட்டி முடிக்க இரண்டு மூன்று வருடம் கூட ஆகலாம்.

கடந்த 5வருடங்களாக மதுரை பெரியார்நிலையத்திலிருந்து எல்லீஸ்நகர் செல்லும் பாலம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் தான் ஒரு வழியாக ஒரு வழி மட்டும் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. மற்றொரு வழி கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மதுரை பெரியார்நிலையத்தில் அருகே கட்டப்பட்டுள்ள நடைபாதை மேம்பாலம் கடந்த 10வருடங்களாக பூட்டப்படுள்ளது.

மதுரை இராஜாஜி மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள நடைபாதை கீழ்பாலம்(Subway) கடந்த 6வருடங்களாக பூட்டப்படுள்ளது.

மதுரையில் காளவாசல் மற்றும் கோரிப்பளையம் சந்திப்பில் உள்ள Signalகளை தவிர வெறு எந்த சந்திப்பிலும் போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை, விதி முறைகளை மீறுபவர்கள் (Signal Jumping) மீது அங்குள்ள காவல் துறையினர் கன்டிப்பதில்லை.

மதுரையில் வாகனங்களை நிறுத்தும் (Parking) வசதி சரியாக கடைப்பிடிக்கபடுவதில்லை.
இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடங்களில் நாண்கு மற்றும் மூண்று சக்கர வாகனங்கள் நிறுத்துவது.

மதுரை கீழ வாசல் பகுதியில் உள்ள சில கடைகள் காமராஜர் சாலையின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரத்மித்துள்ளனர். இது வரை அதை யாரும் கண்டுகொள்ளாவில்லை.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள தெருக்களை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

அரசியல் தலைவருக்கு பிறந்த நாள் என்றால் அவ்வளவுதான் மதுரை முழுவதும் கட் அவுட் வைத்து போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சல் தான். அரசியல் தலைவருக்கு மற்றும் இல்லாமல் தங்கள் வீட்டு விசேஷத்திற்கும் சில பணம் படைத்தவர்கள் சில முக்கிய சந்த்திப்புகளில் முழுவதும் கட் அவுட் வைத்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்கின்றனர். இதை தடுக்க யாரும் முன் வரவில்லை.

மேற்கூறிய அனைத்து பாலம் வேலைகளையும் துறிதப்படுத்தி சம்மந்த்ப்பட்டவர்களை முடுக்கி விட்டு நடவெடிக்கை எடுக்கலாம்.

பெரியார்நிலையத்தில் அருகே கட்டப்பட்டுள்ள நடைபாதையை உபயேகிக்க இப்போழுது சாலையை கடக்க பயன் படுத்தும் வழியை அடைத்து (சாலையை கடக்க அங்கு ஒரு காவல் துறையை வேறு நியமிக்கப்பட்டுள்ளார்) நடைபாதை மேம்பாலத்தை திறக்கலாம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கடுமையான (லஞ்சம் வாங்கமல்) தண்டனைகள் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

சாலை ஆக்கிரமிப்பை தடுக்க கோவையில் உள்ளது போல் வாகன நிறுத்ததை ஒவ்வொரு மாதமும் மாறி மாறி அமைக்கலாம்.

மேலும் இது போல் பல வித நடவெடிக்கைகள் மூலம் மதுரையை மெட்ரோ நகரமாக்க முதல் அடித்தளத்தளதை அமைக்கலாம் அப்போது தான் நம் மதுரை மெட்ரோ நகரமாக விரைவில் எதிர்பார்க்கலாம்.

8 June 2008

மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructures பார்ட் 1

|5 comments
என்ன எனது போன மதுரை விரைவில் மெட்ரொ நகரமாக மாறும்... பதிவை படித்து மலைத்துவிட்டீர்களா??? இதையும் படியுங்கள்... மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructures...

விமான போக்குவரத்து...

சுமார் 18000 ச.அடி, ஐந்து தானியங்கி படிக்கட்டுகள் (Escalators), ஏழு லிப்ட், நவீன ஸ்கெனிங் வசதி, முற்றிலும் CCTV’s, முழுவதும் கண்ணாடியாலான வெளிபுற தோற்றம் இவை அனைதும் அடங்கிய முற்றிலும் நவீனமையமான கட்டிடம் ரூ.150 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

விமான ஓடுதளம் (Runway) விரிவாக்கம்.

1. ஓடுதளம் 6000 அடியிலிருந்து 7500 அடியாக விரிவாக்கப்படுகிறது அதற்கு அடுத்த படியாக 9000 அடி மற்றும் 12500 அடியாக விரிவாக்கப்பட உள்ளது.

2. Paking Bay 3லிருந்து 6ஆக விரிவாக்கப்பட உள்ளது. ஒரு புதிய parking bay கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

3. மதுரை விமான நிலையத்தில் மற்றொரு எரிபொருள் நிரப்பும் நிலையம் ரிலையன்ஸ்-கிரின் நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.

4. இந்தியன், ஸ்ரீலங்கன், மலெசியன் விமான நிறுவனங்கள் விரைவில் மதுரையிலிருந்து தெற்காசிய நாடுகளுக்கும், Gulf நாடுகளுக்கும், ஐரோப்பா நாடுகளுக்கும் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் விமான போக்குவரத்தை தொடங்க உள்ளது. இந்த நிறுவனங்கள் திருச்சியை விட மதுரையில் போக்குவரத்தை தொடங்க ஆவலோடுள்ளன.

5. சின்ன ஒடைப்பு அருகே சுமார் 2கிமீ Ring Road மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கா அகற்றப்பட உள்ளது. அந்த வழி CIRAC மருத்துவமனையிலிருந்து குசவகுண்டு மற்றும் வளையன்குளத்திற்க்கு திருப்பி விடப்படுகிறது.

இதை போல் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructureல் சாலை போக்குவரத்து பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

2 June 2008

மதுரைக்காரங்க எல்லாரும் மறக்காம படிங்க...

|10 comments
நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கோவில் நகரமான மதுரை ஒரு மெட்ரோ நகரமாக மாறும் என்பதற்கு சில நம்பத்தகுந்த காரணங்கள்...


1.ரூபாய் 100 கோடி முதலீட்டில் மல்டிபிலேக்ஸ், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் ஆர்கேடுகள் ETL கான்வெண்ஸன் சென்டர் மற்றும் ஷாப்பிங்மால் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..


2. சுமார் 2500 ஏக்கர் நிலம் மதுரைக்கு அடுத்துள்ள இளியார்பதி கிராமத்தில் சிப்காட் கையகப்படுதியுள்ளது.


3. மதுரைக்கு தெற்குபகுதியில் உள்ள சோலங்குரினி கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் நிலம் ஆர்.ஆர் இண்டஸ்டிரீஸ் மற்றும் ஐடி டவுன்ஷிப்ற்காக கையகப்படுதப்பட்டுள்ளது. முதல் கட்ட வேலைக்கா வரைபடம் தயாரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. கூடிய விரைவில் வேலை தொடங்ப்பட உள்ளது. அதில் 18000 குடியிருப்புகள் கொண்ட அப்பார்மென்ட், ஒரு மருத்துவமனை, இரண்டு மல்டிபிலேக்ஸ் மற்றும் இரண்டு மிகப்பெறிய ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளன. மேலும் 8மாடிகள் கொண்ட ஐடி பார்க் ஒண்றும் கட்டப்பட உள்ளன. மொத்த மதிப்பீடு ரூபாய்.4500 கோடி.

4. ELCOT நிறுவனம் 2000-10000 ஏக்கரில் மதுரையில் இண்டஸ்டிரியல் சிட்டி தொடங்கப்பட உள்ளது.

5. ரேஸ் கோட் சாலையில் சுமார் 1,60,000 ச.அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமான G+3 ஷாப்பிங் மால் சுமார் 500அடி முன்பக்க காலி இடத்துடன் கட்டப்பட உள்ளது.


6. சுமார் 100ஏக்கரில் டெக்ஸ்டைல் பூங்கா மதுரையில் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூபாய்.35 கோடி.


7. மதுரை விமானநிலையத்திற்கு அருகில் Fortune ITC Welcome குரூப்ஸ் உடைய ரிசாட்ஸ் தொடங்கப்பட உள்ளது.


8. மதுரைக்கு வெளியே சினிமாக்ஸ் மற்றும் அட்லாப்ஸ் மல்டிபிளக்ஸ் அரங்குகள்.


9. பாரமெளன்ட் பைளட் பயிற்சிப்பள்ளி மதுரையில் தொடங்கப்பட உள்ளது.


10. புது நத்தம் சாலையில் பென்டாஸாப்ட்டுடைய விளையாட்டு தீம் பார்க் மற்றும் மாயாஜால் தீம் பார்க் மல்டிபிளக்ஸ் உடன் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூ.200 கோடி.


11.மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சிறுவர்களுக்கான அறிவியல் கோளரங்கம் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூ.25லட்சம்.


12. ஹேலிகாப்டர் போக்குவரத்து ராமேஸ்வரத்திலிருந்து கொடைக்கானலிற்க்கு முதல் கட்டமாக தொடங்கப்பட உள்ளது. பின்பு பழனி, கன்னியாகுமாரி, கோவை போன்ற இடங்களுக்கு தொடங்கப்பட உள்ளது.


13. மதுரைலிருந்த்து 20கி.மீ தொலைவில் வடமலையான் மருத்துவமனை டிரஸ்ட் மற்றும் கமூதி நாடார் சங்கம் இனைந்து காமராஜ் நினைவு மருத்துவ கல்லூரி சுமார் 150 ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது. 300 படுக்கை வசதியுடன் முதல் தர மருத்துவமனை மற்றும் 150 M.B.B.S. இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு வருடத்தில் அனைத்து வேலைகளும் முடிவடையும். 2009ல் அட்மிஷன் தொடங்கப்பட உள்ளது.


14.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் விரிவாக்கம் பழைய அன்னா பேருந்துந்துநிலையத்தில் தொடங்கப்பட உள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட G+6 கட்டிடம். ரூ.35கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


15. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு எதிற்புறம் சுமார் 260 ஏக்கரில் ஐடி தொழில்நுட்ப பூங்கா அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட உள்ளது.


16. அவனியாபுரம் ரிங் ரோடு அருகில் சுமார் 125 ஏக்கரில் 15000 குடியிருப்புகளுடன் கூடிய அப்பார்ட்மென்ட் 9மாடிகளுடன் மிகப் பிரமாண்டமான கட்டிடத்துடன் ஷஹாரா சிட்டி ஹோம்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட உள்ளது.


17. அரிஹாந்த் பவுன்டேஷன் மதுரையில் குடியிருப்பு டவுன்ஷப்பிக்கா 21ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளது.


18. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இந்திய ஆஸ்திரேலியா சூரிய ஆற்றல் திட்டம் தொடங்கப்பட உள்ளது.


19.ரிலயன்ஸ் பிரஷ் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் 11பழைய திரையரங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அவை அனைதும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட காய்கரி மற்றும் இரைச்சி மார்கட் ஆக தொடங்கப்பட உள்ளது.


20. COGNIZANT, IBM, DLF , INFOSYS ஐடி பார்க் தொடங்கப்பட உள்ளது. மேலும் இவை தமிழ் நாட்டில் தென்பகுதியில் உள்ள கல்லூரிகளுடன் டைஅப் வைத்து கொள்வதற்க்காக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.


21. மாட்டுதாவனி அருகே சுமார் 1,00,000 ச.அடியில் ஐடி பார்க் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.


22. அரவிந்த் கண் மருத்துவமனை கண் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகம் (Ophthalmic university) தொடங்கப்பட உள்ளது.


23. கூடல் நகர் அருகில் மிகப்பிரமாண்டமான வெர்ஹவுசிங் காம்பிளக்ஸ் 5ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது.


24. இரண்டு தனியார் நிறுவனங்கள் மதுரையில் இடங்களை வாங்கி குவித்துள்ளனர். 1. சென்னையை சேர்ந்த CEEDEEYES நிறுவனம். 2. துபாய்யை சேர்ந்த ETA ஸ்டார் நிறுவனம்.


25. நவ2007 முதல் பாஸ்போர்ட் அலுவலகம் மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது.


26. ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் திரையரங்கம் GV நிறுவனம் வாங்கி மிக விரைவில் GV ஸ்டுடியோ சிட்டி தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், இரண்டு 3 நட்ஷத்திர ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், சென்னயை சில்க் மற்றும் ஹோட்டல் சரவணா பவன் தொடங்கப்பட்டு உள்ளது.


27. ரூ.3கோடி மதிப்பீட்டில் YMCA இன்டர்னேஷனல் சென்டர் தொடங்கப்பட்டு உள்ளது.


28. மதுரை விமானநிலையத்திற்கு அருகில் 80 அறைகளுடன் AITKER SPENCE ஹோட்டல் தொடங்கப்பட்டு உள்ளது.


29. சுமார் 30ஏக்கர் நிலம் கோச்சடையில் டைடல் பார்க்கிற்ககா ஒதுக்கப்படுள்ளது.


30. மாடகுலத்தில் சிறுநீரக டையாலசிஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்பட்டு உள்ளது.


31. அப்போலோ மருத்துவமனை, மதுரை மற்றும் BASKERSFIELD , கலிபோர்னியா இணைந்து சகல வசதிகளுடன் கூடிய இரத்தம் மற்றும் புற்றுநோய் மையம் தொடங்கப்பட உள்ளது.


32. உலக தரத்துடன் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் கேர் சென்டர் தொடங்கப்பட உள்ளது.


33. சுமார் 10கோடி செலவில் வண்டியூரில் உள் சறுக்கு விளையாட்டரங்கம் மற்றும் பார்க் தொடங்கப்பட உள்ளது.


33. மதுரையில் பூக்கள் ஏற்றுமதிக்காக அக்ரி ஏற்றுமதி ஜோன் தொடங்கப்பட உள்ளது.


34. ஹ்ச் சி எல் நிறுவனம் டிஜிட்டல் லைப் ஸ்டைல் வளாகத்தை தொடங்க உள்ளது.


35. சுமார் 120கோடி மதிப்பீட்டில் தோப்பூரில் AIIMS மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.


36. மதுரை மாநகராட்சியால் விலங்கியல் பூங்கா அழகர்கோவில் அருகில் தொடங்கப்பட உள்ளது.


37. இந்தியாவில் உள்ள அனைத்து முன்னனி நகை கடைகளும் மதுரையில் தன் கிளைகளை ஏற்கனவே தொடங்கி உள்ளது.


மேலும் இதில் சொல்லப்படாத சில விரிவாக்கங்களும் சில தொழில் நுட்ப பூங்காக்களும் சில மருத்துவமனைகளும் அமைக்கப்படலாம்.


இதை போல் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்...

26 May 2008

மதுரை...

|0 comments
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை. சுமார் 2500 ஆண்டுகள் கலாச்சார பாரம்பரியம் கொண்டது. பாண்டிய மன்னர்களின் பேர் சொல்லும் தலைநகரமாக விளங்கியது. 550 ஆண்டுகளுக்கும் மேலாக கலாச்சாரம் மற்றும் வர்த்தக மையமாக திகழும் ஒப்பற்ற இடம். வற்றாத நதியாக விளங்கும் வைகையின் கரையில் அமைந்துள்ள மதுரைக்கு வையகத்துள் என்றுமே சிறப்பிடம்தான். தூங்கா நகரம் என்ற சிறப்புப்பெயரும் மதுரைக்கு உண்டு.



மதுரையில் பார்க்கத்தகுந்த சிறப்புமிக்க இடங்கள்



மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
மதுரையின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். திராவிடர்களின் கட்டிட கலைக்கு ஒரு மாபெரும் சான்று. இக்கோவிலை முதலில் அமைத்தது குலசேகர பாண்டியமன்னன் ஆவான். அக்காலத்தில் கதம்பவனம் என்ற பெயரில் காட்டுப்பகுதியாக மதுரை இருந்ததாம். அப்போது ஒரு கதம்பமரத்தின் அடியில் சுயம்புலிங்கத்தை வைத்து இந்திரன் வழிபடுவதைக்கண்ட விவசாயி தனஞ்செயன் என்பவர், இதை குலசேகர பாண்டியமன்னனின் காதில் போட, அதிசயப்பட்டுப்போன மன்னன் உடனடியாக இந்திரன் வழிபட்டதாக சொல்லப்பட்ட பகுதியில் காடுகளை அகற்றி கோவில் அமைத்தான், அதைத்தொடர்ந்து உருவானதே மதுரை நகரம் என்றும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.



மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை அமைத்தது குலசேகர பாண்டிய மன்னன் என்றாலும் அதை மேலும் அழகுப்படுத்தி தற்போதைய வடிவத்துக்கு காரணமாகவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நாயக்க மன்னர்கள் ஆவர். சுமார் ஆறு ஹெக்டேர் பரப்பளவில் கோவில் வளாகம் அமைந்துள்ளது.12 கோபுரங்கள் அழகுற காட்சி அளிக்கின்றன. இதில் தென்பகுதியில் உள்ள பிரதான பிரம்மாண்ட கோபுரத்தில் மட்டும் 1500 சிற்பங்கள் கலை வேலைப்பாடுகளுடன் கவர்ந்திழுக்கின்றன கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் அக்கால கட்டிட கலைக்கு அசைக்கமுடியாத சான்றாக விளங்குகிறது. இதில் தூண்களின் எண்ணிக்கை மட்டும் 985 ஆகும். ஒரு முறை மீனாட்சி கோவிலுக்குள் வலம் வந்து விட்டாலே போதும். கண்முன் பார்க்கும் ஆதாரங்கள், நம்மை குலசேகர பாண்டியனின் காலத்திற்கே கொண்டு சென்று விடும். அழகர் கோவில்
மதுரையில் இருந்து சுமார் 21கி.மீ தூரத்தில் உள்ள விஷ்ணு கோவில்தான் அழகர் கோவில். இங்குள்ள அழகான சிற்பங்கள் மேலும் மேலும் பார்க்க தூண்டும்.



பழமுதிர்ச்சோலை
அழகர்கோவிலில் இருந்து சுமார் 2கி,மீ தூரத்தில் உள்ள குன்றுதான் பழமுதிர்ச்சோலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று.



திருமலைநாயக்கர் மகால்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருமலை நாயக்கர் மகால். 1636ம் ஆண்டில் மதுரையை ஆட்சி செய்ய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் இங்கு இசை, நடன நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வந்துள்ளன. இம்மண்டபத்தின் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. மண்டபத்தின் உள்ளே மேற்கூரையில் செய்யப்பட்டுள்ள மரவேலைப்பாடுகளும், இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தூண்களும் கற்பனைக்கும் எட்டாத கலைக்கவிதைகள். ஒவ்வொரு தூணும் 20 மீட்டர் உயரமும், 4மீட்டர் சுற்றளவும் கொண்டது. திருமலை நாயக்கர் கட்டிய இம்மகாலின் பழைய வடிவம் இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு பிரம்மாண்டமானது என்பதும் கூடுதலான ஒரு ஆச்சரியத்தகவல்.



திருப்பரங்குன்றம்
மதுரையில் இருந்து சுமார் எட்டு கி.மீ தூரத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருக பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று என்பதால் எப்போதும் இங்கு முருகனுக்கு அரோகரா சரணகோஷம்தான்.



இவற்றுடன் கூடல் அழகர் கோவில், கோச்சடை அய்யனார் கோவில், ஷ்ரீஅரவிந்தர் அன்னை தியான மண்டபம், திருமோகுர் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், ராமகிருஷ்ண மடம் என பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன. அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவும், பெண்கள் பெருமளவில் பங்கேற்கும் முளைப்பாரி விழாவும் மதுரையில் பிரசித்தம்.



உணவு, தங்குமிடம், போக்குவரத்து
தமிழக பாரம்பரிய உணவு வகைகளை மதுரையில் ஒரு பிடிபிடிக்கலாம். மல்லிப்பூ இட்லி (ரொம்பவே மிருதுவானது), சாம்பார், பலவகைச்சட்னி மதுரையின் தனி ருசி. தங்குமிடங்களை பொறுத்த வரை அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற ஹோட்டல்கள் உள்ளன. விமானநிலையம், ரயில் நிலையம் உள்ளதால் எந்தப்பகுதியில் இருந்தும் மதுரைக்கு வந்து விடலாம். அழகான சாலை வசதியும் உண்டு. சென்னையில் இருந்து சுமார் 400 கி.மீ தூரத்தில் உள்ளது.



யப்பா....இப்பவே கண்ணைக்கட்டுதே...ங்கிறீங்களா. போடுங்க மதுரைக்கு ஒரு விசிட்டை.