11 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2

என்னுடைய உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1 படித்து உங்கள் பிளாகில் உள்ள குறைகளை நிவர்த்திசெய்து கொஞ்சம் மெருகூட்டியதுபோல் தெரிகிறது. அதில் சில பொதுவான கருத்தகள் விடுபட்டுள்ளன அவற்றை முதலில் பார்த்துவிட்டு பின்பு HTML மாயாஜலத்திற்கு செல்வோம்.



சில பொதுவானவை

1-5 இங்கு சென்று படிக்கவும்

6. எப்போதுமே உங்கள் Profileயை மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி வைக்கவேண்டாம். இதனால் நீங்கள் பின்னூட்டம் இடும்போது உங்களின் பிளாக்கை மற்றவர் பார்த்து படிப்பதை நீங்களே தடுப்பதுபோல ஆகிவிடும்.

7. உங்கள் பிளாக்கினுள் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த பாட்டையோ அல்லது வேறு எந்தவிதமான ஒலியோ தானாக வரும் படி செய்யாதிர்கள். இதனால் அமைதியான சூழ்நிலையில் உங்கள் பிளாக்கினுள் நுழைந்தால் படிப்பவர் அல்லோல பட்டுவிடுவார்.(எனக்கு பல முறை அனுபவம்)

8. உங்கள் பிளாக்கின் Templateயை பின்பகுதி (Back Ground) கண்டிப்பாக வெள்ளை நிறத்திலேயும் எழுத்துகள் கறுப்பு நிறத்திலேயும் இருப்பது நலம். இதனால் எழுத்துகள் உடனடியாக பார்வைக்கு தெரியும்.

9. நீங்கள் இப்போது தான் பிளாக் எழுத ஆரம்பித்துள்ளிர்கள் என்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டாம். சொல்ல வந்ததை ரத்தின சுருக்கமாக சொலிவிடவும். இதனால் உங்கள் வாசகர்கள் உங்கள் எழுத்தை பார்த்து மலைப்படியாமல் படித்துவிட்டு செல்வார்கள்.

10. உங்கள் பிளாகின் முகவரி அனைவரும் நினைவில் வைத்து கொள்ளும் மாறு இருக்கவேண்டும். குறிப்பாக பிளாகின் பெயரில் - _ போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அதாவது kricons-technology அல்லது kricons_technology போன்று இருக்ககூடாது

11.எழுத்து பிழை உங்கள் பிளாக்கின் மெருகை குறைப்பதாக நினக்கவேண்டாம். இங்கு உங்கள் பிளாக்-ஐ படிப்பவர் அனைவரும் தமிழரே. அவர்கள் புரியும் நீங்கள் சொல்லவந்ததை.

இப்போதைக்கு (உங்க போதைக்கு நாங்க தான் கிடைச்சோமா?) இதை கடைபிடித்தாலே உங்கள் பிளாக்-ஐ மெருகூட்டலாம். இங்கு நான் எழுதியது எல்லாமே ஏதோ நானே யோசிச்சு எல்லாம் எழுதவில்லை. எல்லாம் சில தமிழ் பிளாக்கில் எனக்கு தவறு என்று தோன்றியதைதான் இங்கு சுட்டிகாட்டியுள்ளேன். இந்த தவறு உங்கள் பிளாக்கிலும் இருக்கலாம். அதை நீக்கி மெருகூட்டுங்கள்.

சரி தவறை பார்த்தாச்சு இனி சரியை பற்றி அதாவது HTML மாயாஜாலங்களை சேர்ப்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

11 comments:

  • Sasirekha Ramachandran says:
    11 May 2009 at 5:08 pm

    simply superb and very useful for all.

  • Suresh says:
    11 May 2009 at 5:34 pm

    summaa super a iruku machan kalakura ..

    i liked last point he he he he

  • முக்கோணம் says:
    11 May 2009 at 8:28 pm

    நல்ல தகவல். நன்றி நண்பரே..

  • பெருங்காயம் says:
    11 May 2009 at 8:51 pm

    தொடர்ந்து, தெரிந்துகொள்கிறேன். நன்றி

  • சித்து says:
    13 May 2009 at 11:11 am

    மிகவும் உபயோகமாக இருக்கிறது, உங்களை பின்தொடர ஆரம்பித்து விட்டேன். ஒரு சிறிய உதவி செய்ய கோருகிறேன்.

    என்னுடைய Template-il நிறைய கோட்ஸ் நீங்கள் கூறியது TVS-50 கூரியது Tamilish, Tamilmanam, Related posts, Rating, இன்னும் சில சேர்த்துள்ளேன் இப்பொழுது Template மாற்றினால் அந்த கோட்ஸ் அனைத்தையும் ஒவ்வொன்றாக மறுபடியும் சேர்க்க வேண்டுமா??

    அதே போல் இட்லிவடை-il வருவது போல் தலைப்பு ஒரு சிறிய முன்னுரை பிறகு "மேலும் படிக்க" Link அடுத்த தலைப்பு........... இது போல் வர என்ன செய்ய வேண்டும்?? முழு பதிவுகளும் வருவதால் என் Blog Load ஆக நேரம் ஆகிறது, பார்க்கவும் அழகாக இல்லை.

    நன்றி
    சித்து.

  • KRICONS says:
    13 May 2009 at 4:00 pm

    Thanks Sasirekha Ramachandran

  • KRICONS says:
    13 May 2009 at 4:01 pm

    Thanks Suresh

  • KRICONS says:
    13 May 2009 at 4:01 pm

    நன்றி முக்கோணம்

  • KRICONS says:
    13 May 2009 at 4:01 pm

    நன்றி விஜய்

  • KRICONS says:
    13 May 2009 at 4:04 pm

    நன்றி சித்து,

    ///இப்பொழுது Template மாற்றினால் அந்த கோட்ஸ் அனைத்தையும் ஒவ்வொன்றாக மறுபடியும் சேர்க்க வேண்டுமா??///

    ஆம் கண்டிப்பாக நீங்கள் Template மாற்றும் முன் அந்த Codeகளை காப்பி செய்து கொள்ளவும்.

    ///முழு பதிவுகளும் வருவதால் என் Blog Load ஆக நேரம் ஆகிறது, பார்க்கவும் அழகாக இல்லை. ///
    அப்படி செய்வதால் உங்களின் பதிவி சீக்கிரம் லோட் ஆகாது. அதை பற்றி தனி பதிவில் சொல்கிறேன்

  • சித்து says:
    13 May 2009 at 4:56 pm

    ஓஹோ ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கும் போலயே. சரி நீங்க அதையும் சொன்னதுக்கு பிறகு மாற்றுகிறேன். நன்றி.