8 April 2011

ஹசாரே புறக்கணிக்கும் தமிழக தொலைக்காட்சி

|0 comments

புறக்கணிக்கும் தமிழக தொலைக்காட்சி

ஊடகங்கள் அரசியல்வாதிகள் கையில் இருந்தால் என்ன நடக்குமோ! அது தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. ஹசாரே செய்யும் போராட்டம் திருடனுக்கு தேள் கொட்டியதைப்போல இருப்பதால் தங்கள் தொலைக்காட்சிகளில் இது பற்றி காட்டவே இல்லை. அப்படியே இருந்தாலும் ரொம்ப சிறு செய்தியாக காண்பித்து இருப்பார்கள். வட மாநிலத்தையே இவரது போராட்டம் உலுக்கிக்கொண்டு இருக்கிறது ஆனால் நேற்று சன் டிவி தலைப்பு செய்திகளில் இது பற்றி ஒன்றுமே இல்லை. சன் டிவி செய்திகள் ஐந்து நிமிடம் கலைஞர் பேச்சு பத்து நிமிடம் வடிவேல் பேச்சு ஐந்து நிமிடம் கேப்டன் உளறல் பற்றியது.. தினமும் இது தான் அவர்கள் செய்தி அட்டவணை. இது பற்றி கூறினால் தங்களுக்கே ஆப்பு என்பதை அறிந்து ஹசாரே போராட்டம் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்து வருகிறார்கள். இப்படி இருந்தால் தமிழ்நாடு எங்கே விளங்கும்?

மக்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டியது ஊடகங்களின் கடமை ஆனால் தங்களுக்கு வேண்டியதை மட்டும் ஒளிபரப்பி செய்தியாக காட்டிக்கொண்டு இருப்பது தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

யார் இவர்? தெரிந்துகொள்ள 

இவரின் வலைத்தளம் 

 

ஹசாரே பற்றிய செய்திகளை படிக்க
 

விகடன்
தினமலர்

 

1 April 2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

|0 comments

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது (2) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால், குஜராத்தில் இலவசங்கள் கிடையாது, ஓட்டுக்கு பணம் கிடையாது, டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்),
கரண்ட் கட் கிடையாது, இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ, பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள் (ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!).

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது, ஓட்டுக்கு பணம் கிடையாது, டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்), கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ, பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம் (தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல. மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும். இது அநியாய, அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ, அடிபணிந்தாலோ, ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம். உலகம் நம்மை காரி உமிழும்.

இதை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.

நல்ல வரலாறு படைப்போம்.
நன்றி!  எனக்கு வந்த மின் அஞ்சல்  தான் நீங்கள் மேலே படித்தது.