19 May 2009

பிரபல தற்பெருமை பதிவாளர் தனக்குத்தானே அடித்துக்கொண்ட ______அடி

|29 comments
நேற்று நமது பிரபல(என்று சொல்லிக்கொள்ளும்) தற்பெருமை(அப்படிப்பட்ட செயலகளை செய்து கொண்டிருக்கும்) பதிவாளரின் பிரபாகரன் பற்றிய பதிவை படிக்கசென்றேன். அவரது அந்த பதிவை மறுத்து ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருந்தார். யார்மேலேயோ உள்ள கடுப்பில் அந்த பிரபல தற்பெருமை பதிவாளார்
அனானி ____களா ரீடிப், எண்டிடிவி, தினமலர், விகடன் இணையதளங்களில் போய் ________. இங்கே வந்தால் ______ படுவீர்கள்.Blogger

இவ்வாறு திட்டியுள்ளார். அதற்கு நான் ஒரு பிரபல தற்பெருமை பதிவாளரின் பதிவில் இப்படிப்பட்ட வார்த்தைகளா என்று

கொஞ்சம் நாகரீகமாக எழுதலாமே... அப்படி அனானி கமென்ட் வேண்டாம் என்றால் அந்த ஆப்ஸனையே எடுக்கலாமே???
Delete
என்று ஒரு பதில் பின்னூட்டம் கொடுத்தேன். இதில் ஒண்றும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதற்க்கு பதில் அவரே ஒரு அனானியாக வந்து (நன்றாக கவனிக்கவும்) அவரே ஒரு அனானியாக வந்து
Anonymous
Anonymous said...
_____,
yaaruda _____.. neethaan__.. unga thalaivan thaan___...
இவ்வாறு கூறுகிறார்.

இதற்கு "என்ன தலைவா என்னை திட்டுவது போல உன்னை நீயே ____ என்று திட்டிக்கொண்டு உன்னை நீயே____பால் அடித்துக்கொள்கிறாயே நீ ரொம்ப நல்லவன் தலைவா"

என்று பதில் பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். அதானால் அப்படியே விட்டுவிட்டேன்.

அவர் பதிவை சென்று படிக்கும் அனைவரயும் ஆடு மாடு என்று அவரே அவர் வலைபதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆம் ////வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்!//// ஆடு மாடு தான் மேயும்!!!

என் வழக்கமான பதிவை எதிர்பர்த்து படிக்க வரும் என் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டதற்க்காக. :(

சில அநாகரீகமான வார்த்தைகள் என் பதிவில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சில இடங்களில் சில வார்த்தைகளை நீக்கி உள்ளேன். :(

"இங்கு முதல்வன் படத்தில் கடைசியில் அர்ஜூன் கூறும் வசனத்தை போட்டுக்கொள்ளவும்"

17 May 2009

தோப்புகரனம் போட்டால் மூளைக்கு நல்லது

|3 comments
பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. (சிலர் உக்கி போடுவது என்றும் சொல்வார்கள்). நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன். அப்படி போடுவது உங்கள் மூளையின் திறனை அதிகரிப்பதாக சில மருத்துவர்கள் கண்டரிந்துள்ளனர். இப்படி இந்தியாவில் ஆதி காலத்திலேயே கண்டறியப்பட்டது இந்த தோப்புகரணம் மட்டுமல்ல பல் வேறு மூலிகை வைத்தியமும் தான். ஆனால் இதை எல்லம் இப்போது தான்ஆராய்ச்சி செய்து இது நல்லது அது நல்லது என்று வெளிநாட்டினர் நமக்கே கூறி வருகின்றனர். இந்த நகர் படத்தை பாருங்கள் தோப்புகரனம் போட்டால் மூளைக்கு நல்லதாம்.


16 May 2009

Format செய்யப்பட்ட டிரைவிலிருந்து கோப்புகளை மீட்க

|14 comments
லினக்ஸ் லினக்ஸ்ன்னு சொல்றாங்களே அது எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம்ன்னு சொல்லி என் கிட்ட இருந்த பழைய லினக்ஸ் C.D யை எடுத்தேன் அது ஏதோ ஒரு மென்பொருள் நிறுவுவது போலதான் இருக்கும் என்று நினைத்து நானே அதை நிறுவ முயர்சித்தேன்.(அங்க வந்ததுதான் வினை). அதை நிறுவ ஒரு Drive செலக்ட் செய்யுமாறு கேட்டது. நானும் ஒரு மென்பொருள நிறுவ அப்படிதானே கெட்ட்கும் என்று நினைத்து என்னுடைய ஒரு டிரைவை செலக்ட் செய்தேன். (ஆனால் அந்த டிரைவ் Format செய்யப்பட்டுவிட்டது)

என்ன காரணமோ தெரியவில்லை பல முறை முயர்சித்தும் அந்த் லினக்ஸ் ஆனது சரியாக என் மடிக்கணினியில் நிறுவ முடியவில்லை. சரி அந்த லினக்ஸ் வேணாம் என்று நினைத்து Windowsல் போகலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சரி இதுக்கு மேல் ரிஸ்க் வேணாம் என்று ஒரு Service Engineerஇடம் மடிக்கணினியை சரி செய்துதருமாரு கொடுத்தேன்.

அவரும் அவர் பங்கிற்கு ஒரு டிரவை Format செய்து ஒரு வழியாக சரி செய்து கொடுத்தார். நல்ல வேலை எனது முக்கிய கோப்புகள் அடங்கிய டிரைவ் தப்பித்தது. இருந்தாலும் அந்த டிரைவ்களில் உள்ளது தேவைப்படும் கோப்புகளே. அதை மீட்க ஏதாவது மென்பொருள் உள்ளதா என்று தேடினேன் தேடினேன்... எல்லாம் Format செய்யப்படுவதற்கு முன்னால் உள்ள் கோப்புகளை எந்த மென்பொருளும் கண்டுபிடிக்க வில்லை.

மிக நீண்ட தேடலுக்கு பின் கிடைத்ததுதான் Recover My Files மென்பொருள். இதில் நீங்கள் Format செய்த Driveகளில் இருத்தும் கோப்புகளை மீட்கலாம்.

Download Recover My File V3.98

இப்போது என் மடிக்கணினியில் அந்த லினக்ஸை வெற்றிகரமாக நிறுவிட்டேன்.

13 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4

|11 comments
பகுதி-1 பகுதி-2 பகுதி-3
பொதுவானவை
நீங்கள் உங்கள் Profile பகுதியில் கண்டிப்பாக உங்கள் புகைபடத்தையோ அல்லது வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த படத்தையோ வைக்க வேண்டும். இதனால் நீங்கள் ஒரு பிளாக்கை Followசெய்யும் போது முன்னால் தெரிவீர்கள். அதாவது எனது பிளாக்கில் தற்போது 59பேர் Follow செய்கிறார்கள். நீங்கள் 60 நபராக Follow செய்ய நினைத்தால் புகைபடம் இருந்தால் மட்டுமே முன் பக்கத்தில் காண்பிக்கும். புகைபடம் இல்லாமல் இருந்தால் கடைசியாகதான் காண்பிக்கும். அதனால் உடனே புகைபடத்தை உங்கள் Profileல் நிறுவுங்கள்.

3. Go to TOP Arrow

இப்போதெல்லாம் சில பிளக்களில் வலது பக்கமாக கீழே நீங்கள் படத்தில் உள்ளது போல ஒரு Arrowவை பார்க்கலாம். எனது பிளாக்கிலும் உள்ளது. இதற்கு Go to TOP Arrow என்று சொல்வார்கள். உங்கள் பிளாக்கில் Go to TOP என்ற ஒரு பட்டனை நிறுவவதால் உங்கள் பிளாக்கின் கீழ்பகுதி வரை சென்று படிக்கும் வாசகன் (???!!!) எளிதாக மேல் பகுதிக்குசெல்ல உதவும். அதற்கு நீங்கள் கீழே உள்ள Codeயை Layoutல் Page elementல் Add Gadgetல் Html or JavaScriptல் போட்டுக்கொள்ளவும்.

<a style="display:scroll;position:fixed;bottom:5px;right:5px;" href="#" target="_self" title="Back to Top"> <img src="http://www.ranegrouppune.com/images/top-arrow.jpg"/> </a>


4.Favorite Icon

Favorite Icon என்பது உங்கள் Browserல் Address barல் உங்கள் பிளாக்கின் முகவரியை அடையாளமாக காட்டும் ஒரு சிறிய படம். இது பொதுவாக blogspot.comக்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் உங்கள் விருப்பம் போல இதை மாற்ற கீழே உள்ள Codeஐ படத்தில் உள்ளது போல Layoutல் Edit HTMLல் ]]></b:skin> மற்றும் </head>ற்கு இடயில் ஒட்டவும். இங்கு-உங்கள்-படத்தின்-முகவரி என்ற இடத்தில் எந்த படம் உங்கள் FavIcon ஆக வர வேண்டும் என்று நினைக்கிறேர்களே அந்த படத்தின் முகவரி. நம்ம தமிழ்நெஞ்சம் அவரோட படத்தியே வைத்திருப்பார். நீங்கள் கொடுக்கும் படம் அனிமேசனாக இருந்தால் உங்கள் FavIcon அனிமேசனாக காட்சிதரும். 18000மேற்பட்ட அனிமேசன் FavIconகளை பெற நீங்கள் இந்த தளத்திற்கு செல்லலாம்

<link href="'<span" style="color: rgb(255, 102, 0);">இங்கு-உங்கள்-படத்தின்-முகவரி</span>' rel='shortcut icon' type='image/x-icon'/><br><link href="'<span" style="color: rgb(255, 102, 0);">இங்கு-உங்கள்-படத்தின்-முகவரி</span>' rel='icon' type='image/gif'/>


இந்த தொடர் கண்டிப்பாக உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட உதவி இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் கொடுத்தவை எல்லாம் ஏதோ கல்லூரிக்கு சென்றது கற்றது இல்லை. எல்லாம் நம்ம அண்ணாச்சி கொடுத்தது தான். யாரு அந்த அண்ணாச்சி என்று கேட்கிறேர்களா அதாங்க நம்ம Google அண்ணாச்சி. என்ன கேட்டாலும் கொடுக்கிறவர்.

12 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3

|19 comments
பகுதி-1 பகுதி-2

ஏற்கனவே பிளாக்கில் சிலர் செய்யும் பொதுவான சில தவறுகளை அல்லது எனக்கு தவறு என்று தோன்றியதையும் பார்த்துவிட்டோம். இனிமேல் உங்கள் பிளாக்கை சின்ன சின்ன HTML மற்றும் சில Codeகளை கொண்டு எப்படி மெருகூட்டலாம் என்று பார்போம். முதலில் உங்கள் பிளாகினுள் நுழைந்தவர் வெளியே போகாதவாறு செய்யவேண்டும். அதற்கான சில Codeகளை பற்றி பார்போம்.

1. படங்கள்
நீங்கள் பதிவில் படங்களை வைத்திருப்பீர்கள் அதை கிளிக்கி பெரிதாகிபார்க்க உங்கள் வாசகன் ஆசைபடுவான். அதை கிளிக்கினால் உங்கள் பிளாக் முகவரியில் இருந்து வெளியேறி படத்தின் முகவரிக்கு சென்று படத்தை காட்டும். இதனால் மீண்டும் உங்கள் பதிவிற்கு வாசகன் வருவது சந்தேகமே. அதனால் அந்த படங்களை வேறு முகவரிக்கு செல்லாமல் பார்க்க உதவுவதுதான் நண்பன் TVS50 கொடுத்த Code.

<script src='http://tvs50.110mb.com/imgbox/imgload.js' type='text/javascript'/>

இந்த Codeயை Layoutல் உள்ள Edit HTML பகுதியில் உள்ள <head> ற்க்கு கீழே ஒட்டவும்(Paste செய்யவும்). இதனால் உங்கள் வாசகன் உங்கள் முகவரியை விட்டு வெளியேறாமலயே அந்த படத்தை ரசிக்கலாம்.

2.Linkகள்
அடுத்ததாக உங்கள் பிளாக்கில் உள்ள லின்க்களை கிளிக்குவதால் உங்கள் வாசகன் உங்கள் முகவரியை விட்டு வெளியே செல்ல வாய்பை நாமே ஏற்படுத்திக்கொடுக்கிறோம். அனால் அந்த ஒவ்வொரு லின்க்கை கிளிக்கும்போதும் தனித்தனியாக வேறு Windowவிலோ அல்லது Tabயிலோ திறக்கும்படி செய்தால் உங்கள் முகவரியை விட்டு வெளியேராமல் உங்கள் வாசகன் இருப்பான். அதற்கு <base target='main'/> இந்த Codeயை Layoutல் Edit Justify FullHTML பகுதியில் சென்று <head>கீழே ஒட்டவும். அவ்வளவுதான் இனி உங்கள் பதிவில் உள்ள ஒவ்வொரு லின்கும் இனிமேல் தனி Windowவில் தான் திறக்கும்.

ஆனால் இப்படி எல்லா லின்க்கையும் நீங்கள் தனி Windowவில் திறப்பதால் சில சமயம் வாசகன் எரிச்சல் ஆகவும் வாய்பிருக்கிறது. அதானால் சில குறிப்பிட்ட லின்க்களை அதே Windowவில் திறக்க நீங்கள் விரும்பினால் அந்த Linkன் முடிவில் target="_self சேர்த்துகொள்ளவும். உதாரணமாக <ahref="http://www.AWSurveys.com/HomeMain.cfm?RefID=kricons">Surveyமூலம் சம்பாதிக்க/a> இந்த Link அதே Windowவில் Open செய்ய <ahref="http://www.AWSurveys.com/HomeMain.cfm?RefID=kricons"target="_self>Surveyமூலம் சம்பாதிக்க/a>. இவ்வாறு மாற்ற வேண்டும்.

இன்னமும் வரும்.

11 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2

|11 comments
என்னுடைய உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1 படித்து உங்கள் பிளாகில் உள்ள குறைகளை நிவர்த்திசெய்து கொஞ்சம் மெருகூட்டியதுபோல் தெரிகிறது. அதில் சில பொதுவான கருத்தகள் விடுபட்டுள்ளன அவற்றை முதலில் பார்த்துவிட்டு பின்பு HTML மாயாஜலத்திற்கு செல்வோம்.சில பொதுவானவை

1-5 இங்கு சென்று படிக்கவும்

6. எப்போதுமே உங்கள் Profileயை மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி வைக்கவேண்டாம். இதனால் நீங்கள் பின்னூட்டம் இடும்போது உங்களின் பிளாக்கை மற்றவர் பார்த்து படிப்பதை நீங்களே தடுப்பதுபோல ஆகிவிடும்.

7. உங்கள் பிளாக்கினுள் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த பாட்டையோ அல்லது வேறு எந்தவிதமான ஒலியோ தானாக வரும் படி செய்யாதிர்கள். இதனால் அமைதியான சூழ்நிலையில் உங்கள் பிளாக்கினுள் நுழைந்தால் படிப்பவர் அல்லோல பட்டுவிடுவார்.(எனக்கு பல முறை அனுபவம்)

8. உங்கள் பிளாக்கின் Templateயை பின்பகுதி (Back Ground) கண்டிப்பாக வெள்ளை நிறத்திலேயும் எழுத்துகள் கறுப்பு நிறத்திலேயும் இருப்பது நலம். இதனால் எழுத்துகள் உடனடியாக பார்வைக்கு தெரியும்.

9. நீங்கள் இப்போது தான் பிளாக் எழுத ஆரம்பித்துள்ளிர்கள் என்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டாம். சொல்ல வந்ததை ரத்தின சுருக்கமாக சொலிவிடவும். இதனால் உங்கள் வாசகர்கள் உங்கள் எழுத்தை பார்த்து மலைப்படியாமல் படித்துவிட்டு செல்வார்கள்.

10. உங்கள் பிளாகின் முகவரி அனைவரும் நினைவில் வைத்து கொள்ளும் மாறு இருக்கவேண்டும். குறிப்பாக பிளாகின் பெயரில் - _ போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அதாவது kricons-technology அல்லது kricons_technology போன்று இருக்ககூடாது

11.எழுத்து பிழை உங்கள் பிளாக்கின் மெருகை குறைப்பதாக நினக்கவேண்டாம். இங்கு உங்கள் பிளாக்-ஐ படிப்பவர் அனைவரும் தமிழரே. அவர்கள் புரியும் நீங்கள் சொல்லவந்ததை.

இப்போதைக்கு (உங்க போதைக்கு நாங்க தான் கிடைச்சோமா?) இதை கடைபிடித்தாலே உங்கள் பிளாக்-ஐ மெருகூட்டலாம். இங்கு நான் எழுதியது எல்லாமே ஏதோ நானே யோசிச்சு எல்லாம் எழுதவில்லை. எல்லாம் சில தமிழ் பிளாக்கில் எனக்கு தவறு என்று தோன்றியதைதான் இங்கு சுட்டிகாட்டியுள்ளேன். இந்த தவறு உங்கள் பிளாக்கிலும் இருக்கலாம். அதை நீக்கி மெருகூட்டுங்கள்.

சரி தவறை பார்த்தாச்சு இனி சரியை பற்றி அதாவது HTML மாயாஜாலங்களை சேர்ப்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

9 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1

|15 comments
இந்த பரந்து விரிந்த வலையுலகில் பெரும்பாலான பிளாக்கர்கள் மென்பொருள் வல்லுனர்களே. ஒரு சிலரே என்னை போல வேறுதுரை வல்லுனர்கள்(வல்லுனரா நீயா???). எப்படி இருந்தாலும் வலையுலகிற்கு வந்து விட்டால் எழுத்துக்கள் தான் பேசும். உங்கள் பதவியோ வேலையோ இங்கு ஒண்றும் செல்லாது.

சில மென்பொருள் வல்லுனர்கள் தங்கள் பிளாக்கில் பல விதமான கோடிங்களை கொண்டு தங்கள் பிளாக்கை மெருகூட்டியிருப்பார்கள். நானும் ஒண்றும் உங்களுக்கு சளைத்தவன் இல்லை என்னும் அளவுக்கு வேறு துரை சார்ந்தவர்கள் தங்களின் பிளாக-ஐ வடிவமைத்திருப்பார்கள். இன்னும் சில மென்பொருள் வல்லுனர்களே தங்கள் பிளாக்-ஐ எப்படி மெருகூட்டுவது என்று தெரியாமல் இருப்பார்கள். எதோ எனக்கு தெரிந்த சில சின்ன சின்ன விஷயக்களை இதில் தந்துள்ளேன்.


உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட

முதலில் பொதுவான விஷயங்களை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்
1. பின்னூட்டத்தில் இருக்கும் Word வெரிபிகேசனை எடுத்து விடவும். இதனால் உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர் சலிப்படையாமல் பின்னூட்டம் எழுதுவார்.

2. நீங்கள் டைப் செய்யும் போது அடுத்த வரிக்கு செல்லா Enter தட்ட வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த Paragarph செல்ல மட்டுமே enter தட்டினால் போதுமானது. இதனால் உங்கள் வரிகள் அழகாக தெரியும்.

3. கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று வரிகளுக்கு ஒரு முறை இடைவெளி விட வேண்டும். இது படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும் பார்க்கவும் அழகாகவும் இருக்கும்.

4. நீங்கள் புது Template மாற்றும் போது எல்லா Linkகளும் சரியாக வேலை செய்கிறதா என்று பல முறை சரிபார்த்த பின்பே மாற்றவும். ஒரு பதிவாளரின் பிளாக்கில் Comment இடும் வசதியே இல்லை. அந்த அளவிற்கு அந்த Template உள்ளது.

5.குறிப்பாகா நீங்கள் கவனிக்க வேண்டியது RSS Link, தேதி காண்பிக்கும் பகுதி. ஒரு பதிவரின் வலையில் தேதி தெரியும் பகுதியில் இன்னமும் undefined என்றே தெரிகிறது. அதை நீங்கள் Settings சென்று Formatting பகுதியில் மாற்றலாம்.

இதெல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்பவர்கள் தெரியாத உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். அவரின் பிளாக்கை மெருகூட்ட கற்றுக்கொடுங்கள். இங்கு சொன்னவை எல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தான். அடுத்த பகுதியில் பிளக்கர்களுக்கு பயன் படும் முக்கியமான் HTML Coding பற்றி பகுதி-2ல் பார்போம்.

8 May 2009

அழகர் திருவிழாவும் அழகிரி தேர்தல் திருவிழாவும்

|8 comments
தலைப்பை பார்த்துட்டு இது அரசியல் பதிவுன்னு நினைச்சா தயவு செய்து நீங்கள் படிக்க வேண்டாம். எங்க ஊர்ல அழகர் திருவிழாவும் அழகிரி தேர்தல் திருவிழாவும் கலை கட்டிக்கிட்டுருக்கு. அதனால என் பதிவிற்க்கு ஒரு இரண்டு நாள் விடுமுறை அழிக்கலாம்ன்னு நினைத்தேன். (இங்க பார்ரா..) இருந்தாலும் ஒருவாரமா தொடர்ந்து பதிவு எழுதிட்டு திடீர்ன்னு இப்படி செஞ்சா நல்லா இருக்காதுன்னு அந்த அழகிரியே தப்பு தப்பு அந்த அழகரே கனவுல வந்து சொன்னார். அதனால ஒரு ஒப்பேத்தல் பதிவு தான் இது.


நீங்கள் Iphone வாங்கலாம்ன்னு யோசிக்கிறீங்களா. அப்ப கண்டிப்பா கீழ் உள்ள நகர் படத்தை பார்த்துட்டு போங்க.ஆனால் இந்தமாதிரி கைபேசி சாத்தியமா இல்லையான்னு தெரியல ஆனா வந்தா நல்லா இருக்கும்ன்னு தோனுது.

7 May 2009

யூத்ஃபுல் விகடனக்கு ஒரு குட்டு...

|19 comments
முதன் முதலில் என் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தவுடன் சந்தோசமாக இருந்தது. அதை பார்த்தவுடன் ஒரு யூத்ஃபுல் விகடனுக்கு ஒரு நன்றியும் என் பதிவு விகடனில் என்ற ஒரு தற்பெருமை பதிவையும் என்னை போல பலரும் எழுதுவார்கள். இது ஒரு தமிழ் பிளாகரின் கடமையாகவே பலரும் கருதிவருகின்றனர்.

இவ்வளவு ஏன் பலரும் அது எப்படிங்க விகடனில் என் பதிவு கொண்டுவருவது என்று நண்பர் வடிவேலுவும் பின்னூட்டத்தில் கேட்டுள்ளார். அட நம்ம கடைக்குட்டி அவருக்கும் விகடனில் வரும் ஆசையை கனவில் வந்துள்ளதாக ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். நான் படித்த வரையில் இதெல்லாம் இன்னும் நான் படிக்காமல் விட்டது எத்தனையோ.

இவ்வளவு மதிப்பும் மரியாதையும் நம் பிளாகர் சமூகமே அதன் மீது வைத்துள்ளது. இதை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் வெளிவந்ததுதான் நேற்றைய குட் Blogs பகுதி. ஆம் நேற்றைய குட் Blogs பகுதியில் ஒரு பதிவு அப்படியே போனவாரம் ஒரு வாரப்பத்திரிக்கையில் வெளிவந்தது. காப்பி அடித்து அவர் எழுதியுள்ளார் அதுவும் குட் பிளாக்காம் கொடுமைடா சாமி. இதிலே இன்னோரு கொடுமை என்னன்னா அந்த வாரப்பத்திரிக்கையும் அதை எதோ ஒரு இடத்திலிருந்து சுட்டது. நம்மில் பலர் ஏற்க்கனேவே அதை படித்திருப்போம்.

எந்த அடிப்படையில் குட் பிளாக் தேர்ந்தெடுக்கப்படுகிறது? இந்த அளவிற்க்கு பெரிய பத்திரிக்கை இப்படியா??? யானைக்கும் அடி சருக்கும் என்பது இது தானோ??? இதே போல் முன்புபொரு முறை நம்ம தமிழ்நெஞ்சத்தின் ஒரு பதிவை ஒருவர் அப்படியே காப்பி செய்திருந்தார். அந்த காப்பி அடித்தவரின் பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்திருந்தது. அதை அடுத்து டூப்ளிகேட் பிரியர் விகடனாருக்கு நன்றி என்று ஒரு பதிவையும் போட்டார்.

எத்தனையோ நல்ல ஒரிஜினல் பிளாக்கர்கள் நம் பதிவு யூத்ஃபுல் விகடனில் வராதா என்று ஏங்கிகொண்டிருக்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக் 5நிமிடத்திற்க்கு ஒரு பதிவு இந்த வலையுலகில் வெளியாகிறது. அதில் எத்தனையோ நல்ல ஒரிஜினல் பிளாக்குகள் உள்ளன. நான் அந்த வாரப்பத்திரிக்கயில் சுட்டவரை ஒன்றும் சொல்லவில்லை. அவர் படித்த நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிரார். இப்படியே போனால் விகடனிலிருந்து சுட்டு போட்டாலும் குட் பிளாக்கில் வெளிவரலாம் யார் கண்டார்???

இனி மேல் இந்த தவறு இல்லாமல் யூத்ஃபுல் விகடன் பார்த்துக்கொள்ளும் என்று தோன்றுகிறது.

6 May 2009

புகைபடங்களை நகர்படமாக மாற்ற

|8 comments
புகை வண்டியை இப்பொது தொடர் வண்டி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அது போல டிஜிட்டல் படங்கள் தான் இப்பொதெல்லாம். ஆனால் இன்னும் புகைப்படம் என்றே சொல்கிறோம்.(டிஜிட்டல் படங்களுக்கு தமிழ் வார்த்தை என்ன பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்).

இப்போதெல்லாம் எந்த ஒரு விஷேசமானாலும் போட்டோகிராபர்கள் இருந்தாலும் நம் நண்பர்கள் ஆள்ளாளுக்கு ஒரு டிஜிட்டல் கேமிராவை தூக்கிகொண்டு வந்து விடுகின்றனர். அப்படி டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் புகைபடங்களை நீங்கள் Orkutலோ Picasaவிலோ போட்டுவிடுவார்கள் . கணினி மற்றும் இணைய வசதி உள்ளவர்கள் தான் அதை பார்க்க முடியும். இன்னும் சிலர் CDயிலோ அல்லது DVDயிலோ அதை பதிந்து வைப்பார்கள். அதையும் கணினி வசதியுடன் தான் பார்க்க முடியும். ஒரு சில பிளேயரில் தான் புகைபடத்தையும் பார்க்கும் வசதி உள்ளது.

இனிமேல் நீங்கள் எடுத்த புகைபடங்களை அட்டகாசமாக ஒரு நகர் படத்தைபோல பின்னனி இசையுடன் தயாரிக்கலாம். இதற்கு உங்கள் கணினியில் Windows Media Played 10 இருக்க வேண்டும். Windows Media Played 10 இங்கு பதிவிறக்கலாம். உங்ககிட்ட ஒரிஜினல் விண்டோஸ் இல்லையா அப்போ இங்கு பதிவிறக்கிகோங்க. அந்த புகைபடங்களை நகர்படமாக்கும் மென்பொருள் இங்கு பதிவிறக்கலாம். உங்ககிட்ட ஒரிஜினல் விண்டோஸ் இல்லையா அப்போ இங்கு பதிவிறக்கிகோங்க. இதில் ஒவ்வொரு படத்துக்கும் நீங்கள் தலைப்பும் இடலாம். மேலும் பல வசதிகள் உள்ளது. அனுபவிச்சாதான் தெரியும்.ஒரு தமிழ் பிளாகரின் கடமையை ஆற்றியதற்கான சான்றைபார்க்க படத்தை கிளிக்குங்கள். கடமையை ஆற்றுங்கள்


5 May 2009

உங்கள் பிளாக்ஐ பிரபலம் ஆக்குவது எப்படி

|45 comments
என்னடா தலைப்பை பார்ததுமே எதோ மொக்கை பதிவுன்னு நினைக்க வேண்டாம். இது நிஜமாகவே உருப்படியான பதிவு. (அதை நாங்க சொல்லனும்). இந்த பதிவு கண்டிப்பாக இப்பதான் பதிவுலகிற்க்கு காலடி எடுத்து வைத்திருபவர்களுக்கும், இனிமேல் பதிவு எழுதலாம் என்று நினைப்பவர்களுக்கும் எத்தனையோ பதிவை போட்டாச்சு இன்னும் ஹீட்டாக முடியலயே (என்னை போல) என்று கவலைபடுபவர்களுக்கும் உபயோகமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன் இந்த பதிவை எழுத முன் உதாரணமாக இருந்த நண்பர் பற்றி கடைசியில் சொல்கிறேன்.

உங்கள் பிளாக்ஐ பிரபலமாக்க
1. முதலில் எல்லா வலைபதிவாளர்களிடமும் நன்றாக பழகிய நண்பனை போல மாப்பிளே மச்சான் அளவிற்கு பழக வேண்டும்.

2. கண்டிப்பாக அப்போது தான் ஆரம்பிக்கபட்ட பிளாக்காக இருந்தாலும் Follow செய்ய வேண்டும்.

3. ஒரு வலைபதிவாளரின் முதல் பதிவு மொக்கையாக இருந்தாலும் அதில் உள்ள நல்ல எழுத்தை சுட்டிக்காட்டி அந்த புது வலைப்பதிவாளருக்கு பின்னூட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்.

4. உங்களுக்கு வரும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும். குறைந்தது நன்றியாவது சொல்ல வேண்டும்.

5. பிளாக் ஆரம்பித்தவுடனே மீடியமாக பிரபலமான பிளாக்கில் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். அப்படியே உங்கள் பிளாகின் முகவரியையும் கொடுக்க வேண்டும்.

6. கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும்.

7. நீங்கள் எழுதும் எழுத்து உங்களின் சொந்தமாக இருக்கவேண்டும் தவிர கண்டிப்பாக காப்பி அடிக்க கூடாது. (இத நீ சொல்லக் கூடாது)

8. உங்களின் பதிவை ஞாயிற்றுக்கிழமைகளில் பதியக்கூடாது. அப்படியே பதிந்தாலும் அன்று Tamilish மற்றும் தமிழ்மணத்தில் பகிரக்கூடாது. மறு நாள் பகிரலாம். இதனால் உங்கள் மதிப்புமிக்க எழுத்துக்களை விடுமுறையில் இருப்பவர்கள் படிக்க முடியாமல் போகலாம்.

9. மேலே சொன்னவை அனைத்தும் செய்தால் மட்டும் உங்கள் பிளாக்ஐ பிரபலப்படுத்த முடியாது.(என்னடா சொல்ல வர்ர???) கண்டிப்பாக சரக்கு இருக்க வேண்டும். எதை பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள் அனால் அது யார் மனதையும் புன்படுத்தாமல் இருப்பது நலம்.

10. இங்கு நான் சொன்னவை அனைத்தும் நண்பர் சக்கரை சுரேஷ் செய்தவைதான். அதானால் நீங்களும் இதை எல்லம் செய்தால் அவரை போல் பிரபலம் ஆகலாம் என நினக்க வேண்டாம். உங்கள் பதிவில் சரக்கு(அப்பதே இருந்து சரக்கு சரக்கு என்கிறீயே என்ன சரக்கு) இருந்தால் மட்டுமே பலர் படிக்க வருவார்கள். நீங்கள் இதை எல்லம் எதுவும் செய்யாமலேயே நண்பர் PKP போலும் பிரபலமாகலாம். விரைவில் பிரபலமாக வாழ்த்துக்கள்.

சரி இந்த பதிவிற்க்கு ஏன் இந்த படத்தை போட்டிருக்க என்று கேட்பது புரிகிறது. படத்தை கிளிக்கி பெரிதாக்கி பாருங்கள். இதுவரை ஒரு தமிழ் பிளாகரின் கடமையை ஆற்றியதற்கான சான்றுதான் இது. ஆம் இப்போது வரை Tamilishல் நான் போட்ட வோட்டுக்கள் 1400க்கும்மேல். நீங்களும் உங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்கான பிரச்சாரம் தான் இது. கடமையை ஆற்றுங்கள்

4 May 2009

மிகப் பெரிய கோப்புகளை மின் அஞ்சல் அனுப்ப

|13 comments
இன்றைய உலகில் மின் அஞ்சல் இல்லாத ஒரு வாழ்க்கையை யோசித்துபார்கவே பயமாக உள்ளது. (மின் அஞ்சல் இல்லாமல் ஒரு நாள் அல்லது கணினி இல்லாமல் ஒரு நாள் என்று யாரவது ஒரு பதிவு போடலாம்). இந்த மின் அஞ்சல் அனைத்தும் இலவச சேவை என்பது சிறப்பு. (மின் அஞ்சல் அனைத்தும் கட்டணமானால் இன்னொரு பதிவும் போடலாம்).


இப்படி இலவச சேவை அளிக்கும் மின் அஞ்சல் தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. முதலில் ஒரு குறிப்பிட்ட இடங்களை மட்டுமே இலவச மின் அஞ்சல் உபயோகிப்பாளர்காளுக்கு கொடுத்தார்கள். இப்போது எந்த மின் அஞ்சல் தளத்தை எடுத்தாளும் Unlimited இடத்தை கொடுக்கிறார்கள். இப்படி Unlimited இடத்தை கொடுக்கும் அவர்கள் 10MB அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும்.

அப்படி மிகப்பெரிய கோப்புகளை அனுப்ப சிலர் megaupload மற்றும் rapidshare போன்ற தளங்களை பயபடுத்துவார்கள் ஆனால் இது இவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லையாம். அதானால் இவர்கள் அறிமுகப்படுத்தியது தான் Filemail.com

இதன் சிறப்பு அம்ஸம் என்ன வென்றால், இதில் நீங்கள் Register செய்ய வேண்டியதில்லை. இதில் மூன்று வகையான சேவைகளை நமக்கு அளிக்கிறார்கள். இலவச சேவை இதில் நீங்கள் 2GB அளவுள்ள கோப்புகளை அனுப்பலாம். ஆனால் இதில் அதிகபட்சம் அந்த கோப்பு 3நாட்களுக்கு மட்டுமே Downlaod லிங்க் வேலை செய்யும் என்பது ஒரு கவலையான விஷயம்.

பிரிமியம் சேவை மற்றும் கார்பரேட் சேவை அளிக்கிரார்கள். நமக்கு இலவசமே போதும் என்கிறவர்கள்தான் இந்தியாவில் அதிகம் என நினைக்கிறேன். இருந்தாலும் கட்டண சேவையான பிரிமியம் சேவயை பற்றி தெரிந்து கொள்ள இங்கும் கார்பரேட் சேவை பற்றி தெரிந்து கொள்ள இங்கும் செல்லலாம். நீங்கள் இந்த பக்கதிற்க்கு செல்வதால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை.

Go to Filemail


3 May 2009

யூத்ஃபுல் விகடனுக்கு சில யோசனைகள்

|8 comments
ஏற்கனவே இந்த பிளாக்கில் Tamilishற்கு சில யோசனைகள் படிச்சிருப்பீங்க. படிக்காதவங்க இங்க வந்து படிச்சுக்கோங்க. என்னடா இவன் ஒரே யோசனையா சொல்கிட்டு இருக்கானே இவனுக்கு யாராச்சும் ஒரு யோசனை கூட சொல்ல மாட்ராங்களேன்னு நினைக்கிறீஙளா??? உடனே ஒரு பதிவை போடுங்க. (தலைப்பு KRICONS போன்றவர்களுக்கு யோசனை). உலகத்திலேயே இலவசமாகவும் Cheepஆகவும் கிடைக்கும் ஒன்னே ஒன்னு யோசனை தான். (சரி மேட்டருக்கு வா). சரி இப்போ யூத்ஃபுல் விகடனுக்கு எதோ எனக்கு தோன்றிய சில யோசனைகள். (குறிப்பாக பிளாக் பக்கத்திற்கு மட்டும்)

1. குட்... Blog பகுதியை சில வகைகளாக பிரிக்கலாம். அதாவது தொழில்நுட்பம், கவிதை, கதை, கட்டுரை, மொக்கை போன்றவற்றில் குறைந்தது இரண்டு பிளாக்களை ஒவ்வொரு பிரிவிலும் வெளியிடலாம்.

2. குட்... Blog பகுதியின் கீழேயே Blogs கார்னரின் Linkயை கொடுக்கலாம். இதனால் புதிதாக வருபவர்கள் மற்ற பிளாக்களை படிக்க வருவார்கள்.

3. Blogs கார்னர் பகுதியிலும் வகைகளாக பிரித்துக்கொடுத்தால் வாசகர்களுக்கு வசதியாக இருக்கும். யாருக்கு எந்த வகை பிடிக்கிறதோ அந்த Blogயை படிக்க அவ்ர்களுக்கு வசதியாக இருக்கும்.

4. யூத்ஃபுல் விகடன் மூலமாக ஒரு பிளாக் எத்தனை முறை படிக்கப்பட்டது என்ற விவரத்தை Blogs கார்னர் பகுதியில் Blogன் அருகிலேயே தெரியுமாரு செய்யலாம். இதனால் பலருக்கு பிடித்த Blog பலரும் படிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திகொடுக்கலாம்.

5. ஒரு மாதத்தில் அதிகமாக யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த வளைபதிவாளரை ஒவ்வொரு மாதமும் கெளரவிக்கலாம்.

உங்களுக்கு தெரிந்த யோசனைகளையும் பின்னூட்டத்தில் கொடுக்கலாம்.1 May 2009

டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து அழிக்க

|10 comments
எனது மடிக்கணியில (அதுதாங்க LAPTOP) மொத்தமே 40GB தாங்க.(இப்போ என்கிட்ட இருக்கிற Pen Driveவே 32GB) 6வருடங்களுக்கு முன் வாங்கியது. விலை 40K சொச்சம். (சரி இப்ப அதெல்லாம் எதுக்கு இங்க சொல்ற). அப்படி 40GB இருக்கிற Driveல 5GB இடம் ஒரே கோப்பே இரண்டு இடங்களில் இருந்ததால் நிரப்பியுள்ளது. முக்கியமாக MP3 ஆடியோ மற்றும் Image கோப்புகளே.

அதாவது நன்பன் ஒருவன் புதிய பாடல்கள் அடங்கிய MP3 DVD வாங்கிட்டு வந்துருப்பான். அதில் உள்ள பாட்டுகள் சிலவட்றை ஒரு Folderல் Copy செய்து வத்திருப்பேன். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய MP3 DVD கிடைக்கும். மீண்டும் Copy வேறு ஒரு Folderல். இப்படியே சில பாடல்கள் இரண்டு முறை Copy செய்யப்பட்டிருக்கும். அதே போல தான் சில புகைப்படங்களும். நீண்ட நாட்களாக இப்படிப்பட்ட டூப்ளிகட் கோப்புகளை கண்டுறிந்து அழிக்க ஏதாவது மென்பொருள் கிடைக்குமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இது போல உங்கள் கணினியிலும் கண்டிப்பாக நூற்றுக்கணக்கான ஏன் சில கணினிகளில் ஆயிரக்கணக்கான கோப்புகள் கூட இருக்கலாம்.

தற்செயலாக கண்ணில் சிக்கியதுதான் இந்த Duplicate Cleaner மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருள் என்பது மேலும் சிறப்பு. இதில் நீங்கள் எந்த கோப்புகளை மட்டும் தேட வேண்டும் என்று குறிப்பிடலாம். உதாரணமாக Image File மட்டும் தேட வேண்டும் என்றாலோ அல்லது ஆடியோ கோப்புகளை மட்டும் தேட்ட வேண்டும் என்றாலோ அதற்கு தனியாக Options உள்ளன. இது கண்டுபிடித்து கொடுக்கும் Duplicate புகைப்பட கோப்புகளை அழிப்பதற்கு முன்னால் அதை Preview பார்க்கும் வசதி உள்ளது.

Duplicate Cleaner பதிவிறக்க

இங்கு கண்டிப்பாக கிளிக்க வேண்டாம்