29 April 2009

என் பதிவு விகடனில்

|7 comments
அப்பாடா ஒரு வழியாக நானும் விகடனில் வந்தாச்சு... பல பேர் இதேபோல பதிவை போட்டிருப்பாங்க அதை எல்லாம் படிக்கும் போது என்னடா நம்ம பதிவு எப்படா விகடன்ல வரும்னு நினைப்பேன். வந்துருச்சு... ரொம்ப நன்றி விகடன் தாத்தா. எனக்கு ஆதரவு அளித்த உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.

விகடனில் வந்த பதிவுகள்
Gtalkல் ஒளிந்துகொள்ள
ஆன்லைன் மோசடி ஒரு அனுபவம்

யூத்ஃபுல் விகடன் பக்கம் செல்ல கிளிக்குங்கள்

யூத்ஃபுல் விகடன் பிளாக் பக்கம் செல்ல

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதையும் கிளிக்கிடுங்க

28 April 2009

Gtalkல் ஒளிந்துகொள்ள

|5 comments
ஏற்கனவே Yahooவில் ஒளிந்துள்ளவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு பதிவில் பார்த்தோம். இப்போது Gtalkல் எப்படி ஒளிந்துகொள்வது என்று பார்ப்போம். Gmailல் தான் Invisible Mode உள்ளது. அதுவும் சமீபத்தில்தான் அதையும் கொண்டுவந்தார்கள். இன்னும் Gtalkல் அந்த வசதி கொண்டுவரவில்லை.

Gtalkல் invisible mode வசதியை பெற நீங்கள் GTalk Labs Edition பதிவிறக்க வேண்டும். அதை இங்கு பதிவிறக்கலாம். உங்கள் பழைய GTalk தனியாகவும் GTalk Labs Edition தனியாகவும் இருக்கும். GTalk Labs Editionல் Invisible mode மட்டும் தான் உள்ளது தவிற மற்றபடி உங்களுக்கு Gtalkல் கிடைக்கும் வசதிகளான Voice chat கிடைக்கவில்லை.



இந்த கவலையை போக்கவும் ஒரு மென் பொருள் உள்ளது. (அப்புறம் ஏண்டா அதை சொல்லை என்று நீங்கள் கேட்பது தெரிகிறது) அதில் நீங்கள் முழுவதும் ஒழிந்துகொள்ள முடியாது. என்ன புரியவில்லையா??? அதில் எப்போதுமே Idelயாக இருக்கலாம். அதை நீங்கள் GTalkலேயே பயன் படுத்தலாம். அந்த மென்பொருளின் அளவும் வெறும் KBகளில் மட்டுமே. மிகவும் பயனுள்ளது. இங்கு அந்த மென்பொருளை பதிவிறக்கலாம்.




நீங்கள் ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை
இதையாவது கிளிகுங்கள்

27 April 2009

கூகுள் Adsenceற்கு போட்டியாக

|10 comments
கூகுள் Adsence என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நம் வலைபதிவில் உள்ள சில வார்த்தைகளை கொண்டு தானாகவே அது சம்மந்தபட்ட விளம்பரங்களை நம் வலைப்பதிவில் கொடுக்கும். இதனால் நிறைய பேர் இப்போதும் வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் எப்போதோ கூகுள் Adsenceல் பதிவு செய்துருப்பார்கள்.

ஆனால் இப்போதோ கூகுள் Adsenceல் இப்படி அப்படி என்று பல விதிமுறைகளை கொண்டுவந்துவிட்டனர். அதில் முக்கியமானது தமிழ் மொழியில் உள்ள வலைதளத்தில் அவர்கள் விளம்பரங்களை அனுமதிக்கமாட்டார்களாம். (தமிழனுக்கு இலங்கையில் தான் அடி என்றால் கூகுள் Adsenceலுமா???).

இப்படி இன்னும் நிறைய பேர் கூகுள் Adsenceபோல ஏதாவது வருமா நாம் ஏதாவது வருமானம் ஈட்டமுடியுமா என்று ஆவலுடன் இருந்திருப்பார்கள். இது சம்மந்தமாக என் வலைப்பதிவில் வருமானம் என்ற பதிவை எழுதினேன். ஆனால் அவை எல்லாம் எதோ ஒருவர் நம் வலைப்பதிவை பார்த்து விளம்பரம் கொடுத்தால் தான் உண்டு. (இதெல்லாம் நடக்குற காரியமா)

ஆனால் இப்பொது கூகுள் Adsenceற்கு போட்டியாக Guruji நிறுவனம் கழத்தில் இரங்கியுள்ளது. கூகுள் Adsenceபோல் கட்டுப்பாடு ஏதும் இல்லை அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இங்கு சென்று ஒரு கணக்கை தொடங்குங்கள். AdCode Creat செய்யுங்கள் உங்கள் வலைப்பதிவில் விளம்பரம் செய்யுங்கள் வருமானம் ஈட்டுங்கள்.

Go to Guruji Ads



இந்த Guruji Adsence பற்றி தெரிந்தது நம்ம சர்க்கரை பதிவில் உள்ள விளம்பரம் மூலமாக நன்றி சுரேஷ்.

26 April 2009

நெருப்பு நரி தமிழில்... Firefox in Tamil....

|8 comments
கணினி உலகில் இந்த பிளாக் என்று ஒன்று வந்த பிறகு தமிழ் நன்றாக வளர்ந்துள்ளதாக தெரிகிறது. பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும் பிளாக் எழுதும்போதாவது Computerயை கணினி என்று பயன் படுத்துகிறோமே அது போதாதா தமிழின் வளர்சிக்கு.

இப்போது தமிழில் நெருப்பு நரி உலவி என்று அழைக்கப்படும் Fire Fox browser தான் உலகம் முழுக்க அனைவராலும் அதிகம் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் நம் தமிழ் மக்கள் உலகில் எல்லா மூலைகளிலுருந்தும் இணையத்தில் உலவுகின்றனர். அவர்களுக் இந்த நெருப்பு நரி உலவியை பயன் படுத்துவது அதிகரித்துவிட்டது.(சரி இதெல்லாம் நீ சொல்லிதான் எங்களுக்கு தெரியனுமா??? மேட்டருக்கு வா...)

இப்படி தமிழை இணயத்தில் சர்வ சாதரணமாக பயன் படுத்தும் நாம் அதற்கு உருதுனையாக இப்போது நமது நெருப்பு நரி உலவியையும் தமிழில் இருந்தால் எப்படி இருக்கும். அதற்க்கு பயன் படுவது தான் இந்த Add on. இந்த Add onயை உங்கள் நெருப்பு நரி உலவியில் நிறுவினால் File, Edit, View போன்ற அனைத்து மெனுக்களும் தமிழில் தெரியும். அப்படி தெரிவதற்க்கு சில Settingகளை உங்கள் Firefoxல் மாற்ற வேண்டும். உங்கள் உலவில் Address barல் about:config என்று டைப்பி என்டர் அழுத்தவும். எச்சரிக்கயை படித்து மீண்டும் என்டர் அழுத்தவும். இப்ப வார பக்கத்தில் மேல Filter Zone என்று ஒன்று இருக்கும். அதுல general.useragent.locale என டைப் செய்யவும். அதில் Valueவில் en-US னு இருக்கும். அதுக்கு மேல ரைட் க்கிளிக் பண்ணி en-US பதிலாக ta-LK னு டைப் செய்யவும் ( Case Sensitive வோட). அவ்வளவு தான் உங்கள் Firefoxயை Restart செய்யவும். நன்றி சுபாஷ்

இந்த Add on யை பயன் படுத்தி நீங்கள் எந்த விதமான மென்பொருளும் இல்லாமல் எளிதாக தமிழில் தட்டச்சு செய்யலாம் அதுவும் உங்க்ள் விருப்பம் போல. இதில் அஞ்சல், தமிழ்99, பாமினி, பழைய மற்றும் புதிய தட்டச்சு, இன்ஸ்க்ரிப்ட் மற்றும் அவ்வை போன்ற முறைகளில் தட்டச்சலாம்.

அதுபோல இந்த Add on யை பயன் படுத்தி தமிழ் வார்த்தைகளை சரிபார்க்களாம் (Spell Checker) ஆனால் இது இன்னும் சோதனையில் தான் உள்ளது. நீங்களும் சோதனை செய்யலாம்.

24 April 2009

Tamilishற்கு சில யோசனைகள்

|20 comments
இன்றைய தமிழ் வலைபதிவர்களின் உலகில் தமிழிஷ் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தெரியாதவர்கள் இங்கு கிளிக்கி தெரிந்துகொள்ளாம் ஏற்கனவே என் முந்தைய பதிவில் தமிழிஷ் பற்றி எழுதியிருக்கிறேன். இப்படி ஒரு வலைதளம் இல்லை என்றால் இன்றைய வலைபதிவர்கள் பலர் வெளி உலகிற்கு தெரியாமலே இருந்திருக்ககூடும்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல சேவையை தமிழிஷ் வழங்கிவருகிறது. இந்த சேவயை இன்னும் எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று எதோ எனக்கு தெரிந்த சில யோசனைகளை இந்த பதிவின் மூலம் தெரிவிக்கிறேன். நீங்களும் உங்கள் யோசனைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

1. தமிழிஷ்ன் முதல் பக்கத்தில் பிரபலமான அதாவது அதிக வாக்குகள் பெற்ற இடுக்ககளை 12மட்டுமே இப்போது காண்பிக்கப்படுகிறது. அதை 20 அல்லது 25 ஆக உயர்தலாம்.

2. தமிழிஷ்ல் பெரும்பாலும் தற்போது பிளாகுக்ளே(Blogs) பகிரப்பட்டு வருகிறது. அதானால் தமிழ்மணத்தில் உள்ளது போல Feedயை பயன்படுத்தி தானாகவே பகிரும் வசதியையும் கொடுக்கலாம்.

3. ஒரு இடுக்கயை Submit செய்யும் போது தானாகவே அந்த இடுக்கைக்கான தலைப்பை மற்றும் அந்த இடுக்கையின் முதலில் உள்ள சில வரிகளை தேர்ந்தெடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தால். இதனால் சுலபமாக இரண்டு கிளிக்கில் ஒரு புது இடுக்கையை Submit செய்யலாம். (No Typing Required)

4. தமிழ்மணத்தில் உள்ளது போல அதிக வாக்குகள் பெரும் வலைபதிவருக்கு நட்சத்திர பதிவராக அறிமுகம்செய்து கௌரவிக்கலாம்.

5. Bloggerயை தவிற Wordpress போன்றவற்றிக்கும் வோட்டளிப்பு பட்டையை வசதியை கொடுக்கலாம்.

இப்போதைக்கு என் மனதில் தோன்றிய சில யோசனைகளை கூறியுள்ளேன். உங்களுக்கு இது போல தோன்றினால் பின்னூட்டத்தில் அவசியம் கொடுக்கவும்.

22 April 2009

விண்டோஸ் விளையாட்டுகளை எளிதாக முடிக்கலாம்

|1 comments
இந்த Free cell Gameயை எப்படியாவது முடித்தே தீரனும்ன்னு முடிவோட இருக்கேங்க ஆனா முடியலயா???

அதேபோல solitaire Gameயும் வெற்றி பெறனும் என்று நினைக்கிறிர்களா???

இந்த நகர்படத்தை பாருங்க புகுந்து விளையாடுங்க...



20 April 2009

ரேட் ஏறிடுச்சுங்க...

|3 comments
தலைப்பை பார்த்ததும் எதோ நான் வாங்கிய ஷேர் விலையோ அல்லது இடத்தின் விலையோ ஏறிடுச்சுன்னு நினக்கவேண்டாம். நான் சொல்ல வந்தது என் பிளாக்கின் ரேட்டை பற்றி. சில நாட்களுக்கு முன்பு பிளாக்கின் மதிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

அதில் என் பிளாகின் மதிப்பு $564.54 ஆக இருந்தது. அடுத்தடுத்த என் பதிவால் உங்களின் வருகை அதிகரித்து தற்போது என் பிளாகின் மதிப்பு $1129.08 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கண்டிப்பாக நீங்கள் மட்டுமே. உங்களுக்கு கோடானகோடி நன்றிகள். அப்படி இப்படி மொதல்ல காப்பிஅடிக்க ஆரம்பிச்சு இப்ப சொந்தமாக எழுத ஆரம்பிச்சாச்சு இந்த பதிவு என்னோட 100வது பதிவு.

உங்கள் பிளாகின் மதிப்பை அறிய கிளிக்குங்கள். அதெல்லாம் சரி யாராவது வாங்க யாராவது இருக்கீங்களா??? தள்ளுபடியும் உண்டு. புரோக்கர் கமிஷனும் உண்டு. Recession வந்து ரேட் எல்லாம் குறைய வாய்பே இல்லங்க. சீக்கிரம் வாங்கிகோங்க இல்ல இன்னும் ரேட் ஏறும்.

17 April 2009

Yahooவில் ஒளிந்துள்ளவர்களை கண்டுபிடிக்க

|13 comments
இப்போது கிட்டத்தட்ட எல்லா Messangerகளிலும் Invisible mode உள்ளது. Invisible mode என்பது நாம் Online இருப்பது எவருக்கும் தெரியாது. சமீபத்தில்தான் Googleல் கொண்டுவந்தார்கள். ஆனால் இன்னமும் Gtalkல் இந்த வசதி இல்லை. இதன் மூலம் தேவை இல்லாத நன்பர்களின் தொந்தரவுகளிலிருந்து தப்பலாம். ஆனால் அதற்கும் வந்து விட்டது ஆப்பு.

உங்கள் நண்பர் அல்லது மேலதிகாரி உண்மையாகவே Offlineல் உள்ளார்களா அல்லது Invisibleல் உள்ளார்களா என இந்த முகவரிக்கு என்று உங்கள் நண்பரின் Yahoo IDயை கொடுத்தால் போதும் உடனடியாக இந்த தளம் தோல் உரித்துக்காட்டிவிடும். அதேபோல உங்கள் நண்பரும் இந்த தளத்தை பயன் படுத்தி உங்கள் நிலைமையையும் அறியலாம் ஜாக்கிரதை.

yahoo invisible
அதே போல இந்த தளத்தில் இந்த பக்கத்திற்க்கு சென்றால் மேலே உள்ள படத்தினைபோல linkம் கொடுக்கிறார்கள். அதை உங்கள் Blogகளிலும் அமைத்துக்கொள்ளாம்.

Go to detectinvisible

16 April 2009

விண்டோஸ் 7 இலவசமாக வாழ்நாள் முழுவதும்

|12 comments
பெரும்பாலானோர் இப்போது விண்டோஸ் விஸ்டா பயன்படுத்த தொடங்கிவிடனர். சிலர் இப்போதுதான் பயன்படுத்த தொடங்கியிருப்பார்கள் சிலர் இன்னும் விண்டோஸ் XPயை தான் பயன் படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

இன்னமும் நம் ஊரில் DTP வேலைக்காக விண்டோஸ் 98 பயன்படுத்துவது உண்டு! அவர்களை கேட்டால் விண்டோஸ் 98 போல சுலபமாக எதுவும் இல்லை என்பார்கள். இன்னும் சிலர் இரண்டும் வைத்திருப்பார்கள்.

அது போல விண்டோஸ் XP இப்போது நிறைய பேர் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். XPயை பழைய கணினியிலும் நிறுவலாம். ஆனால் விண்டோஸ் Vista அல்லது இனிமேல் வரும் விண்டோஸ் 7 யை நிறுவ நீங்கள் புதுக்கணியைதான் வாங்கவேண்டும்.

விண்டோஸ் Vistaவை நிறுவ உங்கள் கணினியில் இருக்க வேண்டியவைகளை இங்கு தெரிந்துகொள்ளாம். விண்டோஸ் 7 உங்கள் கணினியில் நிறுவ நிச்சயம் விண்டோஸ் Vistaவின் கணினி தேவையை விட உங்கள் கணினியில் செயல்பாடு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.

எண்னோட கணினியில Vistவே நிறுவ முடியல இதுல 7 வேறயா என்று புலம்புவது தெரிகிறது. கவலைய விடுங்க... உங்கள் விண்டோஸ் XPயை அப்படியே விண்டோஸ் 7 ஆக மாற்றக்கூடிய மென்பொருள்தான் Seven Remix XP. இதை உங்கள் XP கணினியில நிறுவிட்டீங்கனா போதும். உங்கள் கணினியே அழகாகும்.

Download Seven Remix XP

13 April 2009

கல்யணா கலெக்சன்ஸ்

|4 comments
என்னங்க என்னோட காதல் கலெக்சன்ஸ் படிச்சியிருப்பீங்க.... படிக்காதவங்க இங்கே வந்து படிச்சுக்கோங்க. அட நமக்கு காதல் எல்லாம் வேணாம்பா இந்த காதலே பிடிக்காது எப்படிப்பா காதலில்லிருந்து தப்பிப்பது என்று இங்கே தெரிஞ்சுக்கோங்க...

டைரக்டா கல்லாணம்தான் என் சொல்பவரா நீங்கள்??? உங்களுக்குதான் இந்த பதிவு

பொண்னுபார்க்க போறிங்களா??? இதையும் இதையும் கண்டிப்பா படிச்சுட்டு போங்க

அதுக்கு முன்னாடி இதையும் படிச்சா பொண்னு உங்க கிட்ட என்னென்ன கேள்வி கேப்பாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்

இதெல்லாம் முடிஞ்சுருச்சுப்பா இனிமே திருமணம் தான் அப்படின்னு சொல்லுபரா நீங்கள் முதிலில் திருமணம்ன்னா என்னன்னு இங்கும், இங்கும், இங்கும் தெரிஞ்சுக்கலாம்

கல்யாணம் எல்லாம் முடிஞ்சுருச்சுப்பா அப்படிங்கிறிர்களா??? புதுமண தம்பதிகள் கண்டிப்பாக இதையும் இதையும் படிங்க


மனைவியை எப்படிப்பா கவர்வது என கேட்கிறிர்களா இதை படிங்க

கல்யாணம் எல்லாம் முடிஞ்சுருச்சு ஆனா அவ என்ன பேசுரான்னுதா புரியலா என்பவர்கள் இதை படிங்க

இந்த வயதிலெல்லாமா காதல் வரும் என கண்டிப்பாக நினைப்பீர்கள் இதை படித்தால்...

என்னடா இவன் காதல்ன்றா கல்யாணம்ன்றா ஏதாச்சும் டிரிக் இல்லனா டிப்ஸ் இருக்கும்ன்னு வந்தா இப்படி ஏமாத்துரானேன்னு நினைகுறேங்களா??? கவலைய விடுங்க அடுத்த பதிவு Windows7 இலவசமாக வாழ்நாள் முழுவதும்...

9 April 2009

காதல் கலெக்சன்ஸ்

|2 comments
இப்பெல்லாம் எண்னுடைய நண்பர்கள் பல பேர் பேசாம நானும் அவனை போல லவ் பன்னீர்கலாம் போல என்று ரொம்ப பீல்பண்ணி என்னிடம் சொல்வது உண்டு. இப்போது பெண் கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பு மென்பொருள் வல்லுனர்களை தேடி அலைந்த பெண் வீட்டினர் இப்போது கட்டிட பொரியாளர் மற்றும் மெக்கானிக்கல் பொரியாளர்கள் பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எது எப்படியோ அவர் அவருக்கென்று என்ன இருக்கிறதோ அது தான்... சரி விஷயத்துக்கு வருவோம்...


பேசாம நானும் லவ் பன்னீர்க்கலாம் என்று நினைப்பவரா நீங்கள் முதலில் காதல்னா என்ன என்று இங்கே தெரிஞ்சுக்கலாம்

காதல்னா என்னானு தெரியும் எப்படி பெண்களை மடக்குவதுனுதானே கேட்குறீங்க??? அதுக்கு பிகர் கரெக்ட் பண்ண இங்கேயும் பெண்கள் மனசை கவர்வது எப்படினு இங்கேயும் தெரிஞ்சுக்கலாம்

சரி பெண்களின் மனசை கவர்ந்து மடக்கியாச்சுப்பா நாளைக்கு ஐ லவ் யூ சொல்லம்னு இருக்கேன் அப்படினு கேட்கிறீக்களா இதை படிச்சுட்டு போங்க

ஐ லவ் யூ எல்லாம் சொல்லாம நான் லெட்டர் மூலமா சொல்லான்னு இருகேனுங்கிறீங்களா அப்படினா இதை படிங்க

அப்படியே ஒரு காதல் கவிதை இருந்தா நல்ல இருக்குமுன்னு நினக்கிறேங்களா??? அப்படினா இதை எழுதுங்க

இப்போதைக்கு இது போதும்ன்னு நினைக்கிறேன் அடுத்த பதிவில் பொண்ணு பார்க்க போவதிலிருந்து மணைவியை கவர்வது பற்றி வரை கல்யாண கலெக்சன்ஸ்ல் பார்ப்போம்...

5 April 2009

உங்கள் Blogன் மதிப்பு...

|11 comments
நேற்று இரவு தூக்கம் வரவில்லை சரி நமக்கு தான் இணையம் இருக்கிறேதே என்று வழக்கம்போல் எனது வேலையை தொடங்கினேன். நமது சர்க்கரை வலைப்பதிவின் Templateயை பார்த்து எனது நாக்கில் எச்சி ஊரியது ( இத எல்லாமா எழுதுவ?). சரி நானும் எனது Blogன் Templateயை மாற்றுவோம் என்று நினைத்து( அங்க ஆரம்பித்தது தான் வினை) பல Blog Templateயை பதிவிறக்கினேன். அப்படி மாற்றும் போது கடைசியாக உள்ள எனது Templateன் HTML Code பதிவிறக்காமால் விட்டுவிட்டேன். நேற்று இரவு முழுவதும் எனது வலைப்பதிவு பலவித மாடல்களில் வலம் வந்தது... ( ஏதோ பல மாடல் கார் வந்த மாரி சொல்ர!) எந்த Templateம் எனது Blogல் உள்ள Widgetகளுக்கு பொருத்தமாக இல்லை. நேரம் நள்ளிரவு தாண்டியது இனிமேலும் இணையத்தில் இருந்தால் நல்லதல்ல (யாருக்கு?) என்று எதோ ஒரு Templateயை செட் செய்து தூங்க்கப்போனேன். அப்போது தான் நினைத்தேன் டேய் அந்த சர்க்கரை பதிவை எழுதுர நண்பர் சுரேஷ் ஒரு மென்பொருள் வல்லுனர் நீ ஒரு கட்டிட பொரியாளர் உனக்கு எதுக்குடா அவரோட Templateயை பார்த்து எச்சி ஊரனும். எந்த அளவுக்கு நீ Blog Design பன்னதே பெரிய விஷயம் இருக்குர Template யே போதும்ன்னு நினைச்சேன். காலையில் ஒரு வழியாக எனது Blog Template designயை கொண்டுவந்து விட்டேன். அதன் விளைவாகத்தான் இந்த பதிவு.

(என்னாட இவன் தலைப்பை பத்தி சொல்லாம இப்படி சொந்த கதை சோக கதை எல்லாம் சொல்ரானேன்னு பார்க்குறேங்களா?? அட விகடன், குமுதம் அதில் எல்லாம் இப்படிதான் தலைப்பை பற்றி கடைசியாகத்தான் வரும்.)

இப்படி இணையைதில் தேடும் போது கிடைத்ததுதான் இந்த பக்கத்தில் வலதுபுறம் பார்க்கும் எனது Blogன் விலை. இந்த Blog ன் மதிப்பு $564.54. சந்தோசமாக இருந்தது. நீங்களும் உங்களின் Blogன் மதிப்பை தெரிந்துகொள்ள கிளிக்குங்கள். இதெல்லாம் சரி இந்த ரேட்க்கு இந்த Blogயை வாங்க யாராவது இருந்தா தெரிவிக்கவும்

2 April 2009

கூல் உளவியல் மின் புத்தகம்

|3 comments
இவன் என்ன தான் எழுதியிருக்கிறான் என்று ரெகுலராக இந்த வலைப்பக்கத்திற்கு வரும் அனைத்து நன்பர்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். உங்களை ஏமாற்ற வைத்தற்க்கா வருந்துகிறேன். காத்திருந்து கிடைத்தால்தான் சுவை இருக்கும் என்று சொல்லுவார்கள். ( அட இது வேர...) சரி விஷயத்திற்க்கு வருகிறேன்.

எனது பதிவில் வெளியிடும் அனைத்து மின் புத்தகங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளதால் கடந்த மின் புத்தக வெளியீட்டிலேயே சொல்லியிருந்தேன் சில தினங்களில் அவள் விகடனில் வெளிவந்த ஆண் பெண் அறியவைக்கும் உளவியல் தொடர் "கூல்" மின் புத்தகத்தை வெளியிடுவேன் என்று.

கண்டிப்பாக ஒவொரு இளைய தலைமுறையினரும் கண்டிப்பாக படித்து பயன் பெறவேண்டும்.

கூல் மின்புத்தகம் பதிவிறக்க கிளிக்குங்கள்

அடுத்த மின் புத்தகம் விரைவில்...