31 May 2008

எரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்!

|0 comments
பெட்ரோல் விலை ஏறப்போகுதேன்னு கவலையா..! உங்களைத்தான் தேடிட்டு இருக்கோம்.


ஒரு சிம்பிள் கணக்கு சொல்றோம், கேளுங்க! இப்போ ஒரு லிட்டர் டீசல் 36 ரூபாய் 8 பைசா; பெட்ரோல் 52 ரூபாய். ஓ.கேவா? சரி, 330 மில்லி கோக் 20 ரூபா; அப்ப ஒரு லிட்டர் கோக் 61 ரூபாய். 100 மில்லி டெட்டால் 20 ரூபாய்னா ஒரு லிட்டர் 200 ரூபாய். கண்டிஷனர் ஷாம்பு 400 மி.லி. பாட்டில் 165 ரூபாய். அப்ப, லிட்டருக்கு 413 ரூபாய். மவுத்வாஷ் லிஸ்ட்ரின் 100 மில்லி 45 ரூபாய்னா ஒரு லிட்டர் 450 ரூபாய்! ஆஃப்டர் ஷேவ் லோஷன் 100 மில்லி பாட்டில் 175 ரூபா, ஒரு லிட்டர் 1,750 ரூபாய்.


எதுக்கு இப்போ இந்தக் கணக்கெல்லாம்னு கேக்கறீங்களா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... டெட்டால், ஷாம்பு, மவுத்வாஷ், ஆஃப்டர் ஷேவ் லோஷன்னு எதையாவது போட்டால் தான் நம்ம பைக், கார்லாம் ஓடும்னு இருந்தா, நம்ம நிலைமை என்ன ஆகுறது..?!


நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் மாதவன்கள் பைக், கார் ஓட்டுறதுக் காகவே பெட்ரோலும், டீசலும் படைச்ச இயற்கையோட கருணை எவ்வளவு பெருசுனு இப்பப் புரியுதா..!


ஹ¨ம்... என்ன பண்ணச் சொல் றீங்க? பெட்ரோல் டென்ஷனைக் குறைக்கிறதுக்காக இப்படியெல்லாம் அசட்டு மெயில்களை அனுப்பி ஆறுதல்பட்டுக்க வேண்டியதாயிருக்கு! நம்ம இன்டர்நெட் நண்பர்கள் இதை நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் அனுப்பியிருப்பாங்களோ? அப்ப அவருக்கு வேலை மிச்சம். இதை வெச்சே அடுத்த மூணு மாசம் ஓட்டிடுவார்!


ஜோக் இருக்கட்டும்... இதற்கு மேலும் இந்திய எண்ணெய் நிறுவ னங்களுக்கு நஷ்டத்தைத் தாங்கும் சக்தி இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. இத்தனை வருடங்களாக மானியமாக அளித்து வந்த லட்சம் கோடிகளால் முழி பிதுங்கி நிற்கின்றன இந்திய எண்ணெய் நிறுவனங்கள்! எரிகிற தீயில் பெட்ரோல் ஊத்துற கதையாக சர்வதேசச் சந்தையிலும் கச்சா எண்ணெயின் விலை எகிடு தகிடாக உயர்ந்துகொண்டு இருக்கிறது! ஆசிய நாடுகளில் அதிக அளவு எரி பொருள் செலவழிப்பதில் இந்தியா வுக்கு மூன்றாவது இடம். இத்தனை வளமான வாடிக்கையாளராக இருந் தாலும், 'ஐயா! எங்க நாட்டுல தேர் தல் வருது. கொஞ்ச நாள் பெட்ரோல் விலை ஏறாம பார்த்துக்குங்க!' போன்ற கோரிக்கைகள் எல்லாம் சர்வதேசச் சந்தையில் எடுபடாது.


சொல்லப் போனால், சர்வதேசச் சந்தை கிட்டத்தட்ட தீப்பிடித்து எரிகிறது. ஒரு வருடத்துக்குள்ளாக இரண்டு மடங்கு விலை உயர்ந்து, 133 டாலருக்கு மேல் தந்தியடிக்கிறது ஒரு பேரல் குரூட் ஆயில். இது இன்ன மும் உயரலாம் என்று 'நல்ல' சேதி சொல்கிறார் 'ஓபெக்' அமைப்பின் தலைமை நிர்வாகி. நாடு விட்டு நாடு பாயும் எண்ணெய்க் குழாய் களை தீவிரவாதிகள் வெடி வைத்துத் தகர்ப்பதும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதுமாக எண்ணெய் விலையேற்றத்துக்கான காரணங் களை அடுக்கிக்கொண்டே போகிறார் கள். இதையெல்லாம் தாண்டி, வளரும் நாடுகளை முடக்கிப்போட வளர்ந்துவிட்ட நாடு எதுவும் சதி செய்கிறதா என்றுகூட விவரமான சிலர் யோசிக்கிறார்கள்!


இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு லிட்டருக்குக் கிட்டத்தட்ட 17 ரூபாய் வரை மானியம் அளிக்கின் றன நமது எண்ணெய் நிறுவனங்கள். அதை நீக்கச் சொல்லித்தான் அவர் கள் போராடுகிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான அசல் விலையைக் கொடுத்து மக்கள் பெட்ரோல் வாங் கட்டும் என்பது அவர்களது வாதம். 'நாங்க முதல்ல ஓட்டு வாங்கிக்கி றோம்! அப்புறம் அவங்க அசல் விலைக்குப் பெட்ரோல் வாங்கட்டும்!' என்பது ஆளும் காங்கிரஸின் நிலை. 'இப்படியே அசட்டையா இருந்தீங்கன்னா இன்னமும் பொரு ளாதாரச் சிக்கல் தீவிரம் அடையும்!' என்பது பொருளாதாரப் புலிகளின் புலம்பல்.


எதுக்கும் உடனடியா நாம ஒரு நல்ல சைக்கிள் வாங்கி வெச்சுக்குறது நல்லது. சிக்கனத்துக்கு சிக்கனம்; ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்! அப்புறம், சைக்கிளுக்கும் டிமாண்ட் ஏகமா எகிறிடுங்கோ!

நன்றி, விகடன்.

30 May 2008

டொமைனை வைத்து விளையாடும் ஏமாற்றுப் பேர்வழிகள்

|9 comments
அமிதாப்பச்சன் துவங்கியுள்ள இணையதளத்தின் பெயர் அபிதாப்பச்சன்.காம் என்று நினைத்திருந்தீர்கள் என்றால் அது தவறு. அல்லது அமிதாப்பச்சன்.இன் என்றோ அல்லது அமிதாப்பச்சன்.நெட் என்றோ நினைத்திருந்தாலும் தவறுதான். ஏனெனில் இந்த முகவரிகள் வேறு ஒருவரால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே.

சல்மான்கான், ரஜினிகாந்‌த், க‌‌‌ரீனா கபூர், ஹிருதிக் ரோஷன் ஆகியோருக்கு தங்கள் சொந்த டொமைன் பெயரில் இணையங்கள் இல்லை. ஆன் லைன் பிராண்ட் குறித்து சிந்திக்கையில் இவர்கள் போன்ற பிரபலமானவர்கள் மட்டுமல்ல, முதன்மை நிறுவனங்களான டாடா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்து நாளிதழ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகியோரது டொமைன் பெயர்களும் சந்தர்ப்பவாத ஏமாற்றுபேர்வழிகளால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது ஆன் லைன் முகவரி அடையாளத்தை திரும்பப் பெற கடுமையான நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டிவரும் என்பதுதான் தற்போதைய நிலவரம்.

அதாவது தங்களுக்கு வணிகமுத்திரை உரிமைகள் இல்லாத பெயர்களில் இணையதள முகவரிகளை பதிவு செய்யும் ஏமாற்றுக்காரர்களின் வேலைதான் இது. அதாவது இதுபோன்ற பிரபலங்களில் பெயர்களில் இணையதளம் உருவாக்கி அதன் மூலம் விளம்பர வருவாய் ஈட்டுவது, அல்லது பிற்காலத்தில் இந்த டொமைன் பெயர்களை கடுமையான விலைக்கு விற்று பணம் செய்வது இதுவே இவர்களது பல குறிக்கோள்களில் முதன்மையானது.

மேலும் மோசமான கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் ஆபாச நடவடிக்கைகளுக்கும் கூட இந்த முகவரிகளை பயன்படுத்தலாம். அதாவது கடவுச் சொல்லைதிருடி வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியாகக் கூட இவை நடைபெறலாம்.

இந்திய ஸ்டேட் வங்கி இவர்களிடமிருந்து முதல் பாடத்தை கற்றுள்ளது. அதாவது ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஒருவர் எஸ்பிஐகார்ட்ஸ்.காம் என்ற போலி இணைய தளத்தை துவங்கினார். அதாவது அதனை உண்மையான எஸ்.பி.ஐ. இணையம் போலவே வடிவமைத்தார். இதனால் மிகப்பெரிய நிறுவனங்களும் கூட ஏமாந்து விளம்பரங்களை அதில் கொடுத்துள்ளன. உதாரணமாக சேஸ் மான்ஹாட்டன் வங்கி இந்த இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளது.
இன்னொரு வழியையும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இது "டைபோ ஸ்க்வாட்டிங்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது உதரணமாக ஹூண்டாய், பெப்சி, அல்லது கோககோலா ஆகிய பெயர்களில் உள்ள ஸ்பெல்லிங்கை சற்றே சிதைத்து அல்லது மாற்றி டொமைன் பெயர்களை பதிவு செய்வது. இதன் மூலம் ஒரு கிளிக்கிற்கு இவ்வளவு தொகை என்று விளம்பர வருவாய் ஈட்டலாம்.

இதில் குறிப்பாக மிகவும் பிரபலமடைந்துள்ள டொமைன் பெயர்களில் டாட் காம், டாட் நெட் போன்று டாட் சிஎம் என்ற ஒன்று உள்ளது. இது கேமரூனுக்கு உரித்தான டொமைன் பெயர், சைபர் ஸ்க்வாட்டிங்கிற்கும் பெயர் போனது. உதாரணமாக கூகுள்.சிஎம் என்று அடித்தால் ஏகப்பட்ட மோசடி இணைப்புகளுக்கு அது இட்டுச் செல்லும். ஆனால் சில கம்பெனிகள் சாமர்த்தியமாக தங்கள் டொமைன் பெயர்களிலேயே சிஎம் என்பதனை சேர்த்து அந்த இணைப்புகளிலிருந்து தங்கள் நிறுவனத்தின் அசல் இணையதளத்திற்கு இட்டுச் செல்லுமாறு செய்துள்ளனர்.

இதனை தடுக்க வியாபார நிறுவனங்கள் அந்த நாட்டிற்குறிய டொமைன் பெயரை தேர்ந்தெடுக்கவும். அதாவது இந்தியாவிற்கு டாட் இன் என்று பதிவு செய்யவேண்டும். ஆனால் நிறைய பன்னாட்டு நிறுவனங்கள் இதனை செய்ய தவறி விடுகின்றன. இந்தியாவில் வர்த்தகம் புரியவேண்டும் எனும்போது மட்டும் இதனை யோசிக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய இணையதளம் துவங்கும்போது அந்த பெயரில் ஏற்கனவே சைபர் ஸ்க்வாட்டர் ஒருவர் டொமைன் பெயரை பதிவு செய்திருப்பார். உதாரணமாக பிரபல வெப் 2.0 வலைப்பதிவுத் தளமான டெக்கிரன்ச் நிறுவனத்தின் இந்திய முகவரி கொண்ட டெக் கிரன்ச்.இன் என்பது சென்னையில் உள்ள மென்பொருள் துறைச் சேர்ந்த ஒருவருடையது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதனை தடுக்க சில ஆன் லைன் சேவை நிறுவனங்கள் உள்ளன. உதாரணமாக சிட்டிசன் ஹாக்.காம் உங்களுக்கு தேவையான டொமைன் பெயரின் ஸ்பெல்லிங்கை சிதைத்து உங்களுக்காக இணையதளத்தை பதிவு செய்ய உதவி புரிகிறது. அல்லது இந்த பெயர் ஏற்கனவே ஸ்காவாட்டர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால், உங்கள் முகவரியை சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலம் மீட்டுக் கொடுக்கிறது. இது சிறந்த போர்த் தந்திரம் என்றாலும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதுதானே.

யார் சொன்னது??? "ஆம்பிளைன்னா அழக் கூடாது..." என்று???

|0 comments
ஏழெட்டு வயது சிறுவனாக இருந்தபோது என் மனதில் ஒரு அசைக்க முடியாத எண்ணம் வேரூன்றியிருந்தது. 'ஆம்பிளைப் பிள்ளை அழக் கூடாது' என்பதுதான் அது. அந்தச் சின்ன வயதில் அப்படி ஒரு 'நல்லொழுக்கத்தை' என்னிடம் விதைத்தது யாரோ தெரியாது. ஆனால், அதை நான் மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தது மட்டும் உண்மை.


'என்ன துன்பம் வந்தாலும் அழக் கூடாது' என்ற வைராக்கியம் என்னிடம் உச்சத்தில் இருந்தபோதுதான் அந்த மிகப் பெரும் சோகம் நேர்ந்தது. பிறந்தது முதல் என்னை மார்மீதும் தோள்மீதும் தூக்கி வளர்த்த என் பாட்டி, திடீரென்று மரணம் அடைந்து விட்டார். எப்போதும் ஒரு வித மெல்லிய புன்னகையை மட்டுமே இதழ்களில் தவழ விடும் என் அப்பா, ஓவென்று கதறி அழுத காட்சியை அன்றுதான் நான் முதன்முதலில் பார்த்தேன். அவ்வப்போது பாட்டியைப் பற்றி என்னிடம் (எனக்குப் புரியாது என்ற தைரியத்தில்) குறை சொல்லி புலம்பித் தள்ளும் அம்மாவும் கூட கண்ணீர்க் கடலில் மூழ்கியிருந்தார்.


ஆனால், என் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. நான் வர விடவில்லை. 'பாட்டி!' என்று என் உள்ளம் பதைபதைக்கும்போதெல்லாம், 'ஆண் பிள்ளை அழக் கூடாது.. ஆண் பிள்ளை அழக் கூடாது' என்று கிளிப்பிள்ளை போல் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.


ஒரே பேரன் என்ற முறையில் அரிசியிடுதல் முதல் கொள்ளியிடுதல் வரை என்னைத்தான் கை பிடித்துச் செய்ய வைத்தார்கள். அப்போதும் கூட அழுதுவிடக் கூடாது என்ற தவிப்பும் இறுக்கமும்தான் எனக்குள் இருந்ததே தவிர, பாட்டி பற்றிய நினைவுகள் துளியும் இல்லை.


இரண்டு நாட்கள் கடந்தது. எங்கள் உறவினர்களில் பாட்டியின் இறப்புக்கு வர முடியாத மூதாட்டி ஒருவர் ஊரில் இருந்து வந்திருந்தார். "அவ சாவுல கூட இவன் அழலையா" என்று ஆச்சர்யமான அவர், "அழக்கூட தெரியாத இந்தப் பிஞ்சுப் பிள்ளையை விட்டுப் போக உனக்கு எப்படியம்மா மனசு வந்துச்சு!" என்று ஆரம்பித்தார். அநேகமாக அவர் என் பாட்டியின் சக வயது தோழியாக இருக்க வேண்டும். எங்கள் குடும்பம் பற்றி, பாட்டி பற்றி, ஏன்.. என்னைப் பற்றி கூட அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.


"குடும்பத்துக்கு ஒரே வாரிசு.. இவன் முகத்தைப் பார்த்துத்தான் உயிரைப் புடிச்சுக்கிட்டுக் கெடக்கேன்னு சொல்லுவாளே.. இப்போ இந்த முகத்தை அலங்கரிச்சுப் பார்க்க அவ இல்லையே" என்றெல்லாம் என்னை கட்டிக் கொண்டு அவர் அழவும் எனக்குள் ஏதோ ஒன்று உருகத் தொடங்கியது.


அம்மாவையும் அப்பாவையும் அதட்டும் சக்தியாக.. எனக்கு மட்டும் பூனைக் குட்டியாக.. திகட்டத் திகட்ட பாசம் வார்த்த ஒரு ஜீவனின் இழப்பு எனக்கு அப்போதுதான் உறைத்தது.


என் மழலைப் பொய்களுக்கு புருவம் உயர்த்திய ஒரே நபர் பாட்டிதான். என் உறக்கத்துக்காகவே புதுப்புது 'சிங்கம் கதை'களுக்கு சிருஷ்டி கர்த்தாவானவர் அவர். என் ஐஸ்கிரீம் செலவுகளுக்கென தாத்தாவின் போட்டோவுக்குப் பின்னால், வங்கி நடத்தியவர். 'டாக்டர் ஆகு.. என்ஜினீயராகு..' என்ற பெற்றோரின் குரல்களுக்கு மத்தியில், 'ரொம்ப படிச்சா மூளை குழம்பிடும்' என்றபடி, முந்தானையால் என் முகம் துடைத்தவர்.


அந்த இடுங்கிய கண்களின் இணக்கம்..


முன் பற்கள் இல்லாத அந்த இதழ்களின் எச்சில் முத்தம்..


அய்யோ பாட்டி!


நான் அழுதுவிட்டேன். உறவினர் விக்கித்துப் போக, அம்மாவும் அப்பாவும் பிரம்மித்து நிற்க, யார் சொல்லுக்கும் அடங்காமல் நான் அழுது கொண்டே இருந்தேன். என் பாட்டியின் மீது நான் வைத்திருந்த அன்பை உலகுக்கே உரக்கச் சொல்லிவிட்டதாக ஒரு உணர்வு வந்தது. அமைதி வந்தது. நிம்மதி வந்தது.


அன்றிலிருந்து இன்று வரை இயல்பான உணர்ச்சிகள் எதையும் நான் மறைத்ததில்லை. சிரிப்பும் அழுகையும் எல்லா மனிதர்களுக்கும் பொது. ஆண் பெண்பேதமெல்லாம் அதில் கிடையாது என்பதை திடமாக நம்பினேன். எனக்கும் ஒரு மகன் பிறந்த போது, நான் அவனுக்குச் சொல்லி வளர்த்த முதல் அறிவுரை இதுதான்.. 'எந்தத் தயக்கமும் இல்லாமல் கண்ணீரை வெளிப்படுத்தத் துணிபவன்தான் உண்மையான ஆண் பிள்ளை!'

சந்திரன், புனே


நன்றி, விகடன்.

29 May 2008

இந்தியாவில், வைரத்தின் விலை 20 சதவீதம் அதிகரிக்கும்

|0 comments
இந்தியாவில், பட்டை தீட்டப்படாத வைரத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வைரத்தின் விலை 20 சதவீதமாக அதிகரிக்கும் என்று வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வைர ஏற்றுமதியாளர் சஞ்சய் ஷா கூறுகையில், இந்தியாவில் பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் வைர வர்த்தக கழகம், பட்டை தீட்டப்படாத வைரத்தின் விலையை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், எனவே, வைரத்தின் விலை, 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில், அமெரிக்காதான், அதிக அளவு வைரங்களை இறக்குமதி செய்வதாகவும், அங்கு, தற்போது பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வைரம் இறக்குமதி செய்வதை தற்போது அமெரிக்கா பெருமளவு குறைத்துவிட்டதாகவும் அவர் கூறினார். எனவே, இந்திய வைரத்தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த சில ஆண்டுகளாகவே, பட்டை தீட்டப்படாத வைர உற்பத்தி செலவு, அதிகரித்து வருவதாகவும், கடந்த ஒராண்டில் மட்டும், 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

28 May 2008

கூகிள் பற்றி சில சுவையான தகவல்கள்

|2 comments
ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.


""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கர்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''


இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.


லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.


கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது


நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?


கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

நன்றி, தயாளன்.

27 May 2008

பாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்!

|0 comments
இளம் தம்பதிகளின் வசதிக்காக மதுரை-சென்னை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹனிமூன் கோச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 22 கோச்சுகளில் ஒரு கோச்சை மட்டும் விசேடமாக மாற்றி, ஹனிமூன் கோச் என மாற்றியுள்ளனர். இந்தக் கோச்சில், 4 ஜோடிகள் பயணிக்கலாம். இதுதவிர 4 பேர் செல்லக் கூடிய வகையிலான 3 கூபே பெட்டிகள் உள்பட மொத்தம் 18 பேர் இந்த கோச்சில் பயணிக்க முடியும்.

இந்தக் கோச்சில் மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கு ஒரு ஜோடிக்கு ரூ. 2,750 கட்டணமாகும்.இந்த கோச் முழுவதும் தரையில் ரெட் கார்பெட் விரித்துள்ளனர்.

வெப்ப நிலைக்கேற்ப தானாக மாறிக் கொள்ளும் வகையிலான ஏசி, டீப்பாய், லெட்டர் பேடுகள், படுக்கை, கம்பளி, சோப், பட்டன் விளக்குள் என ஸ்டார் ஹோட்டல் வசதிகள் அத்தனையும் இந்த கோச்சில் அடக்கம்.

பெல் அடித்தால் ஓடி வந்து உபசரிக்க அட்டென்டர்களும் உண்டு.விரைவில் டிவி, எப்எம் ரேடியோ ஆகிய வசதிகளையும் சேர்க்கவுள்ளனராம். மேலும் ரயில் எந்த இடத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறியும் வகையில் எலக்ட்ரானிக் டிஸ்பிளே வசதியும் செய்யப்படவுள்ளதாம்.

பாதுகாப்பான சேமிப்புகளில் மியூச்சுவல் பண்ட் முதலிடம்

|1 comments

நாட்டின் பங்கு சந்தையில், சிறந்த சேமிப்பு முறைகளில், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் முன்னணியில் இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்யலாம் என்றும் நிதி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜேபிமார்கன் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி தலைவர் கோஷ் கூறுகையில், பங்குச் சந்தை முதலீட்டு நடைமுறைகள் பற்றி விபரங்கள் தெரிவதில்லை என்று கூறினார். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு, குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற பலரும் விரும்புவதாகவும், ஆனால், அவர்களுக்கு பங்குசந்தை முதலீட்டில் ஏற்படும் பாதிப்புகளில் அனுபவம் இல்லாததால். நஷ்டத்தை அடைவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, சேமிப்பு என்ற வகையில், பணத்தைப் பாதுகாக்க விரும்புவோர், வங்கி டெபாசிட், தங்கம் போன்றவற்றைவிட, அதிக லாபம் தரும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்றும் நிதி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.. குறைந்த கட்டணத்தில், மியூச்சுவல் பண்ட் நிறுவன திட்ட மேலாளர்களின் முதலீடு அறிவு, மற்றும் அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெறலாம் என்றும் நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

26 May 2008

மதுரை...

|0 comments
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை. சுமார் 2500 ஆண்டுகள் கலாச்சார பாரம்பரியம் கொண்டது. பாண்டிய மன்னர்களின் பேர் சொல்லும் தலைநகரமாக விளங்கியது. 550 ஆண்டுகளுக்கும் மேலாக கலாச்சாரம் மற்றும் வர்த்தக மையமாக திகழும் ஒப்பற்ற இடம். வற்றாத நதியாக விளங்கும் வைகையின் கரையில் அமைந்துள்ள மதுரைக்கு வையகத்துள் என்றுமே சிறப்பிடம்தான். தூங்கா நகரம் என்ற சிறப்புப்பெயரும் மதுரைக்கு உண்டு.



மதுரையில் பார்க்கத்தகுந்த சிறப்புமிக்க இடங்கள்



மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
மதுரையின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். திராவிடர்களின் கட்டிட கலைக்கு ஒரு மாபெரும் சான்று. இக்கோவிலை முதலில் அமைத்தது குலசேகர பாண்டியமன்னன் ஆவான். அக்காலத்தில் கதம்பவனம் என்ற பெயரில் காட்டுப்பகுதியாக மதுரை இருந்ததாம். அப்போது ஒரு கதம்பமரத்தின் அடியில் சுயம்புலிங்கத்தை வைத்து இந்திரன் வழிபடுவதைக்கண்ட விவசாயி தனஞ்செயன் என்பவர், இதை குலசேகர பாண்டியமன்னனின் காதில் போட, அதிசயப்பட்டுப்போன மன்னன் உடனடியாக இந்திரன் வழிபட்டதாக சொல்லப்பட்ட பகுதியில் காடுகளை அகற்றி கோவில் அமைத்தான், அதைத்தொடர்ந்து உருவானதே மதுரை நகரம் என்றும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.



மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை அமைத்தது குலசேகர பாண்டிய மன்னன் என்றாலும் அதை மேலும் அழகுப்படுத்தி தற்போதைய வடிவத்துக்கு காரணமாகவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நாயக்க மன்னர்கள் ஆவர். சுமார் ஆறு ஹெக்டேர் பரப்பளவில் கோவில் வளாகம் அமைந்துள்ளது.12 கோபுரங்கள் அழகுற காட்சி அளிக்கின்றன. இதில் தென்பகுதியில் உள்ள பிரதான பிரம்மாண்ட கோபுரத்தில் மட்டும் 1500 சிற்பங்கள் கலை வேலைப்பாடுகளுடன் கவர்ந்திழுக்கின்றன கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் அக்கால கட்டிட கலைக்கு அசைக்கமுடியாத சான்றாக விளங்குகிறது. இதில் தூண்களின் எண்ணிக்கை மட்டும் 985 ஆகும். ஒரு முறை மீனாட்சி கோவிலுக்குள் வலம் வந்து விட்டாலே போதும். கண்முன் பார்க்கும் ஆதாரங்கள், நம்மை குலசேகர பாண்டியனின் காலத்திற்கே கொண்டு சென்று விடும். அழகர் கோவில்
மதுரையில் இருந்து சுமார் 21கி.மீ தூரத்தில் உள்ள விஷ்ணு கோவில்தான் அழகர் கோவில். இங்குள்ள அழகான சிற்பங்கள் மேலும் மேலும் பார்க்க தூண்டும்.



பழமுதிர்ச்சோலை
அழகர்கோவிலில் இருந்து சுமார் 2கி,மீ தூரத்தில் உள்ள குன்றுதான் பழமுதிர்ச்சோலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று.



திருமலைநாயக்கர் மகால்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருமலை நாயக்கர் மகால். 1636ம் ஆண்டில் மதுரையை ஆட்சி செய்ய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் இங்கு இசை, நடன நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வந்துள்ளன. இம்மண்டபத்தின் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. மண்டபத்தின் உள்ளே மேற்கூரையில் செய்யப்பட்டுள்ள மரவேலைப்பாடுகளும், இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தூண்களும் கற்பனைக்கும் எட்டாத கலைக்கவிதைகள். ஒவ்வொரு தூணும் 20 மீட்டர் உயரமும், 4மீட்டர் சுற்றளவும் கொண்டது. திருமலை நாயக்கர் கட்டிய இம்மகாலின் பழைய வடிவம் இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு பிரம்மாண்டமானது என்பதும் கூடுதலான ஒரு ஆச்சரியத்தகவல்.



திருப்பரங்குன்றம்
மதுரையில் இருந்து சுமார் எட்டு கி.மீ தூரத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருக பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று என்பதால் எப்போதும் இங்கு முருகனுக்கு அரோகரா சரணகோஷம்தான்.



இவற்றுடன் கூடல் அழகர் கோவில், கோச்சடை அய்யனார் கோவில், ஷ்ரீஅரவிந்தர் அன்னை தியான மண்டபம், திருமோகுர் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், ராமகிருஷ்ண மடம் என பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன. அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவும், பெண்கள் பெருமளவில் பங்கேற்கும் முளைப்பாரி விழாவும் மதுரையில் பிரசித்தம்.



உணவு, தங்குமிடம், போக்குவரத்து
தமிழக பாரம்பரிய உணவு வகைகளை மதுரையில் ஒரு பிடிபிடிக்கலாம். மல்லிப்பூ இட்லி (ரொம்பவே மிருதுவானது), சாம்பார், பலவகைச்சட்னி மதுரையின் தனி ருசி. தங்குமிடங்களை பொறுத்த வரை அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற ஹோட்டல்கள் உள்ளன. விமானநிலையம், ரயில் நிலையம் உள்ளதால் எந்தப்பகுதியில் இருந்தும் மதுரைக்கு வந்து விடலாம். அழகான சாலை வசதியும் உண்டு. சென்னையில் இருந்து சுமார் 400 கி.மீ தூரத்தில் உள்ளது.



யப்பா....இப்பவே கண்ணைக்கட்டுதே...ங்கிறீங்களா. போடுங்க மதுரைக்கு ஒரு விசிட்டை.

25 May 2008

அரவிந்த் மருத்துமனைக்கு பில்கேட்ஸ் விருது

|1 comments
நாட்டின் முன்னணி கண் மருத்துவமனையான மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 'பில்கேட்ஸ் விருது' சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பவுன்டேஷன் இந்த விருதை வழங்குகிறது.

கண் பார்வை இழப்புத் தடுப்பில் அரவிந்த் மருத்துவமனை ஆற்றி வரும் உன்னத சேவையை பாராட்டி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சுகாதாரத் துறையில் சிறந்த சேவை செய்த நிறுவனங்கள், தனி நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை பில்கேட்ஸ் பவுன்டேசன் வழங்குகிறது.

கண்பார்வை இழப்புத் தடுப்பு, குறைந்த விலையில் லென்ஸ் தயாரிப்பு, மருத்துவமனை நிர்வாகம் குறித்த பயிற்சி ஆகியவற்றி்ல் அரவிந்த் மருத்துவமனையின் செயல்பாட்டை பாராட்டி இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுடன் 10 லட்சம் டாலர் நிதியும் பரிசாக வழங்கப்படும். வரும் 29ம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் விழாவில், பில்கேட்ஸின் தந்தை இந்த விருதை அரவிந்த் மருத்துவமனை தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமியிடம் வழங்கவுள்ளார்.

24 May 2008

பைக் ஓட்ட 10 கட்டளைகள்!

|1 comments
1மிதமான வேகத்தில் சீராக ஓட்டுங்கள்!

எப்போதும் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலேயே செல்லுங்கள். உங்கள் மொத்தப் பயண நேரத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. வேகமாகச் செல்லும்போது, மாற்றி மாற்றி பிரேக்கை அழுத்தியும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியும் ஓட்ட நேரிடும். இப்படி வேகமாக ஓட்டினால், ஏராளமான எரிபொருள் விரயமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2தேவை இருந்தால் மட்டும் பிரேக்கைப் பயன்படுத்துங்கள்!

ஒரு நல்ல ரைடரால் நிற்க வேண்டிய இடங்களைச் சரியாகக் கணிக்க முடியும். வேகமாகச் செல்லும் பைக்கில் பிரேக்கை உபயோகிக்கும்போது, சக்தியைப் பெருமளவில் விரயம் செய்கிறோம். வளைவுகளை முன்கூட்டியே கவனித்துச் சென்றால், பிரேக்கை உபயோகிக்காமல் செல்ல முடியும்.

3கிளட்ச்சைக் கைவிடு!

தேவையில்லாமல் கிளட்ச்சோடு பின்னிப் பிணைந்து, அதைப் பிடித்துக்கொண்டே பைக் ஓட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். இந்தப் பழக்கம் பெட்ரோலைக் குடித்துவிடும்.

4ஏர் பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்!

இன்ஜின் மூச்சு விடுவதற்குக் காற்றை அனுப்புவது, இந்த ஏர் பில்டர்தான். தூசு துரும்புகள் இன்ஜின் பாகங்களை சீக்கிரம் தேய்மானத்துக்கு உட்படுத்தும். அதோடு, தூசு புகுவதால் ஏற்படும் கார்பன் படிவம் சைலன்ஸரை அடைத்துக்கொண்டு, இன்ஜினை திணற வைக்கும். இதனால், பைக் பர்பாமென்ஸ் பாதிக்கப்படும்.

5டயரின் காற்றழுத்தத்தை சோதியுங்கள்!

காற்றுக் குறைவான டயர்களால் பெட்ரோல் தேவை அதிகமாகிறது. 25 சதவிகிதம் காற்றுக் குறைவான டயர்களால், 5 சதவிகிதம் அதிக எரிபொருள் தேவையும், டயர்களின் ஆயுட்காலம் 25 சதவிகிதம் குறைவதும் ஏற்படும். அதே போல், தேய்ந்துபோன டயர்களாலும் பெட்ரோல் விரயமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

6பெட்ரோல் லீக் ஆவதைச் சோதியுங்கள்!

பைக்கின் பெட்ரோல் டேங்க், கார்புரேட்டர் மற்றும் ப்யூல் லைன் (Fuel Line) என பெட்ரோல் பயணிக்கும் அத்தனை இடத்தையும் சரிவரச் சோதியுங்கள். ஒவ்வொரு துளியாக வடிந்தால்கூட ஒரு நாளைக்கு 5 1/2 லிட்டர் எரிபொருள் விரயமாகிவிடும்!

7சிக்னல்களில் இன்ஜினை ஆப் செய்யுங்கள்!

ஐடியலில் பெட்ரோல் பெருமளவு விரயமாகும். ரயில்வே கேட், போக்குவரத்து நெரிசல், சிக்னல்கள் ஆகியவற்றைக் கடக் கும்போது பைக்கை ஆப் செய்து எரிபொருளைச் சேமியுங்கள்.

8இன்ஜினை நல்ல கண்டிஷனில் வைக்கவும்!

அவ்வப்போது இன்ஜினைச் சரியாக டியூன் செய்துகொண்டால், 6 சதவிகிதம் வரை பெட்ரோலைச் சேமிக்கலாம். பைக்கில் அதிகப் புகை வெளியானாலோ, இழுவைத் திறன் குறைந்தாலோ, உடனடியாக சர்வீஸ் சென்டருக்குப்போய் இன்ஜினைச் சோதியுங்கள்!

9பேட்டரியை அவ்வப்போது சோதியுங்கள்!

எலெக்ட்ரிகல் உபகரணங்கள் எப்போதும் நல்ல நிலையில் இருப்பது முக்கியம். எனவே, ஒரிஜினல் உதிரி பாகங்களை மட்டுமே வாங்கிப் பொருத்துங்கள்.

10அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் பைக்கை சர்வீஸ் செய்யுங்கள்!

உங்கள் பைக்கின் முக்கியச் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்த சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்வது, நீங்கள் கொடுக்கும் பணத்துக்கும் வாகனத்துக்கும் நன்மை பயக்கும்!


--நன்றி விகடன்

ஆன்லைன் மோசடி ஒரு அனுபவம்

|8 comments
நண்பர் திரு.கண்ணன்பாபு அவர்கள் எனது BLOGயை பாராட்டியும் ஆன்லைன் பேங்க்ல் நடந்த மோசடி பற்றி ஒரு Forward ஈமெயில்ம் அனுப்பியிருந்தார் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்



திரு.ரமேஷ்விஸ்வநாதன் அவர்களுக்கு இன்டர்நெட் ஆன்லைன் பண பரிமாற்றத்தில் நடந்த ஒரு கசப்பான அனுபவம்....



இவர் பணி புரியும் அலுவலக்திலிருந்து ஒரு வருடத்திற்க்காக ஆஸ்திரேலியவிற்கு அனுப்பப்பட்டுள்ளர். இவரும் அனைத்து Software குடிமகன்களை போல ஒரு வருடத்தில் 10 முதல் 20 லட்சங்களை சேமித்து பின்பு இந்தியாவி்ல் ஒரு வீடு வாங்கவேண்டும் என்ற கனவுடன் சென்றுள்ளார். அங்கே அவரது அலுவலக ரூல்ஸ் படி ஒரு Salary Account ANZ Bankல் தொடங்கியுள்ளார். ஆறு மாதங்களுக்கு பிறகு பத்தாயிரம் ஆஸ்திரேலிய டாலர் சேர்ந்த உடன் ஒரு லேப்டாப்யை வாங்க நினைத்தார். அங்கேதான் அவருக்கு பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.



அவரது அலுவலக கணினிலிருந்து ஆஸ்திரேலிய டெல் நிறுவனத்தின் வெப்சைட்டிறிக்கு சென்று அங்கே பல்வேறு பணம் செலுத்தம் முறையில் இவரிடம் கிரெடிட் கார்டு மற்றும் காசோலை இல்லாத காரணத்தால் ஆன்லைன் மணி டிரன்ஸ்பர் முறையை தேர்ந்தெடுத்துள்ளார். அங்கே அவரது பெயர் முகவரி மற்றும் பிற தகவல்களை கொடுத்து Enter பட்டனை அழுத்தியுடன் அங்கே ஆஸ்திரேலிய வங்கி பக்கத்தை பார்ப்பதற்கு பதில் அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் கிரெடிட் கார்டு authorisation பக்கம் தெரிந்துள்ளது. அங்கே கிரெடிட் கார்டு எண்ணிற்கு பதிலாக அவருடய முகவரி இருந்துள்ளது. இவ்வாறு தவறுதலாக வந்துள்ளதால் அவர் BACK பட்டனை அழுத்தி (அவர் செய்த மிகபெரிய தவறு) மீண்டும் அவருடிய தகவல்களை கொடுத்து (இங்கே அவருடிய தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டன) லேப்டாப் தொகையை செலுத்திவிட்டார்.



ஆஸ்திரேலியாவில் உள்ள டெல் நிறுவனம் இவரது பணத்தை பெற்றுக்கொண்டு லேப்டாப்யை டெலிவரி செய்தது. இவரும் எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று நினைத்துள்ளார்...



ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் தொலைபேசியில் ஒரு பெண் "நீங்கள் நேதர்லண்டில் யாருக்காவது donation செய்துள்ளேர்களா?" என்று பெங்களூர்ல் இருந்து ANZ பங்கின் சார்பாக பேசுவதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டவுடன் அதிரிச்சி அடைந்தார். அவரை உடனடியாக ANZ பேங்க் தளத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார் அவருடய பேங்க் அக்கவுன்ட்ல் மூன்று இன்டர்நேஷனல் Fund transfer 5000, 2000, 1000 ஆஸ்திரேலிய டாலர்கள் நேதர்லண்டில் உள்ள அக்கவுன்ட்ற்கு மாற்றப்பட்டுள்ளது. பேங்க் Accountல் 10000/- ஆஸ்திரேலிய டாலர்கள் உள்ள ஒரு இந்திய பெயர் கொண்ட ஒருவர் Donation கொடுக்க வாய்ப்பு இல்லாததால் சந்தேகம் அடைந்து அவருக்கு கால் செய்ததாக கூரியுள்ளார்.



அவர் அவளுக்கு நன்றி கூறி அனைத்து Transactionகளையும் நிறுத்துமாறு கூறியுள்ளர். ஆனால் அவள் ஏற்கனவே 2000 ஆஸ்திரேலிய டாலர்கள் சென்று விட்டதாகவும் மற்றவற்றை நிறுத்திவிடுவதாகவும் கூறியுள்ளார். உடனடியாக இதை பற்றி ANZ Bankற்கு தெரியப்படுத்தி மேலும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பல விதமான மன உளைச்சலுக்கு பிறகு அவருடைய பணம் கிடைத்துள்ளது.



பெங்களூர்ல் உள்ள அந்த Bank ஏஜென்ட் மாற்ற இரண்டு Transactionயை நிறுத்தாமல் இருந்திருந்தால் அவர் அவருடய அக்கௌன்ட்ல் பணம் எதுவும் இல்லாமல் தான் இருந்திருப்பார்.



ஆன்லைன் பண பரிமாற்ற முறையில் நாம் தான் மிகவும் ஜாக்கிரையாக இருக்க வேண்டும். இபோதுள்ள ஆன்லைன் Bankல் எனக்கு தெரிந்தவரை ICICI வெப்சைட் மிக்க பாதுகாப்பானதாக கருதுகிறேன். அதிலும் இபோதுதான் passwordயை டைப் செய்ய Virtual Keyboard முறையை அறிமுகம் செய்துள்ளனர். (Transaction password யை டைப் செய்யும் பொழுது Virtual Keyboard வருவதில்லை).



மேலும் ஆன்லைன்ல் பாதுகாப்பான பண பரிமாற்றம் செய்ய கிளிக்குங்கள்.



குறிப்பு:முழுக்க முழுக்க என்னால் டைப் செய்யப்பட்டு உங்களுக்கு கொடுக்கும் என் முதல் பதிவு.