31 May 2008

எரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்!

பெட்ரோல் விலை ஏறப்போகுதேன்னு கவலையா..! உங்களைத்தான் தேடிட்டு இருக்கோம்.


ஒரு சிம்பிள் கணக்கு சொல்றோம், கேளுங்க! இப்போ ஒரு லிட்டர் டீசல் 36 ரூபாய் 8 பைசா; பெட்ரோல் 52 ரூபாய். ஓ.கேவா? சரி, 330 மில்லி கோக் 20 ரூபா; அப்ப ஒரு லிட்டர் கோக் 61 ரூபாய். 100 மில்லி டெட்டால் 20 ரூபாய்னா ஒரு லிட்டர் 200 ரூபாய். கண்டிஷனர் ஷாம்பு 400 மி.லி. பாட்டில் 165 ரூபாய். அப்ப, லிட்டருக்கு 413 ரூபாய். மவுத்வாஷ் லிஸ்ட்ரின் 100 மில்லி 45 ரூபாய்னா ஒரு லிட்டர் 450 ரூபாய்! ஆஃப்டர் ஷேவ் லோஷன் 100 மில்லி பாட்டில் 175 ரூபா, ஒரு லிட்டர் 1,750 ரூபாய்.


எதுக்கு இப்போ இந்தக் கணக்கெல்லாம்னு கேக்கறீங்களா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... டெட்டால், ஷாம்பு, மவுத்வாஷ், ஆஃப்டர் ஷேவ் லோஷன்னு எதையாவது போட்டால் தான் நம்ம பைக், கார்லாம் ஓடும்னு இருந்தா, நம்ம நிலைமை என்ன ஆகுறது..?!


நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் மாதவன்கள் பைக், கார் ஓட்டுறதுக் காகவே பெட்ரோலும், டீசலும் படைச்ச இயற்கையோட கருணை எவ்வளவு பெருசுனு இப்பப் புரியுதா..!


ஹ¨ம்... என்ன பண்ணச் சொல் றீங்க? பெட்ரோல் டென்ஷனைக் குறைக்கிறதுக்காக இப்படியெல்லாம் அசட்டு மெயில்களை அனுப்பி ஆறுதல்பட்டுக்க வேண்டியதாயிருக்கு! நம்ம இன்டர்நெட் நண்பர்கள் இதை நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் அனுப்பியிருப்பாங்களோ? அப்ப அவருக்கு வேலை மிச்சம். இதை வெச்சே அடுத்த மூணு மாசம் ஓட்டிடுவார்!


ஜோக் இருக்கட்டும்... இதற்கு மேலும் இந்திய எண்ணெய் நிறுவ னங்களுக்கு நஷ்டத்தைத் தாங்கும் சக்தி இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. இத்தனை வருடங்களாக மானியமாக அளித்து வந்த லட்சம் கோடிகளால் முழி பிதுங்கி நிற்கின்றன இந்திய எண்ணெய் நிறுவனங்கள்! எரிகிற தீயில் பெட்ரோல் ஊத்துற கதையாக சர்வதேசச் சந்தையிலும் கச்சா எண்ணெயின் விலை எகிடு தகிடாக உயர்ந்துகொண்டு இருக்கிறது! ஆசிய நாடுகளில் அதிக அளவு எரி பொருள் செலவழிப்பதில் இந்தியா வுக்கு மூன்றாவது இடம். இத்தனை வளமான வாடிக்கையாளராக இருந் தாலும், 'ஐயா! எங்க நாட்டுல தேர் தல் வருது. கொஞ்ச நாள் பெட்ரோல் விலை ஏறாம பார்த்துக்குங்க!' போன்ற கோரிக்கைகள் எல்லாம் சர்வதேசச் சந்தையில் எடுபடாது.


சொல்லப் போனால், சர்வதேசச் சந்தை கிட்டத்தட்ட தீப்பிடித்து எரிகிறது. ஒரு வருடத்துக்குள்ளாக இரண்டு மடங்கு விலை உயர்ந்து, 133 டாலருக்கு மேல் தந்தியடிக்கிறது ஒரு பேரல் குரூட் ஆயில். இது இன்ன மும் உயரலாம் என்று 'நல்ல' சேதி சொல்கிறார் 'ஓபெக்' அமைப்பின் தலைமை நிர்வாகி. நாடு விட்டு நாடு பாயும் எண்ணெய்க் குழாய் களை தீவிரவாதிகள் வெடி வைத்துத் தகர்ப்பதும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதுமாக எண்ணெய் விலையேற்றத்துக்கான காரணங் களை அடுக்கிக்கொண்டே போகிறார் கள். இதையெல்லாம் தாண்டி, வளரும் நாடுகளை முடக்கிப்போட வளர்ந்துவிட்ட நாடு எதுவும் சதி செய்கிறதா என்றுகூட விவரமான சிலர் யோசிக்கிறார்கள்!


இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு லிட்டருக்குக் கிட்டத்தட்ட 17 ரூபாய் வரை மானியம் அளிக்கின் றன நமது எண்ணெய் நிறுவனங்கள். அதை நீக்கச் சொல்லித்தான் அவர் கள் போராடுகிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான அசல் விலையைக் கொடுத்து மக்கள் பெட்ரோல் வாங் கட்டும் என்பது அவர்களது வாதம். 'நாங்க முதல்ல ஓட்டு வாங்கிக்கி றோம்! அப்புறம் அவங்க அசல் விலைக்குப் பெட்ரோல் வாங்கட்டும்!' என்பது ஆளும் காங்கிரஸின் நிலை. 'இப்படியே அசட்டையா இருந்தீங்கன்னா இன்னமும் பொரு ளாதாரச் சிக்கல் தீவிரம் அடையும்!' என்பது பொருளாதாரப் புலிகளின் புலம்பல்.


எதுக்கும் உடனடியா நாம ஒரு நல்ல சைக்கிள் வாங்கி வெச்சுக்குறது நல்லது. சிக்கனத்துக்கு சிக்கனம்; ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்! அப்புறம், சைக்கிளுக்கும் டிமாண்ட் ஏகமா எகிறிடுங்கோ!

நன்றி, விகடன்.

0 comments: