29 May 2008

இந்தியாவில், வைரத்தின் விலை 20 சதவீதம் அதிகரிக்கும்

இந்தியாவில், பட்டை தீட்டப்படாத வைரத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வைரத்தின் விலை 20 சதவீதமாக அதிகரிக்கும் என்று வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வைர ஏற்றுமதியாளர் சஞ்சய் ஷா கூறுகையில், இந்தியாவில் பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் வைர வர்த்தக கழகம், பட்டை தீட்டப்படாத வைரத்தின் விலையை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், எனவே, வைரத்தின் விலை, 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில், அமெரிக்காதான், அதிக அளவு வைரங்களை இறக்குமதி செய்வதாகவும், அங்கு, தற்போது பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வைரம் இறக்குமதி செய்வதை தற்போது அமெரிக்கா பெருமளவு குறைத்துவிட்டதாகவும் அவர் கூறினார். எனவே, இந்திய வைரத்தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த சில ஆண்டுகளாகவே, பட்டை தீட்டப்படாத வைர உற்பத்தி செலவு, அதிகரித்து வருவதாகவும், கடந்த ஒராண்டில் மட்டும், 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments: