15 August 2008

முக்கிய கோப்புகளை அழித்துவிட்டீர்களா???

எத்தனை முறை நீங்கள் முக்கிய கோப்புகளை நிரந்தரமாக அழித்திருப்பீர்கள் அல்லது உங்கள் கணினியில் Recycle binயை Empty செய்துயிருப்பீர்கள். நாம் அனைவரும் ஏதாவது ஒருமுறையாவது இதை செய்துயிருப்போம். அதற்காக இனி கவலைபட வேண்டியதில்லை. அதற்க்காக நீங்கள் கூகினால் ( Googleல் தேடினால் என்பதன் சுருக்கம்) உங்களுக்கு நிறைய மென்பொருட்கள் வந்து குவியும். எது நல்ல மென்பொருள், எது எப்படி இருக்கும் என்ற கவலைப்பட வேண்டாம்.

உங்களுக்காக இதோ மிகசிறந்த 4 மென்பொருட்கள்.


1. Undelete Plus

எல்லா அழிக்கப்பட்ட கோப்பை கண்டுபிடிகும் இலவச மென்பொருளில் மிகவும் சிறந்தது இது. இது மிகவும் எழிதாக பயன் படுத்தும் வகையில் உள்ளது.

Download and Install Undelete Plus


2. Restoration

இதை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவாமலயே நீங்கள் அழிக்கப்பட்ட கோப்புகளை கண்டுபிடிக்கலாம் என்பதே இதன் சிறப்பு.

Download Restoration


3. PC Inspector File Recovery

இது பயன் படுத்துவது மிகவும் கடினம் ஆனால் மேல் உள்ள மென்பொருட்கள் கண்டுபிடிக்க முடியாத்தை எல்லாம் இந்த மென்பொருள் கண்டுபிடித்து தள்ளிவிடும்.

Download and Install PC Inspector File Recovery


4. Recuva

இந்த மென்பொருளின் உச்சரிப்பே “Recover” போல உள்ளாது. இது படிப்படியாக அழிக்கப்ப்ட்ட கோப்புகளை கண்டிபிடிக்க உதுவும். இதில் Advance modeம் உள்ளாதால் இதில் அந்த கோப்பின் தகவல்களை அறியலாம்

Download and Install Recuva

2 comments:

  • Mathuvathanan Mounasamy / cowboymathu says:
    18 August 2008 at 9:53 pm

    நல்ல உபயோகமான தகவல்கள். நன்றி.

    பி.கு. ஆனால் தயவுசெய்து கூகுதல் எனும் பொருத்தமற்ற சொல்லை Googling என்பதற்காக உருவாக்காதீர்கள். ஆங்கிலத்தில் go and google என்பார்கள் அதனை தமிழில் வேண்டுமானால் போய் கூகுள் பண்ணு என்று சொல்லலாமே தவிர போய் கூகு என்று கூற முடியாது. அப்படிப் பாவிக்காதீர்கள்.

  • M.Rishan Shareef says:
    3 September 2008 at 2:51 pm

    Undelete Plus

    இந்த மென்பொருள் மூலம் பல கோப்புக்களை மீளப்பெற்றுக் கொள்ளமுடிந்தது.

    இந்தச் சுட்டியைத் தந்த உங்களுக்கும், உங்கள் சுட்டியைத் தந்த 'ஆதில்'க்கும் எனது இனிய நன்றிகள் !