26 April 2009

நெருப்பு நரி தமிழில்... Firefox in Tamil....

கணினி உலகில் இந்த பிளாக் என்று ஒன்று வந்த பிறகு தமிழ் நன்றாக வளர்ந்துள்ளதாக தெரிகிறது. பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும் பிளாக் எழுதும்போதாவது Computerயை கணினி என்று பயன் படுத்துகிறோமே அது போதாதா தமிழின் வளர்சிக்கு.

இப்போது தமிழில் நெருப்பு நரி உலவி என்று அழைக்கப்படும் Fire Fox browser தான் உலகம் முழுக்க அனைவராலும் அதிகம் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் நம் தமிழ் மக்கள் உலகில் எல்லா மூலைகளிலுருந்தும் இணையத்தில் உலவுகின்றனர். அவர்களுக் இந்த நெருப்பு நரி உலவியை பயன் படுத்துவது அதிகரித்துவிட்டது.(சரி இதெல்லாம் நீ சொல்லிதான் எங்களுக்கு தெரியனுமா??? மேட்டருக்கு வா...)

இப்படி தமிழை இணயத்தில் சர்வ சாதரணமாக பயன் படுத்தும் நாம் அதற்கு உருதுனையாக இப்போது நமது நெருப்பு நரி உலவியையும் தமிழில் இருந்தால் எப்படி இருக்கும். அதற்க்கு பயன் படுவது தான் இந்த Add on. இந்த Add onயை உங்கள் நெருப்பு நரி உலவியில் நிறுவினால் File, Edit, View போன்ற அனைத்து மெனுக்களும் தமிழில் தெரியும். அப்படி தெரிவதற்க்கு சில Settingகளை உங்கள் Firefoxல் மாற்ற வேண்டும். உங்கள் உலவில் Address barல் about:config என்று டைப்பி என்டர் அழுத்தவும். எச்சரிக்கயை படித்து மீண்டும் என்டர் அழுத்தவும். இப்ப வார பக்கத்தில் மேல Filter Zone என்று ஒன்று இருக்கும். அதுல general.useragent.locale என டைப் செய்யவும். அதில் Valueவில் en-US னு இருக்கும். அதுக்கு மேல ரைட் க்கிளிக் பண்ணி en-US பதிலாக ta-LK னு டைப் செய்யவும் ( Case Sensitive வோட). அவ்வளவு தான் உங்கள் Firefoxயை Restart செய்யவும். நன்றி சுபாஷ்

இந்த Add on யை பயன் படுத்தி நீங்கள் எந்த விதமான மென்பொருளும் இல்லாமல் எளிதாக தமிழில் தட்டச்சு செய்யலாம் அதுவும் உங்க்ள் விருப்பம் போல. இதில் அஞ்சல், தமிழ்99, பாமினி, பழைய மற்றும் புதிய தட்டச்சு, இன்ஸ்க்ரிப்ட் மற்றும் அவ்வை போன்ற முறைகளில் தட்டச்சலாம்.

அதுபோல இந்த Add on யை பயன் படுத்தி தமிழ் வார்த்தைகளை சரிபார்க்களாம் (Spell Checker) ஆனால் இது இன்னும் சோதனையில் தான் உள்ளது. நீங்களும் சோதனை செய்யலாம்.

8 comments:

  • வான்முகிலன் says:
    27 April 2009 at 10:18 am

    நீங்கள் கூறியது போல ஆட்-ஆன் மூலமாக நிறுவிவிட்டேன். ஆனால் மெனுவெல்லாம் தமிழில் தெரியவில்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

  • Suresh says:
    27 April 2009 at 10:19 am

    ரொம்ப நல்ல :-) Addon and post machan

  • Suresh says:
    27 April 2009 at 10:20 am

    //நெருப்பு நரி தமிழில்... Firefox in Tamil....//

    ha ha

  • KRICONS says:
    27 April 2009 at 1:14 pm

    வான்முகிலன்,
    பழைய Firefox தான் இந்த Addon Support செய்கிறது. விரைவில் Firefox 3 Support செய்வதுபோல் கொடுக்கிறேன்.
    நன்றி

  • KRICONS says:
    27 April 2009 at 1:14 pm

    நன்றி சுரேஷ்

  • Subash says:
    27 April 2009 at 4:05 pm

    தல,
    firefox பற்றி நானும் சில பதிவுகளை இட்டுள்ளேன்.
    http://hisubash.wordpress.com/tag/firefox/

  • KRICONS says:
    27 April 2009 at 4:32 pm

    வான்முகிலன்,

    இப்போ பதிவை update செய்துள்ளேன் அவ்வாறு செய்து பார்க்கவும்.

    நன்றி.

  • KRICONS says:
    27 April 2009 at 4:33 pm

    நன்றி சுபாஷ்