27 April 2009

கூகுள் Adsenceற்கு போட்டியாக

கூகுள் Adsence என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நம் வலைபதிவில் உள்ள சில வார்த்தைகளை கொண்டு தானாகவே அது சம்மந்தபட்ட விளம்பரங்களை நம் வலைப்பதிவில் கொடுக்கும். இதனால் நிறைய பேர் இப்போதும் வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் எப்போதோ கூகுள் Adsenceல் பதிவு செய்துருப்பார்கள்.

ஆனால் இப்போதோ கூகுள் Adsenceல் இப்படி அப்படி என்று பல விதிமுறைகளை கொண்டுவந்துவிட்டனர். அதில் முக்கியமானது தமிழ் மொழியில் உள்ள வலைதளத்தில் அவர்கள் விளம்பரங்களை அனுமதிக்கமாட்டார்களாம். (தமிழனுக்கு இலங்கையில் தான் அடி என்றால் கூகுள் Adsenceலுமா???).

இப்படி இன்னும் நிறைய பேர் கூகுள் Adsenceபோல ஏதாவது வருமா நாம் ஏதாவது வருமானம் ஈட்டமுடியுமா என்று ஆவலுடன் இருந்திருப்பார்கள். இது சம்மந்தமாக என் வலைப்பதிவில் வருமானம் என்ற பதிவை எழுதினேன். ஆனால் அவை எல்லாம் எதோ ஒருவர் நம் வலைப்பதிவை பார்த்து விளம்பரம் கொடுத்தால் தான் உண்டு. (இதெல்லாம் நடக்குற காரியமா)

ஆனால் இப்பொது கூகுள் Adsenceற்கு போட்டியாக Guruji நிறுவனம் கழத்தில் இரங்கியுள்ளது. கூகுள் Adsenceபோல் கட்டுப்பாடு ஏதும் இல்லை அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இங்கு சென்று ஒரு கணக்கை தொடங்குங்கள். AdCode Creat செய்யுங்கள் உங்கள் வலைப்பதிவில் விளம்பரம் செய்யுங்கள் வருமானம் ஈட்டுங்கள்.

Go to Guruji Ads



இந்த Guruji Adsence பற்றி தெரிந்தது நம்ம சர்க்கரை பதிவில் உள்ள விளம்பரம் மூலமாக நன்றி சுரேஷ்.

10 comments:

  • Suresh says:
    27 April 2009 at 6:31 pm

    தலைவா நன்றி :-)

    நானே ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன் நல்ல விஷியத்தை யாரு சொன்ன என்ன சந்தோசாம் ...

    இன்னும் ஒரு பைசா கூட வரல ;) ஹஹஹ சும்மா போட்டு வைப்போம் என்று போட்டு இருக்கேன்.

    நன்றி நண்பா

    எனக்கு நீங்க நன்றி எல்லாம் சொல்ல வேணாம்

  • Tech Shankar says:
    27 April 2009 at 7:26 pm

    இந்தியாவின் எந்த மொழிக்குமே ஆதரவு இல்லைங்கண்ணோ .. இங்கன போகி பாருங்க

    What languages does AdSense support? //ஆனால் இப்போதோ கூகுள் Adsenceல் இப்படி அப்படி என்று பல விதிமுறைகளை கொண்டுவந்துவிட்டனர். அதில் முக்கியமானது தமிழ் மொழியில் உள்ள வலைதளத்தில் அவர்கள் விளம்பரங்களை அனுமதிக்கமாட்டார்களாம். (தமிழனுக்கு இலங்கையில் தான் அடி என்றால் கூகுள் Adsenceலுமா???).//



    ஒரு சின்ன விசயம் - ஆட்சென்ஸ் உலகலாவிய வேட்டைக்காரன். அவனுடன் குருஜி எந்த அளவு போட்டிபோடப் போகிறான் என்பது தெரியவில்லை.
    இப்போது இந்தியாவில் மக்கள் தொகை அதிகமோ அதிகம். அதேபோல இந்தியாவில் ஆட்சென்ஸுக்கான publishersம் அதிகமோ அதிகம். (காரணம் : மக்கள் தொகை)

    இவ்வளவு மக்கள் தொகைக்கும் - இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு மொழியாக இருப்பின் - கூகிளின் ஆதரவு அந்த ஒரு மொழிக்கு கண்டிப்பாக இருந்திருக்கும்.

    ஆனால் இப்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மொழி இருப்பதால் - கூகிள் ஆட்சென்ஸ் மண்டையைப் பிச்சுக்கிறான்.

    இந்தியாவில் இத்தனை publisher இருக்காங்க. ஆனால் இத்தனை advertisers இல்லை. அதுதான் குறை. நாம் இன்னும் வளரும் நாடுன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறோம்

    எப்போது வளர்ந்த நாடுன்னு சொல்லப்போறோமோ தெரியல.


    Chinese (simplified) , Chinese (traditional) -- அங்கே ஒரே மொழியாக தேசிய அளவில் இருப்பதனால் adsenseன் ஆதரவு உண்டு.

    ஆனால் இப்போது ஆட்சென்ஸுக்கான புதிய அக்கவுண்டை இந்தியர்கள் பெறுவது மிகக் கடினம். பழைய publishersக்கு பிரச்சினை இல்லை. புதிய publisherக்கு பயனர் கணக்கே கொடுக்க மறுக்கிறார்கள். தட்டிக் கழிக்கிறார்கள். காரணம் இத்தனை publisherக்கும் பணம் கொடுக்கும் அளவிற்கு போதிய advertiser இங்கே இல்லை. ஒரே மொழியாக இந்தியா முழுவதும் இருந்தால் - போதுமான publishers இருந்திருப்பார்கள்.

  • KRICONS says:
    27 April 2009 at 11:04 pm

    நன்றி சுரேஷ். எனக்கு Rs.2.52 Credit ஆயிருக்கு.

  • KRICONS says:
    27 April 2009 at 11:04 pm

    நீங்கள் சொல்வது உன்மைதான் தமிழ்நெஞ்சம். இந்தியாக முழுவது ஒரே மொழியாக இருந்தால் பிரச்சனை இல்லை.

  • Tech Shankar says:
    27 April 2009 at 11:40 pm

    என்ன கொடுமை சார் இது - அவனவன் ஒரு நாளைக்கு 1000$களை adsense வழியா குவிக்கிறான். இங்கே நம்ம நிலைமை இவ்வளவு தலைகீழாக இருக்கு.

    நானும் ஆட்சென்ஸ் போட்டிருக்கேன். ஆங்கிலத்தளத்தில் போட்டிருக்கேன்.

    நல்ல ஆங்கிலப்புலமை இருப்பின் - அதில் சாதிக்கலாம். அது இல்லாததால் இப்படி தமிழில் டைப்பிக்கிட்டிருக்கிறேன்.



    //நன்றி சுரேஷ். எனக்கு Rs.2.52 Credit ஆயிருக்கு.

  • Tech Shankar says:
    27 April 2009 at 11:42 pm

    ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் - எக்காரணம் கொண்டும் உங்கள் நடப்பு ஐபி வழியாக உங்கள் விளம்பரங்களைக் கிளிக்கி விடாதீர்கள். உங்கள் குருஜி விளம்பரங்களை ஏதோ ஆர்வக்கோளாறில் கூட உங்களது கணினி (ஐபி - என வைத்துக்கொள்வோம்) அதன் மூலம் க்ளிக்கிவிடாதீர்கள். அது டைனமிக் ஐபியாகவே இருந்தால்கூட.

  • KRICONS says:
    28 April 2009 at 10:05 am

    தமிழ்நெஞ்சம்,

    ஏன் நீங்கள் அதே Codeயை வைத்துக்கொண்டு உங்கள் தமிழ் தளத்திலும் போடலாம் அல்லவா???
    ///நானும் ஆட்சென்ஸ் போட்டிருக்கேன். ஆங்கிலத்தளத்தில் போட்டிருக்கேன்.///

  • கடைக்குட்டி says:
    29 April 2009 at 12:23 pm

    தல.. code paste பண்ணி ரெண்டு நாள் ஆச்சு.. ஒன்னும் காணோம்.. என்ன பண்றது???

  • KRICONS says:
    29 April 2009 at 12:58 pm

    கவலைய விடுங்க கடைக்குட்டி,

    உங்கள் கணக்கு Activate ஆக இரண்டு நாள் ஆகும். எனக்கும் அப்படிதான் முதலில் ஆனது

  • Subash says:
    3 May 2009 at 10:45 am

    அடடா இந்தப்பதிவை விட்டுவிட்டேனே

    தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் நண்பா.

    நிறைய பப்ளிசர்ஸ் வேண்டுமென்பது உண்மைதான்.