DUCATIன் தோற்றமே, இதயத் துடிப்பை எகிறவைக்கும். அருகில் சென்று பார்த்தால்,
உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறக்க வேண்டும் என மனசு பரபரக்கிறது. 'இந்த பைக்குக்கு, இளம் பெண்களின் லிஃப்ட் தொந்தரவு நிச்சயம் இருக்கும்' என்கிறார்கள் இதன் ரசிகர்கள்.
ஸ்டார்ட் பட்டனைத் தட்டியவுடன், கொஞ்சம் தாமதித்துதான் ஸ்டார்ட் ஆகிறது. காரணம், பைக்கினுள் இருக்கும் சென்ஸார்கள், இன்ஜினில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்த பிறகுதான் ஸ்டார்ட்டர் மோட்டாரைச் சுழல அனுமதிக்கிறது. பைக் ஸ்டார்ட் ஆனவுடன் 'கீச்' சத்தம் காதைக் கிழிக்கிறது. சத்ததைக் கேட்டவுடன் தெருநாய்கள் தெறித்து ஓடிவிடும்.
முதல் கியரைத் தட்டியதும் தலையில் 'நங்'கென்று கொட்டியது போல வெறிகொண்டு பறக்கிறது. இந்த பைக்கை, பயபக்தியுடன் அலுங்காமல் குலுங்காமல் ஓட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. கிளட்ச்சைப் பிடித்து ஓட்ட உடம்பில் எக்ஸ்ட்ரா சக்தி வேண்டும். 160தீலீஜீ சக்திகொண்ட இந்த வேகப் பிசாசை ஓட்ட 'தில்' நிறைய வேண்டும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸைக்கொண்ட இந்த பைக்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது.
பிரேக்குகள் பிடித்த நொடியில் நிற்கின்றன. ஆனால், நீண்ட நேரம் ஓட்டினால், இன்ஜின் சூடு கால்களின் தொடை வரை ஏறுகிறது. 26 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை, வாழ்நாளில் ஒரு முறையாவது ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பைக் ரசிகர்களின் தீராத ஆசை!
நன்றி, விகடன்.
0 comments:
Post a Comment