விண்வெளியில் திருமணம் செய்ய அணுகவும்
உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஒரு ஜப்பான் நிறுவனம். ஆனால் திருமணம் நடப்பது இன்றோ அடுத்த மாதமோ அல்ல 2011ல்.2011
ம் ஆண்டில் விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்கிறது அந்த விளம்பர தகவல்.இங்கேயே ஒரு திருமணத்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்கிறோம். விண்வெளியில் என்றால்!!!! கட்டணம் எவ்வளவு இருக்கும்? ரொம்ப ஒன்றும் அதிகம் இல்லை வெறும் ரூ.10 கோடிதான். 10 கோடி கொடுத்து பதிவு செய்து கொள்ளும் ஜோடிக்கு விண்வெளியில் சிறிய விண்வெளி ஓடத்தில் திருமணம் இனிதே நடந்தேறும். இந்த 10 கோடியில் பூமியில் நடக்கும் திருமண வரவேற்பு, மணமக்களின் ஆடை, போக்குவரத்து செலவு, மணமக்களுக்கு விண்வெளியில் பயணிப்பதற்கான 4 நாள் பயிற்சிக் கட்டணமும் அடங்கும். மணமக்களுடன் திருமணம் நடத்தி வைக்க அய்யரோ அல்லது பாதிரியாரோ உடன் செல்லலாம். அதைத் தவிர மணமக்களுடன் மேலும் 2 பேர் விண்வெளி திருமணத்தில் பங்கேற்கலாம். அதைத் தவிர விண்வெளியில் நடக்கும் திருமணம் பூமியில் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படும்.திருமணச் சடங்குகளில் பெரும்பாலானவற்றை பூமியில் முடித்துக்கொண்டு உச்சகட்டமாக மாலை மாற்றுவது அல்லது நம்ம ஊர்க்காரர்கள் என்றால் தாலி கட்டுவதை விண்வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விண்வெளி திருமணத் திட்டத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ராக்கெட் நிறுவனத்துடன் ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஜப்பானின் விண்வெளி திருமணத் திட்டத்தைப் பார்த்தால் அடுத்தது நிலவிலேயே தேனிலவுக் கொண்டாடும் திட்டம் வரும் என்று எதிர்பார்க்கலாமோ...
இந்த வழியாக இந்த பதிவு
0 comments:
Post a Comment