19 May 2008

டாஸ்மாக்கில் புதிய ரக பீர்கள்

மது பிரியர்களுக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் புதுச்சேரியில் தயாரிக்கப்படும் புதிய ரக பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களில் மொத்தம் 103 வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.8000 கோடி வருவாய் கிடைக்கிறது.
உள்நாட்டு தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகளே பெரும்பாலும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது கோடை வெயில் கொளுத்துவதால் மதுபிரியர்களை குளிர்விக்க புதிய ரக பீர் வகைகளை டாஸ்மாக் அறிமுகம் செய்துள்ளது.
புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட 4 புதிய பீர் வகைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 2 வகை பீர்கள் மாவட்டம் தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
6 சதவீத ஆல்கஹாலுடன் ரூ.60க்கு ‘ஓரியன் 2000 ஸ்டாரங்‘, 5 சதவீத ஆல்கஹாலுடன் ரூ.62க்கு ‘ராயல் சேலஞ்ச் லெகர்‘ பீரும் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் 5000 பீர் ரூ.67க்கும், கிங்பிஷர் ரூ.66க்கும், கோல்டன் ஈகிள் லெகர் ரூ.57க்கும், மார்க்கோபோலோ ரூ.60க்கும் விற்கப்படுகிறது. பெரும்பாலும் 5000 மற்றும் கிங்பிஷர் பீர் வகைகளே அதிகம் விற்பனையாகிறது.
இப்போது விலை குறைவாக புதிய வகை பீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மதுரை உட்பட சில மாவட்டங்களில் இந்த பீர்கள் விற்பனைக்கு வந்துவிட்டது. மற்ற மாவட்டங்களில் ஸ்டாக் தீர்ந்த பின்னர் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த புதிய வகை பீர்களை புதுச்சேரியை சேர்ந்த ஸ்கால் பிரீவேரீயஸ் லிமிடெட்டின் சிகா நிறுவனம் தயாரிக்கிறது.

0 comments: