19 May 2008

அஜித் 70 கோடி பட்ஜெட்டில் சுல்தான்-தி வேரியர்

முதல் முறையாக தமிழ் படம் ஒன்று உலக அளவிலான சந்தைக்கு போகிறது. அந்த பெருமையைக் கொடுத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி அனிமேஷனில் நடிக்கும் சுல்தான் தி வேரியர். ரஜினி நடித்து வெளியான படங்கள் தமிழகத்திலும் உள்நாட்டிலும் அதிக நாட்கள் ஓடுவது சாதாரண விஷயம். ஆனால் ஜப்பானில் 400 நாட்கள் வரை ஓடி சக்கைப் போடு போட்டது முத்து. அதைத் தொடர்ந்து உலகளவில் ரஜினியின் படத்துக்கு தனி மவுசு ஏற்பட்டது.

சமீபத்தில் 80 கோடி பட்ஜெட்டில் ரஜினி நடித்து வெளியான சிவாஜி படம் உலகளவில் ரெகார்ட் பிரேக் செய்தது. இது தமிழ் சினிமாவுக்கான வர்த்தகத்தையும் தலைநிமிர வைத்தது. தற்போது தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக தயாராகி கொண்டிருக்கும் குசேலன் படத்தின் உள்நாட்டு உரிமையை சாய்மீரா நிறுவனம் ரூ.64 கோடிக்கு வாங்கியுள்ளது. வெளிநாட்டு உரிமையை ரூ.40 கோடி கொடுத்து ஐங்கரன் வாங்கியுள்ளது.
உலக மார்க்கெட்டில் எகிறும் ரஜினியின் படங்களின் அடுத்த வரிசையில் இருப்பது சுல்தான் தி வேரியர். அனிமேஷனில் ரஜினி கலக்கும் இந்த படம் ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டூடியோஸ், அனில் அம்பானியின் அட்லாப்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஆகியவையின் கூட்டு தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மிக அதிகமாக 70 கோடி பட்ஜெட்டில் இந்த அனிமேட்டட் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ரூ.250 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1700-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
70 லட்சத்தில் உருவாக இருந்த இந்த படம், சிவாஜியின் சூப்பர் டூப்பர் ஹிட்டினால் 70 கோடி பட்ஜெட்டுக்கு உயர்ந்துள்ளது. ரஜினியின் எல்லா வயது ரசிகர்களும் ஆதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படமாக உள்ளது சுல்தான் தி வேரியர்.
சுல்தானை தொடர்ந்து வார்னர் பிரதர்சுடன் இணைந்து ஆக்கர் ஸ்டூடியோஸ், பில்லாவின் அடுத்த பார்ட்டை தயாரிக்க உள்ளது. அதில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கிறார்.

0 comments: