13 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4

பகுதி-1 பகுதி-2 பகுதி-3
பொதுவானவை
நீங்கள் உங்கள் Profile பகுதியில் கண்டிப்பாக உங்கள் புகைபடத்தையோ அல்லது வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த படத்தையோ வைக்க வேண்டும். இதனால் நீங்கள் ஒரு பிளாக்கை Followசெய்யும் போது முன்னால் தெரிவீர்கள். அதாவது எனது பிளாக்கில் தற்போது 59பேர் Follow செய்கிறார்கள். நீங்கள் 60 நபராக Follow செய்ய நினைத்தால் புகைபடம் இருந்தால் மட்டுமே முன் பக்கத்தில் காண்பிக்கும். புகைபடம் இல்லாமல் இருந்தால் கடைசியாகதான் காண்பிக்கும். அதனால் உடனே புகைபடத்தை உங்கள் Profileல் நிறுவுங்கள்.

3. Go to TOP Arrow

இப்போதெல்லாம் சில பிளக்களில் வலது பக்கமாக கீழே நீங்கள் படத்தில் உள்ளது போல ஒரு Arrowவை பார்க்கலாம். எனது பிளாக்கிலும் உள்ளது. இதற்கு Go to TOP Arrow என்று சொல்வார்கள். உங்கள் பிளாக்கில் Go to TOP என்ற ஒரு பட்டனை நிறுவவதால் உங்கள் பிளாக்கின் கீழ்பகுதி வரை சென்று படிக்கும் வாசகன் (???!!!) எளிதாக மேல் பகுதிக்குசெல்ல உதவும். அதற்கு நீங்கள் கீழே உள்ள Codeயை Layoutல் Page elementல் Add Gadgetல் Html or JavaScriptல் போட்டுக்கொள்ளவும்.

<a style="display:scroll;position:fixed;bottom:5px;right:5px;" href="#" target="_self" title="Back to Top"> <img src="http://www.ranegrouppune.com/images/top-arrow.jpg"/> </a>


4.Favorite Icon

Favorite Icon என்பது உங்கள் Browserல் Address barல் உங்கள் பிளாக்கின் முகவரியை அடையாளமாக காட்டும் ஒரு சிறிய படம். இது பொதுவாக blogspot.comக்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் உங்கள் விருப்பம் போல இதை மாற்ற கீழே உள்ள Codeஐ படத்தில் உள்ளது போல Layoutல் Edit HTMLல் ]]></b:skin> மற்றும் </head>ற்கு இடயில் ஒட்டவும். இங்கு-உங்கள்-படத்தின்-முகவரி என்ற இடத்தில் எந்த படம் உங்கள் FavIcon ஆக வர வேண்டும் என்று நினைக்கிறேர்களே அந்த படத்தின் முகவரி. நம்ம தமிழ்நெஞ்சம் அவரோட படத்தியே வைத்திருப்பார். நீங்கள் கொடுக்கும் படம் அனிமேசனாக இருந்தால் உங்கள் FavIcon அனிமேசனாக காட்சிதரும். 18000மேற்பட்ட அனிமேசன் FavIconகளை பெற நீங்கள் இந்த தளத்திற்கு செல்லலாம்

<link href="'<span" style="color: rgb(255, 102, 0);">இங்கு-உங்கள்-படத்தின்-முகவரி</span>' rel='shortcut icon' type='image/x-icon'/><br><link href="'<span" style="color: rgb(255, 102, 0);">இங்கு-உங்கள்-படத்தின்-முகவரி</span>' rel='icon' type='image/gif'/>


இந்த தொடர் கண்டிப்பாக உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட உதவி இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் கொடுத்தவை எல்லாம் ஏதோ கல்லூரிக்கு சென்றது கற்றது இல்லை. எல்லாம் நம்ம அண்ணாச்சி கொடுத்தது தான். யாரு அந்த அண்ணாச்சி என்று கேட்கிறேர்களா அதாங்க நம்ம Google அண்ணாச்சி. என்ன கேட்டாலும் கொடுக்கிறவர்.

11 comments:

  • கலையரசன் says:
    13 May 2009 at 4:27 pm

    ஹய்யா நான்தான் 1ஸ்டு!

    பதிவை பதிந்து தகவல் பகிர்ந்ததற்க்கு,
    ரெரரராம்ப நன்றிகோ!

  • அப்துல்மாலிக் says:
    13 May 2009 at 6:23 pm

    நல்லாவே பாடம் நடத்துறீங்க.. வாழ்த்துக்கள்

    நல்ல பயனுள்ளதாகவே இருக்கு உங்க பதிவு

  • மச்சான் ஒவ்வொறு பதிவிலும் ஒரு பாயிண்ட் ஐ ஃபாலோ பண்றேன் மச்சான்
    ரொம்ப நன்றி மச்சான்

  • Menaga Sathia says:
    13 May 2009 at 10:14 pm

    நானும் go to top arrow மார்க்கை என் ப்ளாக்கில் செய்திருக்கேன்.உங்க பதிவுகள் அனைத்தும் ரொம்ப நல்லாயிருக்கு.மிக்க நன்றி!!

  • malar says:
    13 May 2009 at 11:49 pm

    Go to TOP Arrow

    எனது ப்லோக்க்கில் வொர்க் அவுட் ஆகவில்லை .சற்று விளக்க முடயுமா ?

  • Anbu says:
    16 May 2009 at 3:49 pm

    நானும் go to top arrow மார்க்கை என் ப்ளாக்கில் செய்திருக்கேன்.உங்க பதிவுகள் அனைத்தும் ரொம்ப நல்லாயிருக்கு.மிக்க நன்றி!!

  • KRICONS says:
    17 May 2009 at 12:18 am

    நன்றி கலையரசன்,

    ///ஹய்யா நான்தான் 1ஸ்டு!///

    வாழ்த்துக்கள்

  • KRICONS says:
    17 May 2009 at 12:20 am

    நன்றி அபுஅஃப்ஸர்

    நன்றி பிரியமுடன்.........வசந்த்

    நன்றி Mrs.Menagasathia

  • KRICONS says:
    17 May 2009 at 12:24 am

    நன்றி malar


    ///Go to TOP Arrow
    எனது ப்லோக்க்கில் வொர்க் அவுட் ஆகவில்லை///

    இப்பொழுது வொர்க் அவுட் ஆகிடுச்சே!!!


    நன்றி Anbu

  • S.A. நவாஸுதீன் says:
    30 May 2009 at 7:34 pm

    மிக பயனுள்ள பதிவு

  • sangawww says:
    23 June 2009 at 10:01 am

    நல்ல கிளாஸ் எடுக்கிற மாப்பிள்ள
    நன்ன்ன்ன்ன்ன்ன்றி...................................


    எப்பிடி மாமன் மச்சான் போல இருக்கா?