1 May 2009

டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து அழிக்க

எனது மடிக்கணியில (அதுதாங்க LAPTOP) மொத்தமே 40GB தாங்க.(இப்போ என்கிட்ட இருக்கிற Pen Driveவே 32GB) 6வருடங்களுக்கு முன் வாங்கியது. விலை 40K சொச்சம். (சரி இப்ப அதெல்லாம் எதுக்கு இங்க சொல்ற). அப்படி 40GB இருக்கிற Driveல 5GB இடம் ஒரே கோப்பே இரண்டு இடங்களில் இருந்ததால் நிரப்பியுள்ளது. முக்கியமாக MP3 ஆடியோ மற்றும் Image கோப்புகளே.

அதாவது நன்பன் ஒருவன் புதிய பாடல்கள் அடங்கிய MP3 DVD வாங்கிட்டு வந்துருப்பான். அதில் உள்ள பாட்டுகள் சிலவட்றை ஒரு Folderல் Copy செய்து வத்திருப்பேன். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய MP3 DVD கிடைக்கும். மீண்டும் Copy வேறு ஒரு Folderல். இப்படியே சில பாடல்கள் இரண்டு முறை Copy செய்யப்பட்டிருக்கும். அதே போல தான் சில புகைப்படங்களும். நீண்ட நாட்களாக இப்படிப்பட்ட டூப்ளிகட் கோப்புகளை கண்டுறிந்து அழிக்க ஏதாவது மென்பொருள் கிடைக்குமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இது போல உங்கள் கணினியிலும் கண்டிப்பாக நூற்றுக்கணக்கான ஏன் சில கணினிகளில் ஆயிரக்கணக்கான கோப்புகள் கூட இருக்கலாம்.

தற்செயலாக கண்ணில் சிக்கியதுதான் இந்த Duplicate Cleaner மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருள் என்பது மேலும் சிறப்பு. இதில் நீங்கள் எந்த கோப்புகளை மட்டும் தேட வேண்டும் என்று குறிப்பிடலாம். உதாரணமாக Image File மட்டும் தேட வேண்டும் என்றாலோ அல்லது ஆடியோ கோப்புகளை மட்டும் தேட்ட வேண்டும் என்றாலோ அதற்கு தனியாக Options உள்ளன. இது கண்டுபிடித்து கொடுக்கும் Duplicate புகைப்பட கோப்புகளை அழிப்பதற்கு முன்னால் அதை Preview பார்க்கும் வசதி உள்ளது.

Duplicate Cleaner பதிவிறக்க

இங்கு கண்டிப்பாக கிளிக்க வேண்டாம்


10 comments:

  • Subash says:
    1 May 2009 at 5:47 pm

    அருமையான பகிர்வு நண்பா
    மிக்க நன்றிகள்

  • வடுவூர் குமார் says:
    1 May 2009 at 6:55 pm

    நானும் இதைத் தான் தேடிக்கொண்டிருந்தேன்.மிக்க நன்றி.

  • ***வாஞ்ஜுர்*** says:
    1 May 2009 at 7:00 pm

    YOU ARE GREAT .

    GOOD SERVICE.

    MUCH APPRECIATED.

    KEEP IT UP.

    THANK YOU.

    REGARDS.
    VANJOOR.

    ***வாஞ்ஜுர்***

  • வண்ணன். says:
    2 May 2009 at 7:42 am

    வணக்கம் தலைவர்..
    உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் பார்த்தேன்.. சூப்பராயிருக்கு.

    அதிலும் உங்களுடைய மொழிபெயர்ப்பு திறமை சூப்பரிலும் சூப்பர் தலைவா.

  • KRICONS says:
    2 May 2009 at 9:38 pm

    நன்றி சுபாஷ்

  • KRICONS says:
    2 May 2009 at 9:38 pm

    நன்றி வடுவூர் குமார்

  • KRICONS says:
    2 May 2009 at 9:39 pm

    நன்றி வாஞ்ஜுர்

  • KRICONS says:
    2 May 2009 at 9:40 pm

    நன்றி வண்ணன்

  • மாதேவி says:
    3 May 2009 at 3:42 pm

    பயனுள்ள பதிவு

  • பிரேம்ஜி says:
    9 May 2009 at 9:56 pm

    உபயோகமான தகவல். மிக்க நன்றி.