முதன் முதலில் என் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தவுடன் சந்தோசமாக இருந்தது. அதை பார்த்தவுடன் ஒரு யூத்ஃபுல் விகடனுக்கு ஒரு நன்றியும் என் பதிவு விகடனில் என்ற ஒரு தற்பெருமை பதிவையும் என்னை போல பலரும் எழுதுவார்கள். இது ஒரு தமிழ் பிளாகரின் கடமையாகவே பலரும் கருதிவருகின்றனர்.
இவ்வளவு ஏன் பலரும் அது எப்படிங்க விகடனில் என் பதிவு கொண்டுவருவது என்று நண்பர் வடிவேலுவும் பின்னூட்டத்தில் கேட்டுள்ளார். அட நம்ம கடைக்குட்டி அவருக்கும் விகடனில் வரும் ஆசையை கனவில் வந்துள்ளதாக ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். நான் படித்த வரையில் இதெல்லாம் இன்னும் நான் படிக்காமல் விட்டது எத்தனையோ.
இவ்வளவு மதிப்பும் மரியாதையும் நம் பிளாகர் சமூகமே அதன் மீது வைத்துள்ளது. இதை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் வெளிவந்ததுதான் நேற்றைய குட் Blogs பகுதி. ஆம் நேற்றைய குட் Blogs பகுதியில் ஒரு பதிவு அப்படியே போனவாரம் ஒரு வாரப்பத்திரிக்கையில் வெளிவந்தது. காப்பி அடித்து அவர் எழுதியுள்ளார் அதுவும் குட் பிளாக்காம் கொடுமைடா சாமி. இதிலே இன்னோரு கொடுமை என்னன்னா அந்த வாரப்பத்திரிக்கையும் அதை எதோ ஒரு இடத்திலிருந்து சுட்டது. நம்மில் பலர் ஏற்க்கனேவே அதை படித்திருப்போம்.
எந்த அடிப்படையில் குட் பிளாக் தேர்ந்தெடுக்கப்படுகிறது? இந்த அளவிற்க்கு பெரிய பத்திரிக்கை இப்படியா??? யானைக்கும் அடி சருக்கும் என்பது இது தானோ??? இதே போல் முன்புபொரு முறை நம்ம தமிழ்நெஞ்சத்தின் ஒரு பதிவை ஒருவர் அப்படியே காப்பி செய்திருந்தார். அந்த காப்பி அடித்தவரின் பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்திருந்தது. அதை அடுத்து டூப்ளிகேட் பிரியர் விகடனாருக்கு நன்றி என்று ஒரு பதிவையும் போட்டார்.
எத்தனையோ நல்ல ஒரிஜினல் பிளாக்கர்கள் நம் பதிவு யூத்ஃபுல் விகடனில் வராதா என்று ஏங்கிகொண்டிருக்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக் 5நிமிடத்திற்க்கு ஒரு பதிவு இந்த வலையுலகில் வெளியாகிறது. அதில் எத்தனையோ நல்ல ஒரிஜினல் பிளாக்குகள் உள்ளன. நான் அந்த வாரப்பத்திரிக்கயில் சுட்டவரை ஒன்றும் சொல்லவில்லை. அவர் படித்த நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிரார். இப்படியே போனால் விகடனிலிருந்து சுட்டு போட்டாலும் குட் பிளாக்கில் வெளிவரலாம் யார் கண்டார்???
இனி மேல் இந்த தவறு இல்லாமல் யூத்ஃபுல் விகடன் பார்த்துக்கொள்ளும் என்று தோன்றுகிறது.
தல எனக்கு யூத்புல் விகடன் வேண்டம் நம் பதிவர் சமுகத்தில் நல்ல பதிவாளர் என்ற பெயர் வந்தால் போதும் இருந்தாலும். உங்களுக்கு நன்றி
தலைவா... நான் போட்ட அந்தப் பதிவு எல்லாரையும் கலாய்க்கதான்.. சீரியசான ஆசையெல்லாம் இல்ல..
ஜாலிக்காக எழுதுறேன்.. கூடவே.. பணமும் வந்தா ஜாலிதான்...
நீங்க சொன்னத வெச்சி குருஜி ஆட்ஸ் போட்டா malware detected ன்னு வருது.. சோ நான் வேற போட்டுருக்கேன்..
மிச்சபடி.. விகடன் மேல இருந்த மரியாதை காலி...
ஹம் குருஜி ஆட் எல்லாம் கலை கட்டுது போல எல்லாதுக்கும் அந்த லிங் வேறு ;)
தமிழ் நெஞ்சம் மேட்டர் தெரியும் நீங்க சொன்ன அந்த காப்பி மேட்டர் என்ன பதிவுனு மெயில் பன்னுங்க
நானே மறந்திருந்தாலும் அதை நினைவூட்டுரீங்க.
அவர் பாவம் - அந்தப் பதிவை அவரே அவர் பதிவில் இருந்து தூக்கிட்டார். நான் அவரைப் பற்றி எதுவும் குறை சொல்லவேயில்லை.
குறுந்தகவல் :
குருஜி ஆட்ஸில் pay rate எப்படி இருக்கு. தமிழ் வலைப்பூவை ஏற்றுக்கொள்கிறதா? தோராயமாக 10 க்ளிக்குகளுக்கு எத்தனை Rs. கொடுக்கிறார்கள். ப்ளீஸ் விளக்கம் தேவை.
தனி மடலில் தொடர்புகொண்டாலும் சரியே : tamilnenjam@gmail.com
கிர்க்கான்ஸ்..
நீங்கள் எந்தப் பதிவைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.
மேலும், யூத்ஃபுல் விகடன் ஒரு பதிவு சொந்தமானதா இல்லை காப்பியடித்ததா என்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அனைத்து பத்திரிக்கைகளையும், வலைத்தளங்களையும் படிக்க பல ஆட்களை அமர்த்த வேண்டும்.
அவர்களுக்கு வருவதில் நல்லதாகத் தெரிந்தால் அவர்கள் வெளியிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்!!
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..
என்ன சொல்கிறீர்கள்?
ஆகா!, எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி மேட்டர் எல்லாம் சிக்குதோ????
கோ்டீஸ்வரப் பதிவர், குருஜி புகழ் Kriconsக்கு ஒரு ஓ போடுங்கப்பா....
தங்களின் இந்தப் பதிவினை முதலிலேயே படித்துவிட்டேன் தல. அப்பொதே ஓட்டும் போட்டுவிட்டேன்.
எனது இடுகை யூத் ஃபுல்விகடனில் வந்ததை சொன்னதற்கு நன்றி.
புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தின் திரட்டில் நமது இடுகை வருவது ஒருவகையில் பெறுமைதான்
சிலர் ஆட்சென்ஸ் பெறுவதற்காக ஆங்கிலத்தில் பிளாக்கை தொடங்கி காப்பி, பேஸ்ட் செய்கிறhர்கள். சிலர் அதிக போஸ்ட் போடுவதற்காக கா, பே செய்கிறhhர்கள். நானும் கா, பே செய்வேன்/ போட்டோவை மட்டுமே.
//யூத்ஃபுல் விகடன் ஒரு பதிவு சொந்தமானதா இல்லை காப்பியடித்ததா என்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அனைத்து பத்திரிக்கைகளையும், வலைத்தளங்களையும் படிக்க பல ஆட்களை அமர்த்த வேண்டும்.
அவர்களுக்கு வருவதில் நல்லதாகத் தெரிந்தால் அவர்கள் வெளியிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்!!
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..//
S.Senthilvelan சொல்லியிருப்பதை அப்படியே வரவேற்கிறேன்.
அப்படி அவர்கள் தெரியாமல் சுட்ட பதிவுகளுக்கு அங்கீகாரம் அளித்திருந்தால், நீங்கள் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம்.
ஒருவேளை அந்த மின்னஞ்சலுக்கு அவர்கள் ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை என்றால், உங்களது கண்டனத்தை பதிவு செய்திருக்கலாம்.
மற்றபடி MR. KRICONS, உங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அதிகமாக பின்னூட்டம் இடும் நல்ல பழக்கம் என்னிடம் இல்லை. எனவே, வலையுலகில் என்னை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வாழ்த்துகள்.
-குளோபன்
நன்றி கடைக்குட்டி
நன்றி சுரேஷ்,
///ஹம் குருஜி ஆட் எல்லாம் கலை கட்டுது போல எல்லாதுக்கும் அந்த லிங் வேறு ;)///
இன்னிக்கு நீங்க மாட்னீங்களா :)
எல்லாம் பிஸ்னஸ் டிரிக்கு தான்.. ஆனா வருமானம் தான் இல்லை :(
நன்றி தமிழ்நெஞ்சம்
நன்றி செந்தில்வேலன்,
///திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..///
அது உன்மை தான்
நன்றி சுபான்கான்,
///ஆகா!, எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி மேட்டர் எல்லாம் சிக்குதோ????///
தன்னால வருது :)
///கோ்டீஸ்வரப் பதிவர், குருஜி புகழ் Kriconsக்கு ஒரு ஓ போடுங்கப்பா....///
இதில்லாம் ரொம்ப ஓஓஓஓஓவர்
நன்றி SUREஷ்,
///புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தின் திரட்டில் நமது இடுகை வருவது ஒருவகையில் பெறுமைதான்///
அது இருக்கு
நன்றி விஜய்
நன்றி globen
///அதிகமாக பின்னூட்டம் இடும் நல்ல பழக்கம் என்னிடம் இல்லை. எனவே, வலையுலகில் என்னை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.///
இப்போது அறிந்து கொண்டேன்
நன்றி வடிவேலன்
இப்படியெல்லாமா விகடன்ல நடக்கும்/