ஏற்கனவே இந்த பிளாக்கில் Tamilishற்கு சில யோசனைகள் படிச்சிருப்பீங்க. படிக்காதவங்க இங்க வந்து படிச்சுக்கோங்க. என்னடா இவன் ஒரே யோசனையா சொல்கிட்டு இருக்கானே இவனுக்கு யாராச்சும் ஒரு யோசனை கூட சொல்ல மாட்ராங்களேன்னு நினைக்கிறீஙளா??? உடனே ஒரு பதிவை போடுங்க. (தலைப்பு KRICONS போன்றவர்களுக்கு யோசனை). உலகத்திலேயே இலவசமாகவும் Cheepஆகவும் கிடைக்கும் ஒன்னே ஒன்னு யோசனை தான். (சரி மேட்டருக்கு வா). சரி இப்போ யூத்ஃபுல் விகடனுக்கு எதோ எனக்கு தோன்றிய சில யோசனைகள். (குறிப்பாக பிளாக் பக்கத்திற்கு மட்டும்)
1. குட்... Blog பகுதியை சில வகைகளாக பிரிக்கலாம். அதாவது தொழில்நுட்பம், கவிதை, கதை, கட்டுரை, மொக்கை போன்றவற்றில் குறைந்தது இரண்டு பிளாக்களை ஒவ்வொரு பிரிவிலும் வெளியிடலாம்.
2. குட்... Blog பகுதியின் கீழேயே Blogs கார்னரின் Linkயை கொடுக்கலாம். இதனால் புதிதாக வருபவர்கள் மற்ற பிளாக்களை படிக்க வருவார்கள்.
3. Blogs கார்னர் பகுதியிலும் வகைகளாக பிரித்துக்கொடுத்தால் வாசகர்களுக்கு வசதியாக இருக்கும். யாருக்கு எந்த வகை பிடிக்கிறதோ அந்த Blogயை படிக்க அவ்ர்களுக்கு வசதியாக இருக்கும்.
4. யூத்ஃபுல் விகடன் மூலமாக ஒரு பிளாக் எத்தனை முறை படிக்கப்பட்டது என்ற விவரத்தை Blogs கார்னர் பகுதியில் Blogன் அருகிலேயே தெரியுமாரு செய்யலாம். இதனால் பலருக்கு பிடித்த Blog பலரும் படிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திகொடுக்கலாம்.
5. ஒரு மாதத்தில் அதிகமாக யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த வளைபதிவாளரை ஒவ்வொரு மாதமும் கெளரவிக்கலாம்.
உங்களுக்கு தெரிந்த யோசனைகளையும் பின்னூட்டத்தில் கொடுக்கலாம்.
யோசனை நன்றாக இருக்கிறது. விகடன் செவிமடுப்பார்கள் என நம்பலாம்
தங்கள் யோசனையே நன்றாகத்தான் உள்ளது.
அருமையான யோசனைகள்
யோசனைகள் நன்றாகத்தான் உள்ளன. விகடனை Tamilsh போல மாற்றச் சொல்கிறீர்கள். விகடன் இத்தனை சிரத்தை மேற்கொள்ளுமா என்பது கேள்விக்குறி. பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி எட்வின்
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
நன்றி சுரேஷ்
நன்றி MSA தம்பி