19 May 2008

போலி சாஃப்ட்வேரால் நஷ்டம் ரூ. 2 லட்சம் கோடி

போலி சாஃப்ட்வேரால் பிரபல நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 2 லட்சம் கோடி. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும்.
உலக அளவில் சாஃப்ட்வேர் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இதற்கு இணையாக அடோப் சிஸ்டம் இன்கார்பரேட் உள்ளிட்ட சில நிறுவனங்களும் உள்ளன.
இந்நிறுவனங்கள் பெரும் பொருட்செலவில், புதிது புதிதாக சாஃப்ட்வேரை உருவாக்குகின்றன. இந்நிறுவனங்கள் தயாரித்த சாஃப்ட்வேர் சந்தைக்கு விற்பனைக்கு வந்தவுடன் அவற்றை அப்படியே பதிவு செய்து போலி சாஃப்ட்வேர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
போலி சாஃப்ட்வேரை உருவாக்குவதையே சில நிறுவனங்கள் முழு நேர பணியாகக் கொண்டுள்ளன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எத்தகைய சாஃப்ட்வேரை தற்போது உருவாக்கி வருகிறது, அது எப்போது சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்ற விவரங்கள் அந்நிறுவன அதிபர் பில் கேட்ஸýக்கு அடுத்தபடியாக இந்த போலி சாஃப்ட்வேர் உருவாக்குவோருக்குத்தான் தெரிகிறது.
போலி சாஃப்ட்வேர் உருவாக்கம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பரவிக்கிடக்கிறது.
போலி சாஃப்ட்வேர் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால், அவற்றையே பொதுமக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுவோரும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே போலிகளின் விற்பனைக்கு எப்போதும் வரவேற்பு உள்ளது.
முன்னர் 3 சதவீதமாக இருந்த போலி சாஃப்ட்வேர் விற்பனை தற்போது 38 சதவீதமாக உயர்ந்திருப்பதே இதற்குச் சான்று.
இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா போன்ற நாடுகளில் போலி சாஃப்ட்வேர் விற்பனை 26 சதவீதமாக உள்ளது.
நிறுவனங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேரின் விற்பனைக்கு இந்த போலி சாஃப்ட்வேர் கடும் சவாலாக விளங்குகின்றன. மேலும் முதல் முதலில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் கூட இதுபோன்ற போலி சாஃப்ட்வேரை உபயோகப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது நிறுவன அதிபர்களை பெரும் கவலையடையச் செய்துள்ளது.
ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் போலி சாஃப்ட்வேர் விற்பனை 68 சதவீதத்துக்கும் அதிகமாகும். இதற்கு அடுத்தபடியாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் 65 சதவீதமாக உள்ளது. ஆசியாவில் இது 59 சதவீதமாகும்.
ஆர்மீனியா, அஜர்பெய்ஜான், வங்கதேசம் போன்ற நாடுகளில் போலி சாஃப்ட்வேர் விற்பனை 90 சதவீதமாகும்.

0 comments: