17 May 2008

கட்டிடதுறை மாணவர்கள் நிலநடுக்கம் குறித்த ஆய்வுகளில் ஈடுபடவேண்டும்!

''கல்லூரியில் படிக்கும் கட்டிடதுறை மாணவர்கள் நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்து வருமுன் காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என துபாய் கட்டிடகலை நிபுணர் செயிக்முகமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் கட்டிட பொருட்கள் அமைப்பு மற்றும் கட்டிட முறையின் புதிய தொழில்நுட்பம் பற்றிய சர்வதேச கருத்தரங்கு மூன்று நாட்கள் நடக்கிறது. இதன் துவக்கவிழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு வந்த அனைவரையும் மரு‌த்துவ‌ர் ஏ.எம்.நடராஜன் வரவேற்று பேசினார். மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி கட்டிடதுறை தலைவர் டாக்டர் என்.அருணாச்சலம் எடுத்துரைத்தார்.விழாவிற்கு கல்லூரியின் தாளாளரும் பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவருமான மரு‌த்துவ‌ர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டிடத்தையும், சீனா பெருஞ்சுவர் மற்றும் நீண்டபாலங்களில் கட்டிடதுறையின் சாதனைகளை பட்டியலிட்டார்.விழாவிற்கு துபாய் நாட்டின் கட்டிடகலை நிபுணர் செயிக்முகமது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்க உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகை‌யி‌ல், இந்தியாவின் பொருளாதாரம் 9 ‌விழு‌க்காடு கட்டிடதுறையில் வளர்கிறது. இந்தியாவில் கட்டிட பொருட்களில் 51 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இதில் 31 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உதவுவதாகவும் கூறினார்.ஒரு கட்டிடத்தின் தரம் அதன் அமைப்பில் இருப்பதாகவும் அதன் அமைப்பை கணி‌னி மூலம் துல்லியமாக அறிந்து செயல்படமுடியும் என்றார். மேலும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு ஆய்வு பணிகளை குறிப்பாக நிலநடுக்கம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருமுன்காக்க உதவவேண்டும் என்றார்.விழாவில் கல்லூரியின் கவர்னிங் கவுன்சில் உறுப்பினர் ரமணிசங்கர் பேசினார். முடிவில் கல்லூரி முதல்வர் மரு‌த்துவ‌ர் ஏ.சண்முகம் நன்றி கூறினார். விழாவில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் செயல்தலைவர் பி.தர்மலிங்கம், மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.எஸ்.குழந்தைசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

1 comments:

  • வடுவூர் குமார் says:
    8 June 2008 at 6:50 pm

    கட்டுமானத்துறையில் இன்னும் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.