22 May 2008

இனிமையான கனவுகள் காணுங்கள்

கனவுகள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு, பொழுதுபோக்குத் தொடர்பான கனவுகள் வரும். இளைஞர்களுக்கு தங்களுக்கு பிடித்தமானவர்களைப் பற்றிய கனவுகள் வரும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தைப் பற்றிய கனவுகள், தம்பதிகளுக்கு தங்களது பிள்ளைகளைப் பற்றிய கனவுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.




ஆனால் இதையெல்லாம் மீறி, உறக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தர‌ப்படு‌கி‌ன்றன.அதாவது மனிதனின் மூளையில் பதிவாகியிருக்கும் விஷயங்கள்தான் அவ்வப்போது அவனது உறக்கத்தில் வரும் கனவாகிறது என்கிறது அறிவியல்.ஒ‌வ்வொரு கனவு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பல‌ன் இரு‌க்‌கிறது. அதுவு‌ம் எந்தெந்த நேரத்தில் எந்த மாதிரியான கனவு கண்டாலும் அதற்கான ஒரு பலன் இருக்கிறது என்கிறது சாஸ்திரம்.



நள்ளிரவில் காணும் கனவு ஓராண்டுக்குள் பலிக்கும், விடியல் நேரத்தில் காணும் கனவு உடனே பலிக்கும், பகல் கனவு பலிக்காது என்றெல்லாம் வீட்டில் பெரியவர்கள் கூறிக் கேட்டிருக்கிறோம்.கனவில் விலங்குகளைப் பார்த்தால், தெய்வங்களைப் பார்த்தால், திருமணம் நடந்தால் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும் என்பதையும் பு‌த்தக‌ங்க‌ளி‌ல் படித்துள்ளோம். பொதுவாக கனவுகள் கருப்பு - வெள்ளைகளாகத்தான் இருக்கும். கண் பார்வை குறைபாடு இருப்பவர்களின் கனவுகளில் உருவங்கள் இருக்காது. அவர்களது கனவில் பேச்சுக் குரல் மட்டுமே இருக்கும்.‌ பூனைகளும் கனவு காண்பதாகக் கூறப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வருவதில்லை. கடைசியாக தூங்கச் செல்வதற்கு முன்பு நாம் எண்ணும் எண்ணங்கள் தான் பல சமயங்களில் கனவுகளாக வருகின்றன. நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை மனக் கண்ணில் பார்ப்பதே கனவு எனப்படுகிறது. நாம் காணும் அனைத்து கனவுகளும் நமது நினைவில் நிற்பதில்லை. புதிதாக நாம் செல்லும் ஓரிடத்தை ஏற்கனவே பார்த்ததுபோன்ற ஒரு எண்ணம் தோன்றும். அது கனவி‌ல் க‌ண்ட இடமாகவு‌ம் இருக்கலாம். ஒருவர் இறந்துப்போவது போன்று கனவு கண்டால் அவருக்கு ஆயுள் கெட்டி என்று எண்ணிக் கொள்ளலாம். உறங்கச் செல்வதற்கு முன்பு இனிமையான நிகழ்வுகளை அசைபோட்டபடி கடவுளை வணங்கிவிட்டு உறங்கச் செல்வதன் மூலம் இனிமையான கனவுகளை காணலாம். மன‌தி‌ற்கு‌ப் ‌பிடி‌த்தமான மெ‌ன்மையான பாட‌ல்களை‌க் கே‌ட்டபடியு‌ம் உற‌ங்க‌ச் செ‌ல்லலா‌ம். ந‌ல்ல உ‌ற‌க்கமு‌ம் வரு‌ம். அ‌தி‌ல் அருமையான கனவுகளு‌ம் வரு‌ம்.



இதுபோன்று கனவைப் பற்றி சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால் நீங்கள் படித்துமுடித்து உறங்கிவிட்டால் யார் பொறுப்பு.அதற்காக இத்துடன் முடித்து விடுகிறோம். கனவுகள் பற்றி நீங்கள் அறிந்த தகவல்களை அளிக்கலாம்.

0 comments: