18 May 2008

கோமாதா நம் குலமாதா!

  • பசு பிரசவிக்கும்போது கன்றின் தலைதான் முத லில் வரும். இந்த நிலையில், இரண்டு தலைகள் கொண்ட பசுவை பார்ப்பதுபோல் இருக்கும். அதாவது முன்பக்கமும், பின்பக்கமும் தலைகள் இருப்பது போல் காணலாம். பசு இப்படிக் காட்சி தருவதை 'உபயதோமுகி' என்பர். இந்தக் காட்சியை தரிசிப்பது பெரும் புண்ணியம். இந்த தருணத்தில், பசுவை வலம் வந்து வணங்கினால் நமது சகல பாவங்களும் நீங்குவதுடன், ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள சகல தேவதைகளையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
  • கன்றுக்கு பால் இல்லாமல், பசுவிடம் இருந்து பால் முழுவதையும் கறந்து விடுபவன், நரகத்தை அடைந்து வேதனையுறுவான். தவிர, மறுபிறவியிலும் மனிதனாகவே பிறந்து, பட்டினியுடனும் நீர் அருந்தவும் முடியாத நோயாளியாகவும் கிடந்து துன்பப்படுவான்.
  • நெற்றியில் குங்குமப் பொட்டு அளவுக்கு சுழியுடன் திகழும் பசுக்கள் வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம். அந்த வீட்டில் திருமணம், பிரசவம் போன்ற சுப காரியங்கள் அடிக்கடி நடைபெறும்.
  • கிராமப் பகுதிகளில் பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம். பசுக்களுடன் ஓர் ஆசாமியும் உடன் செல்வான். ஆடி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில்... மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் பசுக்களில், சிவப்பு நிற பசு ஒன்று முதலில் ஓடி வந்து தொழுவத்தில் நுழைந்தால் அந்த வருடம் அதிகம் மழை பொழியும் என்பது ஐதீகம்.
  • வீட்டில் பசு இருப்பதால், ஐஸ்வர்யம் பெருகும். பசு மாட்டை விற்பதாக இருந்தால், அதை, கட்டி இருக்கும் தாம்புக் கயிற்றுடன் கொடுக்கக் கூடாது. கயிறை நாம் வைத்துக் கொண்டு பசுவை மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், வேறு பசுக்கள் உடனடியாக நம் இல்லம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

--
நன்றி விகடன்.

0 comments: