17 May 2008

ஹாய் மதன்

உங்களுக்கு ஏன் 'ஏ' ஜோக்ஸ் அவ்வளவா வர மாட்டேங்குது?!
நிறைய ஜோக் தெரியும். ஆனா அதையெல்லாம் எழுதலாமா, கூடாதானு ரொம்பக் கவலை வந்துடுதுங்க! பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நிகோலஸ் லாங்வொர்த் ஒரு பதில் சொன்னாரு. கொஞ்சம் 'ஏ'தான்! ஆனா, 'அடேங்கப்பா'னு சொல்ல வெச்ச பதில்!
கிளப்ல அவர் உட்கார்ந்திருந்தாரு! அவரைத் தாண்டிப் போன நண்பர் ஒருவர், செம வழுக்கையான சபாநாயகரோட தலையைத் தடவிக் கொடுத்துட்டுக் கிண்டலா, 'அப்படியே என் பொஞ்சாதியோட பின்பக்கம் போலவே இருக்கு!'ன்னாரு. சபாநாயகரும் உடனே தன் தலையை ஒருமுறை தடவிப் பார்த்துட்டு, 'அட... ஆமாம்!'னாரு!

ஆசிரமங்களில் வசிக்கும் துறவிகள் ஃபேன், ஏர்கண்டிஷனர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது உண்டா?
ஃபேன், ஏர்கண்டிஷனர் மட்டுமல்ல... டி.வி.டி., பிளாஸ்மா டி.வி, சுழல் நீர் (ஜக்கூஸி) வசதியுள்ள சொகுசு குளியல் தொட்டி, லேட்டஸ்ட் நீலப்படங்கள், ஆளுயர (காற்றால் ஊதும்?) Inflatalk பெண் பொம்மைகள், சல்லாபத்துக்கு இளம் பெண் கள், பையன்கள் வைப்ரேட்டர்ஸ், இம்போர்ட்டட் மது, சுருட்டுகள், கஞ்சா, அபின், மூக்குப்பொடி இன் னும் பல 'உபகரணங்கள்'கூடசில ஆசிரமங்களில் இருந்தாலும் ஆச்சர்யமில்லை! உங்கள்கேள்வி யில் ஒரே ஒரு தப்பு துறவிகள் என்கிற வார்த்தை மட்டும்தான்!

கோடை வெப்பத்தைத் தவிர்க்க நல்ல ஆலோசனை சொல்லுங்களேன்?
கொதிக்கும் பாய்லர் அருகில் கொஞ்சநேரம் நின்றுவிட்டுப் பிறகு தெருவில் நடக்கவும்!

உலக அதிசயங்களில் தங்களை மிகவும் கவர்ந்தது..?
பெண் என்கிற இனம். ஏனென்றால்... அவள்தான் மனித குலம்தழைக்க எவ்வளவு உபயோகமாக இருக்கிறாள்! (உலக ஏழு அதிசயங்கள் என்று நீங்கள் குறிப்பிடவில்லை!)

--
நன்றி விகடன்

0 comments: