30 May 2008

டொமைனை வைத்து விளையாடும் ஏமாற்றுப் பேர்வழிகள்

அமிதாப்பச்சன் துவங்கியுள்ள இணையதளத்தின் பெயர் அபிதாப்பச்சன்.காம் என்று நினைத்திருந்தீர்கள் என்றால் அது தவறு. அல்லது அமிதாப்பச்சன்.இன் என்றோ அல்லது அமிதாப்பச்சன்.நெட் என்றோ நினைத்திருந்தாலும் தவறுதான். ஏனெனில் இந்த முகவரிகள் வேறு ஒருவரால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே.

சல்மான்கான், ரஜினிகாந்‌த், க‌‌‌ரீனா கபூர், ஹிருதிக் ரோஷன் ஆகியோருக்கு தங்கள் சொந்த டொமைன் பெயரில் இணையங்கள் இல்லை. ஆன் லைன் பிராண்ட் குறித்து சிந்திக்கையில் இவர்கள் போன்ற பிரபலமானவர்கள் மட்டுமல்ல, முதன்மை நிறுவனங்களான டாடா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்து நாளிதழ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகியோரது டொமைன் பெயர்களும் சந்தர்ப்பவாத ஏமாற்றுபேர்வழிகளால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது ஆன் லைன் முகவரி அடையாளத்தை திரும்பப் பெற கடுமையான நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டிவரும் என்பதுதான் தற்போதைய நிலவரம்.

அதாவது தங்களுக்கு வணிகமுத்திரை உரிமைகள் இல்லாத பெயர்களில் இணையதள முகவரிகளை பதிவு செய்யும் ஏமாற்றுக்காரர்களின் வேலைதான் இது. அதாவது இதுபோன்ற பிரபலங்களில் பெயர்களில் இணையதளம் உருவாக்கி அதன் மூலம் விளம்பர வருவாய் ஈட்டுவது, அல்லது பிற்காலத்தில் இந்த டொமைன் பெயர்களை கடுமையான விலைக்கு விற்று பணம் செய்வது இதுவே இவர்களது பல குறிக்கோள்களில் முதன்மையானது.

மேலும் மோசமான கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் ஆபாச நடவடிக்கைகளுக்கும் கூட இந்த முகவரிகளை பயன்படுத்தலாம். அதாவது கடவுச் சொல்லைதிருடி வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியாகக் கூட இவை நடைபெறலாம்.

இந்திய ஸ்டேட் வங்கி இவர்களிடமிருந்து முதல் பாடத்தை கற்றுள்ளது. அதாவது ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஒருவர் எஸ்பிஐகார்ட்ஸ்.காம் என்ற போலி இணைய தளத்தை துவங்கினார். அதாவது அதனை உண்மையான எஸ்.பி.ஐ. இணையம் போலவே வடிவமைத்தார். இதனால் மிகப்பெரிய நிறுவனங்களும் கூட ஏமாந்து விளம்பரங்களை அதில் கொடுத்துள்ளன. உதாரணமாக சேஸ் மான்ஹாட்டன் வங்கி இந்த இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளது.
இன்னொரு வழியையும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இது "டைபோ ஸ்க்வாட்டிங்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது உதரணமாக ஹூண்டாய், பெப்சி, அல்லது கோககோலா ஆகிய பெயர்களில் உள்ள ஸ்பெல்லிங்கை சற்றே சிதைத்து அல்லது மாற்றி டொமைன் பெயர்களை பதிவு செய்வது. இதன் மூலம் ஒரு கிளிக்கிற்கு இவ்வளவு தொகை என்று விளம்பர வருவாய் ஈட்டலாம்.

இதில் குறிப்பாக மிகவும் பிரபலமடைந்துள்ள டொமைன் பெயர்களில் டாட் காம், டாட் நெட் போன்று டாட் சிஎம் என்ற ஒன்று உள்ளது. இது கேமரூனுக்கு உரித்தான டொமைன் பெயர், சைபர் ஸ்க்வாட்டிங்கிற்கும் பெயர் போனது. உதாரணமாக கூகுள்.சிஎம் என்று அடித்தால் ஏகப்பட்ட மோசடி இணைப்புகளுக்கு அது இட்டுச் செல்லும். ஆனால் சில கம்பெனிகள் சாமர்த்தியமாக தங்கள் டொமைன் பெயர்களிலேயே சிஎம் என்பதனை சேர்த்து அந்த இணைப்புகளிலிருந்து தங்கள் நிறுவனத்தின் அசல் இணையதளத்திற்கு இட்டுச் செல்லுமாறு செய்துள்ளனர்.

இதனை தடுக்க வியாபார நிறுவனங்கள் அந்த நாட்டிற்குறிய டொமைன் பெயரை தேர்ந்தெடுக்கவும். அதாவது இந்தியாவிற்கு டாட் இன் என்று பதிவு செய்யவேண்டும். ஆனால் நிறைய பன்னாட்டு நிறுவனங்கள் இதனை செய்ய தவறி விடுகின்றன. இந்தியாவில் வர்த்தகம் புரியவேண்டும் எனும்போது மட்டும் இதனை யோசிக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய இணையதளம் துவங்கும்போது அந்த பெயரில் ஏற்கனவே சைபர் ஸ்க்வாட்டர் ஒருவர் டொமைன் பெயரை பதிவு செய்திருப்பார். உதாரணமாக பிரபல வெப் 2.0 வலைப்பதிவுத் தளமான டெக்கிரன்ச் நிறுவனத்தின் இந்திய முகவரி கொண்ட டெக் கிரன்ச்.இன் என்பது சென்னையில் உள்ள மென்பொருள் துறைச் சேர்ந்த ஒருவருடையது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதனை தடுக்க சில ஆன் லைன் சேவை நிறுவனங்கள் உள்ளன. உதாரணமாக சிட்டிசன் ஹாக்.காம் உங்களுக்கு தேவையான டொமைன் பெயரின் ஸ்பெல்லிங்கை சிதைத்து உங்களுக்காக இணையதளத்தை பதிவு செய்ய உதவி புரிகிறது. அல்லது இந்த பெயர் ஏற்கனவே ஸ்காவாட்டர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால், உங்கள் முகவரியை சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலம் மீட்டுக் கொடுக்கிறது. இது சிறந்த போர்த் தந்திரம் என்றாலும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதுதானே.

9 comments:

  • butterfly Surya says:
    20 April 2009 at 5:42 pm

    அருமை.

    வாழ்த்துகள்.

  • KRICONS says:
    20 April 2009 at 11:24 pm

    நன்றி வண்ணத்துபூச்சியார்

  • This comment has been removed by the author.
    KRICONS says:
    20 April 2009 at 11:24 pm

    This comment has been removed by the author.

  • கார்த்திகேயன் says:
    23 April 2009 at 6:02 am

    //அதாவது இதுபோன்ற பிரபலங்களில் பெயர்களில் இணையதளம் உருவாக்கி அதன் மூலம் விளம்பர வருவாய் ஈட்டுவது, அல்லது பிற்காலத்தில் இந்த டொமைன் பெயர்களை கடுமையான விலைக்கு விற்று பணம் செய்வது இதுவே இவர்களது பல குறிக்கோள்களில் முதன்மையானது.//

    டொமைன் பதிவு செய்வதை குற்றம் சொல்லாதீர்கள் அப்படி பார்த்தால் எல்லோரும் இணையத்தில் சம்பாதிக்க ஆசைபடுகிறார்கள் நீங்கள் கூட ஏதோ விளம்பரம் போட்டுள்ளீர்கள். அதே போல் தான் அதுவும் பலர் Domain parking செய்து விடுவார்கள் Google நிறுவனம் கூட உங்களிடம் இருக்கும் டொமைன்களை Adsense Domain parkingல் இனைத்து பணம் சம்பாதிக்கலாம். அதற்காக Google ஏமாற்று வேலைக்கு துணை போகிறது என்று கூறுவீர்களா?

  • KRICONS says:
    23 April 2009 at 10:56 am

    நன்றி கார்த்திகேயன்

  • Tech Shankar says:
    23 April 2009 at 9:45 pm

    http://www.whitehouse.com னு ஒன்னு இருந்தது. இப்போ இல்லை. அதைப்பத்தி ஒன்னும் சொல்லலையே நீங்க.. விக்கிபீடியால போகி தேடிப்பாருங்க

    //ஆகியோரது டொமைன் பெயர்களும் சந்தர்ப்பவாத ஏமாற்றுபேர்வழிகளால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Tech Shankar says:
    23 April 2009 at 9:48 pm

    இதுக்குப் பேர் டொமைன் பார்க்கிங் சார். அதுபத்தி about.com ல படிச்சுப்பாருங்க


    //இந்திய ஸ்டேட் வங்கி இவர்களிடமிருந்து முதல் பாடத்தை கற்றுள்ளது. அதாவது ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஒருவர் எஸ்பிஐகார்ட்ஸ்.காம் என்ற போலி இணைய தளத்தை துவங்கினார். அதாவது அதனை உண்மையான எஸ்.பி.ஐ. இணையம் போலவே வடிவமைத்தார். இதனால் மிகப்பெரிய நிறுவனங்களும் கூட ஏமாந்து விளம்பரங்களை அதில் கொடுத்துள்ளன. உதாரணமாக சேஸ் மான்ஹாட்டன் வங்கி இந்த இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளது.

  • KRICONS says:
    24 April 2009 at 12:06 am

    உங்கள் தகவலுக்கு நன்றி தமிழ்நெஞ்சம்

  • நல்ல ஐடியாவா இருக்கே தல..,

    நம்ம ஊர்ல ஒரே பேர நிறையப் படங்களுக்கு வெச்சுக்கறமாதிரி இருந்தாலும் தேடல் கொடுக்கும்போது குழப்பம்தான் வரும்..,