இப்போது பைக் பிரியர்கள் எங்கே சந்தித்து கொண்டாலும் முதலில் பேசுவது... யமஹா ஆர்15 பைக் பற்றித்தான். இளைஞர்களின் உற்சாகத்துக்கு மேலும் பலம் சேர்ப்பது போல, யமஹா நிறுவனம் சென்னையில் இந்த புதிய ஆர்15 பைக்கை காட்சிக்குவைத்திருக்கிறது. இந்தக் கனவு பைக்கில் 'அட' போட வைக்கும் சமாசாரங்கள் ஏராளம்!
சென்னையில் இருக்கும் யமஹா டீலர்கள் அத்தனை பேரும், இந்தக் கனவு
பைக்குக்கான முன்பதிவை ஆரம்பித்துவிட்டதை அடுத்து, ஷோரூம்களில் செம கூட்டம்!
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், வாகனத்தின் பவர் என்னவென்று தெரியாது. விலை எவ்வளவு எனத் தெரியாது. எப்போது விற்பனைக்கு வரும் என்றுகூட யாருக்கும் தெரியாது! இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க, களத்தில் இறங்கிச் சேகரித்த தகவல்கள் இதோ...
ஏரோடைனமிக் டிசைன், கிளிப் ஆன் ஹேண்டில்பார், ஸ்போர்ட்ஸ் பைக் ஃபேரிங், 150சிசி பைக்குகளில் முதன்முறையாக 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், பின்பக்கமும் டிஸ்க் பிரேக், ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், ஆயில் கூல்டு இன்ஜின் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது, இந்த யமஹா ஆர்15. இவ்வளவு வசதிகள் இருப்பதால், இதன் விலை சென்னையில் ஒரு லட்ச ரூபாய் என்று யமஹா தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன.
சென்னையில் இந்த ஜூன் மாதம் 14-ம் தேதி முதல் யமஹா ஆர்15 விற்பனைக்குக் கிடைக்கும். 'இந்த பைக்கின் சக்தி என்ன என்பதை இடியே விழுந்தாலும் இப்போதைக்குச் சொல்ல மாட்டோம்' என அடம்பிடிக்கிறார்கள் யமஹா நிறுவனத்தினர். இதன் சக்தி 20 - 22 bhp இருக்கும் என வெளியே பேச்சுகள் இருந்தாலும், நமக்குக் கிடைத்த தகவலின்படி இதன் சக்தி 16 bhp இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த பைக்கின் வருகையால், டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி 160 எஃப்ஐ பைக்கை விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த பைக்குடன் போட்டிபோடுவதற்காக பஜாஜ் நிறுவனமும் பல அதிரடித் திட்டங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறது!
நன்றி, விகடன்.
Dear friend,
Instead of copy pasting the entire stuff from vikatan.com, please provide a link to vikatan.com in ur blog and tell the steps to subscribe. :) Please write something urself. That will definitely guarantee more visitors to ur blog.
Im a subscriber of vikatan.com, if i need to visit ur blof u need to provide something new in ur blog. If u provide the samething available in vikatan.com then no vikatan subscribers will come to ur blog. :)
Please consider this in the future.
.. Ananth, Bangalore
உங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி ஆனந்த்... நான் விகடனில் உள்ளவைகளை மட்டும் எனது Blogல் பதிவு செய்யவில்லை... மதுரைக்காரங்க எல்லாரும் மறக்காம படிங்க...
ஆன்லைன் மோசடி ஒரு அனுபவம் போன்ற சில பதிவுகளையும் எழுதியுள்ளேன்... இருந்தாலும் நம்மை போன்றவர்களை தவிர பலரும் படித்து பயன் அடையவே சில பதிவுகளை விகடனில் இருந்து எடுத்துள்ளேன்... விரைவில் உங்கள் விருப்பத்தையும் நிரைவேற்ற முயற்சி செய்கிறேன்.
I think u r violating the copyrights of vikatan.com, if u read the copyright information in the vikatan.com u will understand copying from the site and publishing in some other site is illegal. To avoid any kind of legal hurdles its better for u to write everything on ur own. Maybe u can take only the titles from vikatan.com if u r lack of titles and write the contents on ur own.. :)
.. Ananth, Bangalore